2000 ரூபாயை குறைத்து 500 ரூபாய் அச்சடிப்பது தீவிரம்… சக்திகாந்த தாஸ்

Must read

டெல்லி:
500 ரூபாய் தாள்களை அதிகம் அச்சிடுவதாக டெல்லியில் மத்திய அரசின், பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார்.
டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியது:
ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, சந்தை சரிவுகள் விரைவில் சீராகும். இது உலகளாவிய சரிவு தானே தவிர, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு தொடர்பானது கிடையாது.

இந்தியாவில் தற்போது விநியோகிக்கப்படும், புதிய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் 100 சதவீதம் பாதுகாப்பா னது. 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் முதல் முறையாக முற்றிலும் உள் நாட்டிலேயே வடிவமைக்கப் பட் டது. அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். இவற்றை கள்ள நோட்டாக அச்சிட வாய்ப்பு மிக மிக குறைவு.
புதிய ரூபாய் நோட்டு சப்ளை போதிய அளவு இல்லை என புகார்கள் வந்துள்ளன. புகார் வந்ததும் துரித கதியில் நடவடிக்கை எடுக்கிறோம்.
புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பது தற்போது அதிகரித்துள்ளது. மதிப்பை ஈடுகட்டுவதற்காக, முதலில் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதில் ஆர்வம் காட்டி வந்தோம். தற்போது, புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article