12 ராசிகள் – வார ராசி பலன் – வேதா கோபாலன்

Must read

மேஷம்

வாழ்க்கையில் எல்லாத்துலயும் வெரைட்டி பார்க்கணும்தான் டியர். அதுக்காக விதம் விதமாய் செலவு செய்து பார்க்கறேன்னா எப்படி! அண்ணன் தம்பி வீட்டு பார்ட்டிக்குப் போனால் போனோமா சாப்பிட்டோ மா பீடா போட்டோ மான்னு வரப் பாருங்க. வெளிநாட்டிலிருந்து டாலர் வரப்போகுது. வங்கிக் கணக்கில் விரிவாக்கம்! மம்மி பற்றி பயம் வேண்டாம். அஸ்திவாரமற்ற பயம் அது. குழந்தைகள் ஏற்படுத்தி வந்த டென்ஷன் படிப்படியாகக் குறைவதைக் கண்கூடாகப் பார்ததாலும் பூஜ்ஜியம் அளவை எட்ட வேண்டும் என்ற இன்றைக்கே அடம்பிடித்தால் எப்படி? எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திருங்க. பேசும்போது இதமாய் இரண்டு வார்த்தைகளையும் பதமாய் இரண்டு வார்த்தைகளையும் கலந்து பேசுங்க. சிறிய அளவில் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும். பிரச்சினையை நிரந்தரம் என்று கற்பனை செய்து பேஸ்த்தடிக்காதீங்க. அதிருஷ்டம் வாசல் கதவைத் தட்டவோ கூரையைப் பிய்க்கவோ நேரமின்றிக் கணிணி வழியே வரும். அலுவலக டென்ஷன்களை மதிக்காதீங்க. அது பாட்டுக்கு ஓடிவிடும். வாகனத்தால் செலவுகள் உண்டு. தயார் நிலையில் இருங்க.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் நீல நிறம் உபயோகியுங்க. சனிக்கிழமைகளில் யாருக்காவது மருத்துவ உதவி செய்யுங்க.ஏழைங்களுக்கு மருந்து வாங்கியும் தரலாம். ரத்ததானமும் தரலாம். உங்கள் இஷ்டம்.

ரிஷபம்

அக்கப்போருக்கு டெலிட் கமெண்ட் கொடுத்துடுங்க. பொதுவாவே பள்ளி, கல்லூரி, அலுவலகம், பஸ், ரயில் எங்கும் யாரிடமும் வம்பு வேண்டாம். யாரைப் பற்றியும் யாரிடமும் கமென்ட் வேண்டாம். டாடியும் மம்மியும் உங்களை முழுவதுமாகப் புரிஞ்சுப்பாங். கொஞ்சம் அதிக ஓய்வு கிடைக்கும் இந்த வாரத்தில் சின்ன சின்ன கிஃப்ட்கள் நிறையக் கிடைக்கும். காத்திருந்து காத்திருந்து பொறுமை இழக்கும் நிலையில் இருந்த உங்களை மிஸ் அதிருஷ்ட தேவி அரவணைத்துக் கொள்வாள். மனைவிக்கும் உங்களுக்கும் பானிபட் யுத்தம் ஏற்பட்டால் அதற்கு நிச்சயமாய் 150 சதவீதம் நீங்கதான் காரணமாய் இருப்பீங்க. கடுகளவு அதிருஷ்டத்திற்காகக் காத்திருந்த உங்களுக்கு அது கால்பந்து அளவு கிடைக்கும். உதைத்துவிடாதீங்க! எல்லாம் இதே சரியாகிவிடும். கொஞ்சம் பொறுத்துக்குங்க. உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன் கிடைக்காமல் இருக்க, நீங்கள் முயற்சியே செய்யாத ஒரு விஷயத்திற்கு திடீர் நன்மையை அள்ளி கஜானாவில் போடுவீங்க. ”இவர்கள் என் குழந்தைகள்” என்று பெருமைப்படும்படி அவன் (அவள்) உங்கள் தலையை நிமிரச் செய்வான்/ள்.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மஞ்சள் நிறம் உபயோகியுங்க. வியாழக்கிழமைகளில் ஏழைக்குழந்தைங்களுக்கு இனிப்புக் குடுங்க. வயதானவர்களுக்கு சிறு உதவிகள் செய்யுங்கள்.  அதையே முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற பெற்றோருக்குச் செய்தால் மேலும் சிறப்பு

