நல வாரியத்தில் இணைய இனி ஆதார் எண் அவசியம்

Must read

சென்னை:
மைப்புசாராத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர்ந்து நலத் திட்ட உதவிகளைப் பெற,  இனி கு ஆதார் எண்  அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், உட்பட 17 நல வாரியங்கள்  செயல்படுகின்றன. இவற்றில், மொத்தம் 50 லட்சம் உறுப்பினர்கள்  பதிவு செய்துள்ளனர்.
இந்த அமைப்புகளில் இணைந்து அடையாள அட்டைகள் பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் விபத்து மரணம், ஈமச் சடங்கு உதவி, விபத்து ஊனம், இயற்கை மரணம், கல்வி உதவித் தொகை, திருமண உதவி, மகப்பேறு உதவி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவற்றுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மாநில அளவில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்டத் தொழிலாளர் அலுவலகம் மூலம் நலத் திட்ட உதவிகள் வங்கிக் கணக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்படுகிறது.

இதுவரை இந்த அமைப்புகளில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு செய்யும் தொழில்,, வயதுச் சான்றிதழ், குடும்ப அட்டை விவரங்களுடன் விண்ணப்பித்து வந்தனர். இதை சரிபார்த்து நல வாரியத்தால் அடையாள அட்டைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இதில், முறைகேடு செய்து, ஒருவரே பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால், இனி தொழிலாளர்கள் பெயர்களைப் பதிவு செய்யும் போது ஆதார் எண்ணையும்  கட்டாயம்  அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நல வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
“ஒவ்வொரு திட்டத்திலும் முறைகேடு செய்து பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பயனாளிகள் பெற்று வருவதாகப் புகார்கள் வந்தன. இதனால், அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் நோக்கத்திலும், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் திட்டத்தின் முழுப் பலனும் பரவலாகச் சென்று சேர வேண்டும் என்பதலாம், உறுப்பினர் பதிவுக்கான ஆவணங்களுடன் ஆதார் எண்ணையும் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து தொழிலாளர்கள் சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் பயனாளிகள் என்னென்ன திட்டங்களில் பயன் பெற்றுள்ளனர் என்பது உள்பட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்”  என்று தெரிவித்தனர்.

More articles

7 COMMENTS

Latest article