கட்டுரையாளர்எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

மமுக-வின் TTV தினகரன், RK நகர் இடைத்தேர்தல் வெற்றிமூலமாக, அவர் ஒரு தேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் என்பதை தமிழத்தில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், 2021 தேர்தலில் தான் நிற்பதற்கு, கோவில்பட்டியை தேர்ந்துஎடுத்ததிலிலிருந்து அவருடைய தேர்தல் வியூகங்களின் ஆளுமை தெரிகிறது. இந்த தேர்தல் வியூகங்கள் தனிப்பட்டதா அல்லது அரசியல் காலத்திற்கும் பொருந்துமா என்பதை அவருடைய அடுத்து வரும் அரசியல் நகர்வுகள் நிரூபிக்கும்.

சசிகலா மற்றும் தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னான காலகட்டத்தில் ஆட்சியை கைப்பற்றுவதில் அதீத ஆர்வம் காட்டினார்கள். மாறாக, ஆட்சியை இழந்தேனும் கட்சியை கைப்பற்றும் நகர்வுகளை செய்திருந்தால், கட்சியும் ஆட்சியும் அவர்களுடையதாயிருக்கும். அது அவர்களுடைய அரசியல் பிழை.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவர்கள் ஆட்சியை பிடிக்கபோவிதில்லை என்பது நாடறிந்த உண்மை. அவர்களுடைய வேலைத்திட்டமெல்லாம், தேர்தலுக்கு பின்னான காலகட்டத்தில் அதிமுகவை கைப்பற்றுவதுதான். அதற்கு, அவர்கள் அதிமுகவின் வெற்றியை மட்டுப்படுத்தவேண்டும். அதிமுக 20 -கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வேண்டும்.

இன்றய சூழ்நிலையில், அதிமுகவின் வெற்றி வாய்ப்பும் அதனைவிட குறைவே. அதே வேளையில், அமமுக-வும் அதற்கு குறைவில்லாத வெற்றியை ஈட்டவேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் பரவலாக அதிமுகவிற்கு இணையான வாக்குகளையோ அல்லது அதற்கு மேலான வாக்குகளையோ பெறவேண்டும்.

அதிமுகவின், வேட்பாளர் தேர்வில் உள்ள குளறுபடியால், அநேக தொகுதிகளில் உட்கட்சி சதிகள் நடந்தேறும்.அதுவே, அவர்களுடைய வெற்றியை பாதிக்கும். மேலும், அதிமுகவின் மாஜிகள் மற்றும் பழம்பெரும் தலைவர்களுக்கு தேர்தலில் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு என்பது, MGR மறைவுக்கு பின்னான காலகட்டத்தில், ஜானகி அணியினர் செய்தே அதேஅணுகுமுறையானது.

பிரபலங்களை நிறுத்தினால் வாக்குகள் கிட்டும் என்ற அணுகுமுறையே அது. மாறாக, ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளர்கள் பலரும் புதியவர்கள். சரித்திரம், எது சரியான முடிவு என்பதை நிரூபித்தது. PH பாண்டியனை தவிர அனைத்து பிரபலங்களும், ஜானகி அணியில் தோற்றனர்.

இத்தேர்தலிலும், அதிமுகவிற்கு அதே நிலை ஏற்படுவதுற்கு தான், அதிக வாய்ப்பிருக்கிறது. இச்சூழலில், அமமுக மற்றும் தேதிமுக கூட்டணி என்பது இருவரது அரசியல் எதிர்காலத்திற்கும் அவசியமானதாகும். சமரசங்கள் நிறைந்த அரசியல் வாழ்வில், சில முடிவுகள், எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும்.

தினகரனின் சில முடிவுகள், தேர்தலுக்கு பின்னான சூடு பறக்கும் அரசியல் களத்திற்கான அடித்தளமாகும். இத்தேர்தல், மொத்தத்தில் தமிழக ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதை விட, அதிமுகவை யார் கைப்பற்றுவார்கள் என்ற கேள்விக்கான, விடையாகவே இருக்கும். தினகரனின் நகர்வுகள் அதை நோக்கியே இருக்கும். தினகரனின் திட்டம் பலிக்குமா ?

காலம் தான் விடையளிக்கும் !