மிதுனம்

அலுவலகத்தில் கொஞ்சம் அதிக வேலைச்சுமை இருக்கும். ஆனாலும் அதையும் ரசிக்கும்படியான ஜாலி மூடில் இருப்பீங்க. அப்பா கிட்டேயிருந்து ஏதோ சந்தோஷமான விஷயம் கிடைக்கப்போகுது. தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். அரசாங்கத்துகிட்டேயிருந்து ஏதோ எதிர்பார்த்துக்கிட்டே இருந்தீங்களே…அது கிடைக்கும்.கடையேழு வள்ளல் என்னங்க…சூப்பர் மார்க்கெட் வள்ளலே நீங்கதான்னு ஊர் மெச்சும். விட்டால் கவச குண்டலத்தையெல்லாம் தூக்கிக் கொடுத்துடுவீங்க. இன்னொரு புறம் திரையரங்கம் அது இதுன்னு ஜாலியாய்ப் பொழுது போகும். காதல் என்னும் வலையில் மாட்டாத திமிங்கலமாய் இத்தனை காலம் இருந்தீங்க. இனி…அதையும் பார்ப்போமே! கோயில் குளத்திற்கு ஒரு பக்கம், லிப்ஸ்டிக் பான் கேக் ஒரு பக்கம்னு கார்டு இரண்டு பக்கமும் தேயும். வெளிநாட்டு வேலைக்கு வலைதளத்தில் வலைவீசிக் கொண்டிருந்தவர்களுக்குப் பொன்னான வாய்ப்பு சிக்கும். பெற்றோரின் அரவணைப்பு நெகிழச் செய்யும். குடும்பத்தைவிட்டுப் பிரியும்போதுதானே அருமை அதிகமாகுது!

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பளிச்சென்று கண்ணைக் கவரும் வெள்ளை உபயோகியுங்க. செவ்வாய்க்கிழமைகளில் முதியோருக்கும் ஏழைகளுக்கும் உணவுப் பொருட்கள் அளிக்கலாமே!

கடகம்

நீங்க எப்பவுமே புத்திசாலித்தனமான காரியங்கள் செய்து மற்றவங்க கிட்டேயிருந்து ”சபாஷ்” வாங்கறவங்கதான். …ஆனாலும் யானையின் கால் சேற்றில் மாட்டினால் அதை ஒரு முறை காகமும் கொத்திப் பார்க்கும்னு சொல்லுவாங்களே… அந்தக் கதையா நீங்க லேசா சறுக்கினால்கூட கலாய்க்க ஆளுங்க ரெடியா இருக்காங்க. கவனம் தேவை. எந்த நிமிடமும் அழைப்பு வரலாம். பெட்டியைத் தயார் நிலையில் வெச்சுக்குங்க. மம்மியின் சமயேசிதம் உங்களைக் காப்பாற்றிக் கரையேற்றும். திடீரென்று துறையை மாற்ற இது உகந்த சமயம் இல்லை. கொஞ்சம் காத்திருங்க. காதல் திருமணம் கனவிலும் எதிர்பாராத வகையில் கைகூடும். வங்கிக் கடனுக்கு உடனடியாக அனுமதி கிடைக்கும். மேளம், தாலி, சத்திரம், விருந்து, தொட்டில், கிலுகிலுப்பை, ரப்பர் ஷீட், ஃபீடிங் பாட்டில் எல்லாம் அடுத்தடுத்து வந்தாச்சு. தயாரா? லோன் என்ற விஷயத்தின் பக்கம் தற்போதைக்குத் தலை வைத்துக்கூடப் படுக்க வேண்டாம். உரிய நேரம் வரும். அப்போது கலக்குங்க. வாசல் கதவை மட்டும் அல்லாமல் ஜன்னல் கதவையும் தட்டி மகாலட்சுமி வருவாள்.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மஞ்சள் நிறம் உபயோகியுங்க. ஏழைச்சிறுவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். அது உணவாகவும் இருக்கலாம். வேறு எந்த வகை உதவியாகவும் இருக்கலாம். ஏன் உடையாகவும்கூட இருக்கலாம்.

