அதிமுக எம்எல்ஏக்கள் எங்கே? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Must read

சென்னை,

திமுக எம்எல்ஏக்கள் எங்கே? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் காணவில்லை. அவர்கள் எங்கே உள்ளனர் என தெரியவில்லை என சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதாவை மீட்கக் கோரி அவரது உறவினர் பீரித்தா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல்  காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள 131 எம்.எல்.ஏக்களை மீட்க வேண்டும் எனக் கூறி டிராபிக் ராமசாமி போன்றோரும்  ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் அவர்களுக்கு உணவு தராமல் அடைத்து வைத்திருப்பதாகவும்  மனுவில் கூறப்பட்டுள்ளது.

நேற்றைய விசாரணையின்போது, அரசு வக்கீல், எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை  அரசு எம்எல்ஏ விடுதியில் உள்ளதாக கூறினார்.

ஆனால், அவரது கூற்று பொய் என்றும், எம்எல்ஏக்கள் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டுள்ள தாக அனைத்து மீடியாக்களும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மனுக்களை நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் மதிவாணன் விசாரித்தனர்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 131 எம்.எல்.ஏக்களும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள தாகவும், அவர்களை மீட்க காஞ்சிபுரம் எஸ்.பிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

131 பேரில் 20 பேர் உணவு, நீர் உட்கொள்ளாமல் மறுத்து வருவதாகவும் வாதிட்டனர்.

அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், அதிமுக எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல்துறையில் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும்  நேற்று  தவறான தகவல் கொடுத்ததற்காக மன்னிப்பு கோரினார்.

இதனை அடுத்து தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் அளிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல், எம்எல்ஏக்கள் அரசு விடுதியில் இருப்பதாக கூறியது  தவறு என்று நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார்.

More articles

Latest article