கொல்கத்தா,
பொதுமக்களுக்கு  பணம் விநியோகம் செய்யாத வங்கிய வங்கியை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடி னர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் 8ந்தேதி இரவு,  நாட்டில் கருப்பு மற்றும் கள்ள  பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திரமோடி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். ரூபாய் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து வங்கிகளில் இருந்து பணம் பெறவும், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கவும் உச்சவரம்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கிகளில் இருந்தும், ஏ.டி.எம்.களில் இருந்தும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்பட்டே உள்ளன.
ஆனால், பெரும் பண முதலைகள் 50 கோடி, 100 கோடி என புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளது, ரெய்டின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வங்கிகள் மீதும், வங்கி அதிகாரிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய பணம், மொத்தமாக கருப்பு பண முதலைகளுக்கே வங்கி அதிகாரி களின் உதவியால் செல்வதையடுத்து பல இடங்களில் பொதுமக்கள் வங்கி அதிகாரிகள் மீது தங்களது கோபத்தை காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில்மால்டா பகுதியில் பொதுமக்களுக்கு பணம் இல்லை என்று கூறிய தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கற்கள் மட்டும்  தடியை கொண்டு சரமாரியாக அடித்து நொறுக்கியும் சூறை யாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.