சிம்மம்

அதென்னங்க சில சமயங்களில் அப்படி வார்த்தைகளை ரிலீஸ் பண்ணிடறீங்க? மறந்துடாதீங்க. இப்பதான் கொஞ்சம்  கொஞ்சமாய்ப் பிரச்சனைகளிலேயிருந்து வெளியே வந்துகிட்டிருக்கீங்க. மறுபடியும் போய் நூல் கண்டு சிக்கலுக்குள் மாட்டிக்க வேண்டாம். பல வழிகளில் லாபம் வந்துகிட்டிருக்குமே. அள்ளிப்போடுங்க. சின்ன சின்னதாய் கேளிக்கைகள். சம்பள வரைபடத்தில் உள்ள அம்பு மேல் நோக்கி வளரும். பேச்சில் ஏற்பட்டுள்ள புத்திசாலித்தனம் உங்களை உயரத்தில் தூக்கி உட்கார வைக்கும். மருந்து சாப்பிடும் நிலை வராதிருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு அதன்படியே நடங்க. குழந்தைகளின் புகழ் வண்ணமயமாக வெளிப்படும். மருத்துவம் சம்பந்தமான எந்தப் படிப்புப் படித்தாலும் நீங்க வெற்றியை நோக்கி மகிழ்ச்சி விமானத்தில் பறக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். டாடிக்கு உங்களால் நன்மை. உங்களுக்கு மம்மியால் நன்மை. வெட்டி அதிருஷ்டங்களை நம்புபவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் இருக்கும். புதிய வாகனங்கள் கிடைக்கும். சுய முயற்சியால் பெரிய வெற்றிகள் உண்டு.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் சிவப்பு நிறம் உபயோகியுங்க. வியாழக்கிழமைகளில் உங்களுக்கு விருப்பமான வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று உணவு விநியோகம் செய்யலாமே!  சனிக்கிழமைகளில் இரும்புதானம் செய்யுங்கள்.

கன்னி

பணத்தால் லாபம் ஒருபக்கம் இருக்கும். மறுபக்கம் பாசத்தால்! விலகிப்போன சுற்றமும் நட்பும் விரும்பி வரும். நீங்க பிறவியிலேயே புத்திசாலி. யாரை எப்படி டீல் செய்யறதுன்னு உங்களுக்கு கோச்சிங் கிளாஸ் எடுக்க வேண்டாம். உங்க சமயோசிதம் உங்க பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் ”ஹேய்…கிரேட் யார்” என்று மற்றவர்களை விழிவிரியச் செய்யும். பகவத் கீதையை அர்த்தம் உணர்ந்து படியுங்க. சின்ன வெற்றிகளுக்காக கட் அவுட் வைத்துக் கொள்ள வேண்டாம். (அதிலும் சொந்த செலவில்!) சின்ன ஏமாற்றங்களுக்குப் பொடியாய் உதிரவும் வேண்டாம். எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்து செக் வரும். நெருங்கிய வட்டாரத்தில் திருமணக் கோலாகலம் வந்துவிட்டது. டாடி பற்றி பயம் வேண்டாம். புதிய வாய்ப்புக்கள் வரப்போகின்றன. உறுமீன் வருமளவும் காத்திருந்த கொக்கு போல் கவனமாகக் காத்திக் கொள்ளுங்கள். ரொம்ப நாள் கழித்துப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்குப் போய் ரிலாக்ஸ் செய்துப்பீங்க. வங்கினக் கணக்கு திருப்தி தரும்.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மஞ்சள் நிறம் உபயோகியுங்க. ஞாயிற்றுக் கிழமைகளில் செப்புப் பொருள் தானம் செய்யுங்கள். வீட்டில் தண்ணீர் குடிக்க செப்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது பரிகாரத்திற்கும் நல்லது! உடல் நலத்திற்கும் உகந்தது.

