சென்னை:  தமிழ்நாட்டில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 6வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,  மாணவ மாணவிகள் உயர்கல்வி படிக்க ஏதுவாக, அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதையடுத்து கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு  இன்று முதல் (மே 6ந்தேதி) முதல் ஜூன் 6ந்தேதி வரை  ஆன்லைன் வழியில் விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 460 க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் உள்ள 1.5 லட்ச இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன.  அதைத்தொடர்ந்து,  நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி உள்ளது.

மாணவ, மாணவிகள்  www.tneaonline.org, www.tndte.gov.in ஆன்லைன் இணையதளம் வாயிலாக  விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பதிவு  இன்று (06-05-24)  தொடங்கி உள்ளது.

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் 06-06-24 (ஜுன் 6ந்தேதி) என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு மாத காலம்,  விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய ஜூன் 12ந்தேதி கடைசி நாள்.

அதைத்தொடர்ந்து, ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) ஒதுக்கப்படும் . அதுவும் ஜூன் 12ந்தேதி  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேவை மையம் வாயிலாக சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி ஜூன் 13ந்தேதி முதல் 30ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து,  ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

தொடர்ந்து சேவை மையம் வாயிலாக விண்ணப்பதிவில் ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்த செய்ய ஜூலை 11ந்தேதி முதல் 20ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படகிறத.

அதன்பிறகு, கலந்தாய்வு குறித்த தேதிகள் அறிவிக்கப்படும்.

இந்த விண்ணப்பதிற்கான கட்டணம்,  ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ 500, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ 250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது: இன்றுமுதல் பொறியியல், கலைஅறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்…