இந்தியா: மதுவால் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருவர் பலி

Must read

புதுடில்லி :
ந்தியாவில் மதுவால்  சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு (96 நிமிடத்திற்கு ) ஒருவர் தினமும் பலியாகி வருவதாக தேசிய குற்றப்பதிவு கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் முழுமையான மதுவிலக்கு அமல் படுத்தப்பட வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.   ஆனாலும், குஜராத் மற்றும் நாகாலாந்தில் மட்டுமே முழு மதுவிலக்கு அமலில் உள்ளது.  சமீபத்தில், பீஹாரில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஆனாலும்  உலக அளவில் இந்தியாவில் தான் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகம் முழுவதும் சராசரியாக மது குடிக்கும் 16 சதவீதம் பேரில் 11 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர்.
a
சமீபத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பூரண மதுவிலக்கிற்கு கேரளாவில் 47 சதவீதம் பேரும், தமிழகத்தில் 52 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.  இந்தியாவில் பெரும்பாலான குற்றங்களுக்கு மூல காரணம் மது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மதுவால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 2வது இடத்திலும், தமிழகம் 3வது இடத்திலும், கர்நாடகா 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன.
மதுவால் மாரடைப்பு மற்றும் நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் அதிகம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக  உலக சுகாதார மைய அறிக்கை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

More articles

Latest article