சென்னை: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட்டாக வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்திய அணி நிர்ணயித்த 288 ரன்கள் என்ற இலக்கை, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 47.5 ஓவர்களிலேயே எட்டி 291 ரன்களை எடுத்தது அந்த அணி.
அந்த அணியின், ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மேர் ஆகிய இருவரும் சதமடித்து அணியின் எளிதான வெற்றிக்கு துணைபுரிந்தனர். பூரான் தன் பங்கிற்கு 29 ரன்களை அடித்தார்.
முகமது ஷமி, ஜடேஜா, கேதார் ஜாதவ், தீபக் சஹார், குல்தீப் யாதவ் மற்றும் ஷிவம் துபே என்று இந்தியத் தரப்பில் யாருடையப் பந்துவீச்சும் எடுபடவில்லை. அனுபவ வீரர் ஷமிக்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது. ஜடேஜாவுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா எளிதாக டீல் செய்யும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், மாறாக, அந்த அணியோ மிக எளிதான முறையில் இந்தியாவை ஊதித் தள்ளியுள்ளது.