சென்னை: மேற்குவங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்குகொள்ள சென்னை வந்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று, இல.கணேசனின் இல்ல விழாவில் செண்டைமேளம் வாசித்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இல. கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் சதாபிஷேக விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்தார். தொடர்ந்து, நேற்று இரவு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதையடுத்து, இன்று காலை ஆளுநர் இல.கணேசன் இல்ல  விழாவிற்கு சென்றார். அப்போது, அவருக்கு செண்டை மேளம் வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேள வாசிப்பதை ரசித்த மம்தா, யாரும் எதிர்பாராத விதமாக செண்டை மேளத்தை வாங்கிய மம்தா, கலைஞர்களுடன் இணைந்து வாசித்தது அங்குள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

 முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை வாசிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இல.கணேசன் இல்ல விழாவில், அரசியல் கட்சியினர், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.