டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளி யிட்டது. அதில், அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்து வருகிறது.

தேர்தல் அறிக்கையில் நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரம் ஏற்றம் பெற பல்வேறு புதிய அறிவிப்புகள், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை உறுதியளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நாட்டு மக்களின் சுகாதாரம், கல்வி குறித்து பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்வி சம்பந்தமாக காங்கிரஸ் வழங்கிஉள்ள என்ன வாக்குறுதிகள் என்ன?

கல்வி மற்றும் சுகாதாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டியதின் அவசியத்தை நாங்கள் உணர்கிறோம்.

சுகாதாரம் மற்றும் கல்வியின் செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத் தில் இருந்து 6 சதவிகிதமாக 2023-2024 க்குள் இரட்டிக்கப்படும்.

சுகாதார உரிமைச்சட்டம் இயற்றப்படும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார வசதிகளுக்கானஉத்தரவாதம் இதில் அடங்கும்.

இலவச உடல் பரிசோதனை

வெளி நோயாளிகளின் கவனிப்பு

மருந்துகள்மற்றும் சிகிச்சைகள்

அரசு மற்றும் குறிப்பிட்டதனியார் மருத்துவமனைகள்மூலம் இலவசமாகவழங்கப்படும்.

அவசரசிகிச்சை மையங்கள்எல்லா தேசியமற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நிறுவப்படும்.

தேசியமனநல சுகாதாரக் கொள்கை 2014 மற்றும் மனநல சுகாதாரச் சட்டம் , 2017 நடைமுறைப் படுத்தப்படும் என்றுகாங்கிரஸ் வாக்களிக்கிறது.

1ம் வகுப்பு முதல் 12.ம் வகுப்பு வரைமாணவர்களுக்கு கல்விக் கட்டாயமாக்கப்பட்டு அரசு பள்ளிகளில் இலவசமாகவழங்கப்படும்.

காங்கிரஸ்மாணவர்களுக்கான முன்னர் அளித்த கல்வி உதவித் தொகைகள் அதிகரிக்கப்படும்.

நடுத்தர மக்களுக்கு காங்கிரஸ் என்னென்ன வாக்குறுதிகளை அளிக்கிறது?

நடுத்தர வர்க்கம் அரசுடன் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் பற்றிய கலந்துரை யாடல்களை இலகுவாக அமைக்க சமூகப்பணியாளர்கள் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர்புறங்களில் நியமிக்கப்படுவார்கள்.

கூடுதலாகநாங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் விரிவாககவனம் செலுத்துவோம்.

தொழில் முயற்சிக்கான எங்கள் ஆதரவு இன்னும் பல தொழில் முனைவோர்களை உருவாக்கும்.

காற்று மாசுபாடு என்பது பொது தேசிய சுகாதார நெருக்கடி , அதைப்போக்க அத்துனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.