திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும்: ஸ்டாலின்

Must read

தர்மபுரி:

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

“தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்” என்ற தலைப்பில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கிராம சபை கூட்டம், ஜனவரி  9ந்தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின்  பிரச்சினைகளை கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செட்ரப்பட்டியில் தி.மு.க. சார்பில்  கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலரிடம் குறைகளை கேட்டார்.

அப்போது அவரிடம்  அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள்பல கோரிக்கைகளை நேரடியாக தெரிவித்தனர்.

குறிப்பாக,  அரூர் அருகே உள்ள செட்டிப்பட்டி சமத்துவபுரத்தில் மயானம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேம், விவசாயிகள் கடன்களை தீர்க்க வேண்டும் என்றும்,  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நிதி உதவி அளிக்க வகை செய்ய வேண்டும் என்று கூறினார்.

மற்றும் பலர் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியிறுத்தினார். மற்றொரு தரப்பினர்,  பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் தேவைக்கேற்ப காலை நேரத்தில் பஸ் போக்குவரத்து வசதி செய்து தரும் கோரிக்கை விடுத்னர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள்,  ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்க ளுக்கும், பி.எட். படித்து முடித்தவர்களுக்கும் தகுதியான ஆசிரியர் வேலை ஒதுக்கவில்லை. ஆகையால் நீங்கள் முதல்வரானதுரும், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பி.எட். முடித்தவர்களுக்கும் வேலை பெற வழிவகை செய்ய வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

பொதுமக்களின் கோரிக்கைகளை அனைத்தும் உன்னிப்பாக கேட்ட ஸ்டாலின், தற்போது இருக்கும்   ஆட்சியை நீக்கிவிட்டு தான் முதல்வரான பிறகு கிராம மக்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்று உறுதி அளித்தார்.

மேலும், தான், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நான் இங்கு நடை பெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டேன் என்பதை நினைவு படுத்தியவர்,  தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் தான் நிறைவேற்றினோம் என்றும் தெரிவித்தார்.

ஆனால்,  தாங்கள் தான் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனை தீர்த்து வைத்ததாக அ.தி.மு.க.வினர்  கூறி வருகின்றனர். ஆனால், இந்த செயல்முறைக்கு தீர்வு காண ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தது திமுக தான் என்று கூறினார்.

மேலும், தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளது என்று தெரிவித்தவர்,  இதுகுறித்து தான் முதல்வரானதும் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றார். அல்லது மத்தியில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் அரசின் மூலம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மை உலகுக்கு தெரியப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

More articles

Latest article