கொல்கத்தா

புதிய ஊரடங்கு விதிகளின்படி கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் 7 நாட்கள் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.   இந்த புதிய ஊரடங்கு விதிகளின் படி மாநிலத்தில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து கொல்கத்தா நகரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய அதிகாரி, “கடந்த 3 ஆம் தேதி மேற்கு வங்க அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.  இந்த ஊரடங்கு 5 ஆம் தேதியில் இருந்து 7 நாட்களுக்கு அமலுக்கு வருகிறது

எனவே கொல்கத்தா விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளும்,இந்த ஊரடங்கில் நிறுத்தப்படுகிறது.  அதாவது ஆகஸ்ட் 5,8,20,21,27,28,மற்றும் 30 ஆம் தேதி விமானச் சேவை ரத்து செய்யப்படுகிறது” என அறிவித்துள்ளார்.