டில்லி:

ரூ. 5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக் வரி விதிக்க கூடாது என்று பட்ஜெட் குறித்து பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

 

ஆயுர்வேதா, தொழில், அரசியல், விவசாயம் என பலதுறை வித்தகராக விளங்கும் பாபா ராம்தேவ் ஏபிபி செய்தி தொலைக்காட்சியில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,‘‘ ரூ. 5 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு வரி எதுவும் பிடித்தம் செய்யக் கூடாது. ரூ. 40 முதல் ரூ. 45 ஆயிரத்தில் வாழ்க்கை நடத்துவது மிகவும் கடினம். விவசாயிகளுக்கு பிரதமர் மோடி இந்த முறை ஏதேனும் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மோடி எப்போதும் கீழ்தட்டு மக்களின் மேம்பாடு குறித்து தான் பேசி வருகிறார்.

அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பயன் பெறுவார்கள். கல்வியும், மருத்துவமும் இலவசமாக அளிக்க வேண்டும். நடுத்தர மக்களை பாதிக்கும் இதை நோக்கி மோடி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். நடுத்தர மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேலும் பல திட்டங்கள் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.