டில்லி: பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கிய அமிதாப் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்  மோடி அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் அமிதாப்பச்சன் கலந்து கொள்வதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
 மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவை சேர்ந்த, ‘மொஸாக் பொன்ஸீகா’ என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள, பெரும் பணக்காரர்கள் பலருக்கு போலி பெயர்களில் நிறுவனங்கள் துவங்கி, அவற்றில் சட்டவிரோதமாக முதலீடு செய்ய உதவி வந்தது.
500 இந்தியர்கள்இந்நிறுவனம் மூலம், வெளிநாடுகளில் உள்ள போலி
நிறுவனங்களில் முதலீடு செய்ததாக தகவல் வெளியானது. இந்த பட்டியலில், பாலிவுட்நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப்., நிறுவனதலைவர் குஷண் பால்சிங் உள்ளிட்ட, 500 இந்தியர்களின் பெயர்கள் இருந்தன. அந்த  பட்டியல், ‘பனாமா பேப்பர் லீக்ஸ்’ என்ற அழைக்கப்படுகிறது.
இந்த பனாமா பேப்பர் லீக்ஸ் பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை ஆராய புலனாய்வு குழு அமைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.  ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி பதவியேற்றதன் இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
a
 
இதை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
இது குறித்து அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்  பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கிய அமிதாப் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மோடி அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் அமிதாப்பச்சன் கலந்து கொள்வதாகவும்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே,   மோடி பிரதமராக பதவியேற்றதன் 2ம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் தான் பார்வையாளராகவே கலந்துகொள்ள இருப்பதாகவும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை எனவும் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.