டில்லி

பான் அட்டை எனப்படும்  வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை தெரிவிக்கும் செய்திகள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

நம்மில் பலருக்கு பான் கார்ட் எண்ணை மனப்பாடமாகச் சொல்லத் தெரியும்.   ஆனால் அந்த பத்து இலக்க எண் தெரிவிக்கும் விவரங்கள் பற்றி பலருக்கு தெரியாது.  இந்த பான் அட்டை வைத்திருப்பவர் பற்றிய  பல முக்கிய விவரங்களை இந்த எண் மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.   இந்த எண்ணை வருமான வரித்துறை அளிப்பதற்கு ஒரு சிறப்பு முறையைக் கையாள்கிறது.

கணினி மூலம் அளிக்கப்படும் இந்த எண்ணில் எழுத்து மற்றும் எண்ணைக் கொண்ட பத்து இலக்கம் இருக்கும்.  முதல் ஐந்து இலக்கங்கள் எழுத்துக்களாகவே இருக்கும்.   அதன் பிறகு நான்கு எண்களும் மீண்டும் ஒரு எழுத்துடனும் இருக்கும்.

உங்கள் பான் எண்ணில் ஓ என்னும் ஆங்கில எழுத்து மற்றும் சைபர் என்னும் எண் ஆகியவை மூலம் குழப்பம் வராமல் இருக்க இந்த முறை பின்பற்றபடுகிறது.   இதில் நான்காவது எழுத்து நீங்கள் வரி செலுத்தும் பிரிவைக் குறிக்கும்.

ஆங்கில எழுத்தான P என்பது தனிப்பட்டவர் ஆகும்.

ஆங்கில எழுத்தான Cஎன்பது நிறுவனம் ஆகும்.

ஆங்கில எழுத்தான H என்பது இந்து பிரிக்கப்படாத குடும்பம் ஆகும்.

ஆங்கில எழுத்தான A என்பது பலர் சேர்ந்த சங்கம் ஆகும்.

ஆங்கில எழுத்தான B என்பது தனிப்பட்ட அமைப்பு ஆகும்.

ஆங்கில எழுத்தான G என்பது அரசு பிரிவு ஆகும்.

ஆங்கில எழுத்தான L என்பது உள்ளூர் நிர்வாகத்துறை ஆகும்.

ஆங்கில எழுத்தான J என்பது சட்டத்துறை நபர் ஆகும்.

ஆங்கில எழுத்தான F என்பது பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனம் ஆகும்.

ஆங்கில எழுத்தான T என்பது சேமநிதி நிறுவனம் ஆகும்.

ஐந்தாம் இலக்கம் உங்களுடைய சர் நேமின் முதல் எழுத்து ஆகும்.  உதாரணமாக உங்கள் சர் நேம் சிங் என இருந்தால் அது ஆங்கில எழுத்து எஸ் ஆக இருக்கும். அடுத்த நான்கு இலக்க எண்கள் கணினியா 0001 முதல் 9999 வரை ஒதுக்கப்படும் எண் ஆகும்.

கடைசி இலக்கம் எழுத்தாக இருக்கும்.

இவ்வாறு பான் எண் தரும் தகவல்கள் குறித்து அறிவதன் மூலம் உங்கள் பான் எண்ணை எளிதாக நினைவில் வைத்திருக்க முடியும்.