காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்!: மாணவியை மிரட்டியவர் கைது

Must read

சென்னை:
காதலிக்க மறுத்தால் சுவாதியை போல வெட்டிக் கொலை செய்து விடுவதாக  பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ப்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார்.  அவர் பள்ளிக்கு செல்லும்போது தினமும் பின்தொடர்ந்து வந்த ஒரு இளைஞர் தன்னை காதலிக்குமாறு  வற்புறுத்தி வந்துள்ளார்
இந்த நிலையில் நேற்று ப்ரியா பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த செல்வக்குமார், வரும் 11ம் தேதிக்குள் தன்னை காதலிக்காவிட்டால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
Love_by_LadybirdM
இதனால் பயந்துபோன ப்ரியா, தனது தாயிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.
அந்த இளைஞரின் பெயர் செல்வகுமார் (வயது 23) என்பதும்  சிதம்பரத்தைச் சேர்ந்த அவர், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
விசாரணையில், ப்ரியாவை மிரட்டியதை செல்வகுமார் ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சுவாதி கொலை சம்பவம் நடந்த சில நாட்களிலேயே இப்படியோர் மிரட்டல் விடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article