பிரபாகரன் உடலைப் பார்த்து நானும் பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம்: ராகுல்

வதோரா:

பிரபாகரன் உடலைப் பார்த்து தானும் பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ராகுல் – பிரபாகரன் சடலம்

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினர்.  கூட்டத்தில்  பங்கேற்றவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.

அப்போது அவர், “ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில், மோடி தலைமையிலான மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. தினமும் சுமார் 30,000 இளைஞர்கள் படித்து முடித்து வேலைக்கு வருகிறார்கள்.  ஆனால் மத்திய அரசால் 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முடிகிறது.

அதே நேரம் சீனாவில் நாளொன்றுக்கு 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர்  தெரிவித்தார்.

மேலும்  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “பிரபாகரனின் உடலைப் நான மிகவும்ம வேதனை அடைந்தேன்.  இதுபற்றி, எனது சகோதரி பிரியங்காவிடம் பேசியபோது, அவரும் அதே மனநிலையில் இருந்ததாக தெரிவித்தார்.

மற்றவர்களது துயரங்களில் பங்குகொள்வதுதான், காந்தி குடும்பத்தின் பாரம்பரியம்” என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
English Summary
When me and priyanka saw Prabhakaran's body we felt bad. Rahul Ganthi