துலாம்

முன்பை விட இப்போ அதிக ஓய்வு கிடைக்கும். அதாவது உழைப்புக் குறையும். ஆனால் முன்பைவிட இப்போ வருமானம் அதிகரிக்கும். கலைத் துறையில் இருக்கறவங்களுக்கு அமோக வெற்றி. நண்பர்கள் பாஸ்போர்ட் விசா ரேஞ்சில் பெரிய அளவில் உதவுவாங்க. குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, சுபகாரியங்கள் உண்டு. பல காலம் கழித்துப் பழைய நண்பர்களை சந்திப்பீங்க. ஜாலிப் பயணம் முதல் ஜாப் பயணம் வரை எல்லாவற்றிலும் வெற்றிதான். பாராட்டுகள் கேட்டு கேட்டு உங்களுக்கே போரடிக்கும்! நீங்கள்தான் வி ஐ பி என்று சுற்றியிருப்பவர்கள் கொண்டாடுவார்கள். நீங்களும் அதற்குப் பொருத்தமாய்த்தான் நடந்துப்பீங்க.  ஆரோக்யப் பிரச்சினைகள் சுவிட்ச் போட்டதுபோல் காணாமல் போய் முட்டியை உயர்த்தி சிக்ஸ் பேக் காட்டுவீங்க.குடும்பத்தில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகள் பற்றிய டென்ஷனைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாதீங்க. டென்ஷனெல்லாம் ஓடும் மேகங்கள்தான். அலுவலகத்தில் எத்தனைக்கெத்தனை டென்ஷன்கள் உண்டோ  அத்தனைக்கத்தனை சந்தோஷமும்!

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் ஆரஞ்சு அல்லது பிங்க் நிறம் உபயோகியுங்க. சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும் முதியோருக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்க. உணவு உடை மற்றும் படிப்புக்கான உதவியாகவும் இருக்கலாம்.

விருச்சிகம்

முன்பெல்லாம் அலட்சியம் காட்டிய நீங்க இப்போ கோயிலுக்கெல்லாம் போறீங்க. நடக்கட்டும்! திடீர்னு பொறுப்பு வந்து மம்டி டாடிக்கு உதவியெல்லாம் செய்யறீங்க. தொடரட்டும்! வெடுக் வெடுக்குன்னு பீச் மாங்காயில் மிளகாய் தூவினது போல் பேசறீங்களே…அதை மட்டும் கொஞ்சம் ட்ராஷுக்கு அனுப்பிடுங்க. கடையேழு வள்ளல் என்னங்க…சூப்பர் மார்க்கெட் வள்ளலே நீங்கதான்னு ஊர் மெச்சும். விட்டால் கவச குண்டலத்தையெல்லாம் தூக்கிக் கொடுத்துடுவீங்க. இன்னொரு புறம் திரையரங்கம் அது இதுன்னு ஜாலியாய்ப் பொழுது போகும். காதல் என்னும் வலையில் மாட்டாத திமிங்கலமாய் இத்தனை காலம் இருந்தீங்க. இனி…அதையும் பார்ப்போமே! பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டீர்கள். கஷ்டங்களைக் கடந்துவிட்டீர்கள். டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டீங்களா? டாட்டா. பை..பை. விமானம் ஏறப்போறீங்க! சென்று வென்று வாருங்கள். கோபம் கீபம் பட்டீங்களோ…பிரச்சனையாயிடும். மாணவர்கள் அரியலர்ஸை முடிப்பீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு அரியர்ஸ் பணம் வரும். தொலை தூரப்பயணம் உண்டு. அப்பாடா…ஒரு வழியாய் செலவுகளைக் குறைச்சுட்டீங்க. அலுவலகத்தில் உங்களைக் கடித்துக் கொண்டிந்த எறும்புகள் காணாமல் போயிருக்கும்.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் நீல நிறம் உபயோகியுங்க. சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வாருங்கள். முடிந்தால் அங்கு உணவுப் பொருட்களோ இனிப்புப் பொருட்களோ விநியோகம் செய்யலாம்.

தனுசு

உங்க அலுவலகத்தில் உங்களைக் கூப்பிடுவாங்க. மெயிலை செக் செய்ய சொல்லுவாங்க. திறந்து பார்த்தால்…கங்கிராட்ஸ். பதவி அல்லது சம்பளம் உயர நிறைய வாய்ப்பு இருக்கு. பொறாமைக் கண்கள் உங்களைக் காய்ச்சும். கவலை வேண்டாம். வீட்டில் பாட்டி இருந்தால் சுத்திப் போடச் சொல்லுங்க.

