மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடமும் “கட்சி மாற மாட்டேன், கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டேன்”  என பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் திரிணமுல் காங்கிரசிற்கு தாவாமல் இருக்க மாநில காங்கிரஸ் தலைவர் இந்த கையெழுத்தை வாங்கினர்.
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியும்  இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  இதில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை பிடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. இடதுசாரிகள் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு  .எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிரித்துள்ளதுடன், அக்கட்சியின் வாக்கு சதவீதமும் 9.6 முதல் 12 சதவீதம் வரை  உயர்ந்துள்ளது.
 
 
a
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏ.,க்களை தக்க வைப்பது  அக்கட்சியின் மாநில தலைவர் ஆதிர் சவுத்ரிக்கு பெரும் சவாலாக உள்ளது. நேற்று அவர், 44 எம்.எல்.ஏ.,க்களையும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனை நடத்தினார்.
பிறகு  “ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ மாட்டோம். , கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்>என்று எழுதப்பட்ட  100 ரூபாய் பத்திரத்தில் 44 எம்.எல்,ஏக்களிடமும் கையெழுத்து பெற்றார்.
அந்த பத்திரத்தில், “சோனியா, ராகுல் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன். கட்சியின் கொள்கைகளில் கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும், அதனை எதிர்த்து கருத்துக்கூற மாட்டேன். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எனது பதவியை ராஜினாமா செய்வேன்”  என்றும் எழுதப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களில் பல காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் திரிணமுல் கட்சிக்கு தாவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.