கொல்கத்தா: ஒருவருக்கு ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா நெகடிவ் முடிவு வந்தால், அவர் உடனடியாக மறு பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்ற விதியை மாற்ற வேண்டுமென, ஐசிஎம்ஆர் அமைப்பிற்கு மேற்குவங்க சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக அந்த வேண்டுகோளில் கூறப்பட்டுள்ளதாவது, “எங்களுக்கு இதுதொடர்பாக மாற்று கருத்து உண்டு. ஒருவருக்கு ஆன்டிஜென் பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்தால், அவர் உடனடியாக ஆர்டி-பிசிஆர் என்ற பரிசோதனைக்கு உட்பட வேண்டுமென்பது தற்போதைய விதியாக உள்ளது.

ஆனால், ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்பட்டு, நெகடிவ் முடிவு பெற்ற ஒருவருக்கு, அடுத்த பரிசோதனையை மேற்கொள்ள குறைந்தபட்சம் 3 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.

ஏனெனில், ஆன்டிஜென் சோதனைகள் முடிவானவை என்று நிரூபிப்பதற்குள், ஒட்டுமொத்த வைரஸ் எண்ணிக்கையும் காட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.