கவர்ச்சி அம்சம் உங்கள் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மிகுந்த செயல்களை செய்வதால் அலுவலகத்தில் பாராட்டு மழைதான் போங்க. பெரியவங்க திருமணம் பேசி முடிப்பாங்க. இருமனம் கலப்பது உங்க கையில்தான் இருக்கு. சோப் போட்டால் மயங்கிடாதீங்க. உங்களை மற்றவர்கள் செமத்தியாய் உபயோகப் படுத்திக்கறாங்கன்னு புரிஞ்சுக்குங்க. குடும்பத்தினருடன் சண்டையெல்லாம் வெள்ளைப் புறா பறக்க விட்டு சரியாகிவிடும். திருமணம் முடிவாகும்.  ஜாலிதான்! இத்தனை காலமா எந்த லாக்கர்ல போட்டு ஒளிச்சு வெச்சிருந்தீங்க இந்தத் திறமையெல்லாம்? பாருங்க. பாஸ் வந்து தோளில் தட்டிக் கொடுத்துப் பாராட்டறாரு. தலைக்குள் மூளை இருக்கற அளவுக்கு முயற்சி செய்யற ஆசையும் இருக்கணும். எனிவேஸ் சம்பளம் உயரும். அடிச்சு விடுங்க.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மெரூன் நிறம் உபயோகியுங்க. ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களுக்கு விருப்பமான வழிபாட்டுத்தலத்திற்குச் சென்று முறைப்படி வழிபட்டு வாருங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் செப்புப் பாத்திரத்தை தானமாகக் கொடுக்கலாம்

சந்திராஷ்டமம்:  12.01.2017 முதல்   14.01.2017 வரை

மகரம்

அதிருஷ்டம் வாசல் படியில் வந்து உட்கார்ந்து ”டேக் மி” என்று கெஞ்சும். விட்டுவிடாதீர்கள். கப்பென்று இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே வந்துடுங்க. யார் வீட்டுக் குழந்தையோ என்று அலட்சியம் செய்துடாதீங்க. முதலில் அது பிற்காலத்தில் உங்களை உயர்த்தப்போகுது. ஒரே வார்த்தை…ஓஹோன்னு வரப்போறீங்க. அலுவலக பிரச்சினையெல்லாம் எறும்புக் கடி மாதிரி. அதை டினேசர் சைஸுக்குக் கற்பனை செய்துகிட்டு நடுங்காதீங்க. அலுவலகப் பயணம் செல்லுதம்போது மூக்கால் அழுது கொண்டே போனாலும்கூட  வெற்றி பெற்றுத் திரும்பும்போது சந்தோஷத்தில் குதிச்சுக்கிட்டுதான் வருவீங்க. கர்வம் உங்கள் தோள் மேல் ஏறி உட்கார்வதற்கு இடம் கொடுக்காமல் சாதுவாய்ப் போவது நல்லது. சொல்றதைச் சொல்லிட்டேங்க. அப்புறம் உங்க இஷ்டம். கணவர்/ மனைவிகிட்ட அனுசரிச்சுப் போக வேண்டும். மம்மிக்கு மகிழ்ச்சி கூடும். உஙக கடமையை முடித்த திருப்தி உண்டு. இறை விஷயங்களில் கவனம் குவியும். வீடு/ நிலம்/ ஃப்ளாட் அல்லது வாகனம் பதிவு செய்வீங்க. அலுவலகத்தில் அதிக பளுதான். என்ன செய்ய? சில மாதங்கள் பொறுத்தால் போதும்! என்ன கஷ்டம்? ஜமாய்த்துவிடுவோம்.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் ஊதா நிறம் உபயோகியுங்க. சனிக்கிழமைகளில்  ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் கொடுங்கள். செருப்பு குடை போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாகக்க கொடுங்கள்.

