வரும் கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் மாறும் வகுப்புகள் எவை தெரியுமா?

Must read

சென்னை:

ரும் கல்வியாண்டில் 1,6, 9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளார்.

 

தமிழக கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் தமிழக அரசு, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்றும், ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது மற்றும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், மன அழுத்தத்தை தடுக்கும் வகையில் கவுன்சிலிங், பள்ளிகளில் யோகா வகுப்பு போன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தமிழக கல்வி அமைச்சர் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வைபை வசதி செய்து தரப்படும் என்றும் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்வியாண்டில் (2018-19)  1,6, 9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய பாடதிட்டங்கள் தயார் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர், அநத பணிகள் அனைத்தும்   மார்ச் மாதத்தில் முடிவடைந்து,  ஏப்ரல் மாதத்திற்குள் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு ,  மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வைபை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான தனியார்  தனியார் நிறுவனமான ஆக்ட் (ACT) நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் கூறினார்.

தற்போது, சென்னை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 318 அரசு பள்ளிகளில் வைபை (WI-FI) வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article