டிஜிட்டல் பண பரிவர்த்தனை: பரிசு திட்டங்கள் மத்திய அரசு அறிவிப்பு

Must read

டில்லி: 
நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இரண்டு சிறப்பு பரிசுத் திட்டங்களை ‘நிதி ஆயோக்’ அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.
மத்தியில் பாரதியஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, ஏற்கனவே இருந்த திட்டக்குழு கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக  ‘நிடி ஆயோக்’ அமைப்பு தொடங்கப்பட்டது.:

நாடு முழுவதும் பொதுமக்களிடையே  டிஜிட்டல் பணப்பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இரண்டு சிறப்பு பரிசுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நிதிஆயோக் தலைவர் அபிதாப் கந்த் கூறியதாவது:
லக்கி க்ரஹக் யோஜனா
இந்த திட்டம் ரூ.50 தொடங்கி ரூ.3000 வரையிலான  டிஜிட்டல் பணப்பரிவர்தனையில் ஈடுபடும் வாடிக்கை யாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
தினசரி மற்றும் வார அளவில் நடத்தப்பட உள்ள குலுக்கலில் இருந்து தேர்தெடுக்கப்படுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும்,
டிஜி தன் யோஜனா
என்ற திட்டமானது வியாபாரிகளுக்காக ஊக்கத்தொகைகளை  வழங்குகிறது.
இதில் அதிகபட்சமாக ரூ.50000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நிதிஆயோக் தலைவர் அமிதாப் கந்த்

இந்த இரண்டு திட்டங்களும் வரும்  வரும் 25ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.  அதேபோல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி வரை இந்த திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்.
அன்று நடைபெறும் நிறைவு விழாவில் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் இரு தரப்பினருக்கும் அதிக அளவிலான மதிப்பு கொண்ட மெகா பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article