சந்திராஷ்டமம்:     14.01.2017 முதல் 17.01.2017 வரை

கும்பம்

பேச்சில் இனிமைகூடி மற்றவங்களை வசீகரிக்கப்போறீங்க. சந்தோஷம்தான். அதே சமயம் அதே பேச்சினால் சின்னச் சின்ன இடர்களில் சிக்கவும் சான்ஸ் இருக்கு. வேலை மாறத் திட்டமிட்டிருந்தீங்களே. தட்டிவிடுங்க மனுவை. எல்லாம் கடகடன்னு முடிஞ்சுடும்.  வெளிநாடு உங்க இலக்கு என்றால் சான்ஸ் இன்னும் பத்து பர்சன்ட் அதிகமாவே இருக்குங்க.  பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என்பதற்காகத் தலையில் கனம் ஏற்றாமல் இருக்கும் உங்கள் அடக்கத்தை மனமாரப் பாராட்டுகிறேன்.கொஞ்ச காலத்திற்கு உற்றவர்களை /பெற்றவர்களை விட்டுப்பிரிய நேர்ந்தாலும் அதன் பலன் இனிக்கும். ஏற்கனவே அங்க இங்க எங்கேயும் நண்பர்கள். இதுல புதுசா வேற ஒரு நட்பு வட்டம் உருவாகப் போகுது. உங்க உதாரெல்லாம் வீட்டில்தான். வெளியில் ஜால்ரா திலகம். எல்லோரிடமும் நல்ல பெயர். இதுல வேடிக்கைப் பேச்சு வேற. பார்ட்டிகளில் கலக்குவீங்க. எதிர்பாலினத்தால நன்மைகள் உதவிகள் இருக்கும். யூ டிஸர்வ் இட்! மனசு நல்லா இருக்குங்க. வேற என்ன வேணும்.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பச்சை நிறம் உபயோகியுங்க. புதன் கிழமைகளில் மாணவர்களுக்குக் கல்வி சம்பந்தமான உதவிகள் செய்யுங்க. பச்சைப் பயிறு அடிப்படையிலான உணவுப் பொருளை ஏழைகளுக்கு உண்ணக் கொடுங்கள்.

சந்திராஷ்டமம்:     17.01.2017 முதல் 19.01.2017 வரை

மீனம்

ஒரு பக்கம் பயணம். ஒரு பக்கம் அலுவலக/ பள்ளி/ கல்லூரி நிர்பந்தங்கள். ஒரு பக்கம் உறவினர் சுற்றம் மட்டும் நட்பின் அன்பு மற்றும் அன்பில்லாத தொல்லைகள். என்னதான் செய்யப்போறீங்க பார்ப்போம். விருந்து சாப்பாடு அளவோட இருக்கட்டும். வெளிநாட்டிலிருந்த சந்தோஷ செய்தி வரப்போகுது. ரிங் டோ ன் குரலை உயர்த்தி வையுங்க. இ மெயில் பெட்டியைத் திறந்தே வெச்சிருங்க.  கடையேழு வள்ளல் என்னங்க…சூப்பர் மார்க்கெட் வள்ளலே நீங்கதான்னு ஊர் மெச்சும். விட்டால் கவச குண்டலத்தையெல்லாம் தூக்கிக் கொடுத்துடுவீங்க. இன்னொரு புறம் திரையரங்கம் அது இதுன்னு ஜாலியாய்ப் பொழுது போகும். காதல் என்னும் வலையில் மாட்டாத திமிங்கலமாய் இத்தனை காலம் இருந்தீங்க. இனி…அதையும் பார்ப்போமே! வர வரத் தெனாலி மாதிரி பயமயமா ஏன் ஆயிட்டீங்க? எல்லாம் நல்லாத்தான் நடக்கப்போகுது. உங்களுக்கு எப்படிக் கோபப்படறதுன்னும் தெரியலை. பிளம்ஸ் மூட்டையை அவிழ்த்து விட்டமாதிரி வார்த்தைகளைத்தான் கொட்டறீங்க. அப்பா அம்மாவும் போனால் போகுதுன்னு விடறாங்க. மம்மிக்கு அவங்க மம்மி வீட்டிலயிருந்து ஜாக்பாட் அடிக்கப்போகுது.

பரிகாரங்கள்: உடை மற்றும் உபயோகப் பொருட்களில் வெண்மையை உபயோகியுங்க. திங்கள் கிழமைகளில் யாருக்காவது வெள்ளை நிறப் பொருட்களையோ பால்  அல்லது பால் பொருட்களையோ அன்பளிப்பாகவோ அல்லது தானமாகவோ கொடுங்கள். வயதானவர்களிடம் பரிவும் அன்பும் காட்டி ஆசி பெறுங்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article