சென்னை: மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? என்று தமிழகஅரசு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுபோல, தமிழக அரசும், மக்கள் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
அர்ஜுன் இளையராஜா என்பவர் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிற்து. இன்றைய விசாணையின்போது, தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், மாணவர்கள் ஒருமொழியை கூடுதலாக தெரிந்துகொள்வது நல்லது தான் என்று தெரிவித்தனர்.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தை தவிர, வேறு 2 மாநிலங்கள் இந்த கொளகையை அமல்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியதுடுன், இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் அரசு அமல்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் இந்தியை கற்றுக் கொள்ள யாருக்கும் தடை விதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மக்கள் நலன் கருதி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது என்றதுடன், 3ஆவது ஒரு மொழியை கற்பதில் என்ன பிரச்சினை என்றும், மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? என்று கேள்விகளை எழுப்பியதுடனி, இது தொடர்பாக விரிவான பதில்மனுவை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.