வார ராசி பலன் (12 ராசிகள்) – வேதா கோபாலன்

Must read

 

மேஷம்: சந்திரன் வார ஆரம்பத்தில் ஏழாம் வீட்டில் இருப்பதால் நன்மைகளும் லாபங்களும் அதிகரிக்கும். குழப்பமான மன நிலையிலிருந்து மீளுவீர்கள்ராசிக்கு அதிசார குரு பார்வை இருப்பதால் எந்த நிலையிலும் முடிவு வெற்றிகரமாகவே இருக்கும். அலுவலகத்தில் எதிர் பாராத திடீர் மாற்றம் அல்லது முன்னேற்றம் இருக்கும். வேலைக்குத் தகுந்த மரியாதையும் காசோலையும் இல்லையோ என்ற பதற்றத்தைத் தூக்கி உடைப்பில் போடுங்கள். எல்லாம் வரும்போது வரும். நமக்குத்தான்மா அவசரம். குழந்தைங்க உங்க மேல கோபப்பட லாம். டூ விடலாம். நீங்க அவங்களோட காய் விடலாமா? தாங்குவாங்களா. மேலுக்கு சிரிச்சுக்கிட்டிருந்தாலும் ரொம்பவும் நொந்து போயிட்டாங்க. மன்னிச்சுடுங்க.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மஞ்சள் நிறம் நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம் : 22,01,2017 முதல் 24. 01,2017  வரை

ரிஷபம்: ராசிநாதன் சுக்கிரன் என்பதால் உங்கள் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். அவர் 10 ம் வீட்டில் இருப்பதால் ஆடை ஆபரணங்களுக்கான செலவுகள் ஏற்படும். செல்வாக்கு அதி கரிக்கும். மதிப்புக்கூடும்.நம் விருப்பத்திற்கேற்ப உலகமே சுழல வேண்டும் என்று எதிர்பார்க் காதீர்கள். அது தன் பாட்டுக்கு சுழலட்டும். நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்வோமே! பாப்பா பிறக்கப் போகிறது. அலுவலக சூழல் சற்று அவசர கதியில்தான் இருக்கும். நல்லா சாப்பிடுங்க! வண்டி ஓட்டும்போது வண்டியின் வேகத்தில்தான ஓட்டணும். விமான வேகத்தில் ஓட்டக்கூடாது. சரியா? உங்க மம்மிக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட ஏதாவது உதவிக்கோ நன்மைக்கோ வெயிட் பண்ணிக்கிட்ருக்கீங்களா, இதோ வந்தாச்சே! பத்தாம் வீட்டிற்கு ராகு பார்வை கிடைப்பதால் வெளிநாட்டு உத்யோகம்  கிடைக்கும். அந்த வீட்டை குரு பகவானும் பார்ப்பதால் பணி பற்றிய கவலைகள் தீரும். புது வேலை கிடைக்கும்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  ஆரஞ்சு அல்லது பிங்க் நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம் : 24. 01,2017  முதல் 27.01.2017 வரை

மிதுனம்: கன்னா பின்னா என்று குரல் உயர்த்திக் கத்தத் தோன்றும். பின் விளைவுகளை யோசித்துப் பேசுங்க! (குறிப்பாய் அலுவலகம் பள்ளி கல்லூரியில்…). தியானப் பயிற்சி எடுங்களேன். உங்களுக்கு நல்லதோ இல்லையோ சுற்றி இருப்பவர்கள் தப்பிப்பார்கள்.  அதிகப் பணம் வரும். கவனமாய் முதலீடு செய்யுங்க. திருமணக்கனவுகள் பலிக்கும். ஃப்ளைட் பயணம் அதிகம் இருக்கும், அவார்ட் ரிவார்ட் உண்டு. துர்க்கை சுலோகம் சொல்லுங்க

உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  மஞ்சள் நிறம் உபயோகியுங்க.

கடகம்: ஆரோக்யத்தைக் குறிக்கும் எட்டாம் வீட்டில் கேது இருந்தாலும்கூட குரு பார்ப்பதால் பிரச்சினை தீரும். அலுவலகத்தில் பொறுப்புக்கு மேல் பொறுப்பு சுமத்தினாலும் புன்னகையுடன் சமாளிக்கும் குணம் உள்ளவர் நீங்க. கணவர்/ மனைவி முன்பைவிட அதிகமாக அட்ஜஸ்ட் செய்து கொள்வார். அதிருஷ்டம்தான் போங்க. குழந்தைங்க பாஸ்போர்ட், விஸா எடுப்பாங்க. நீங்க சர்வதேச விமான நிலையத்தில் டாட்டா காண்பிங்க ரெடியாம்மா? லோன் உடனே கிடைக்கும்,  ஆரோக்யம் பற்றிக் கொஞ்சம் கவலைப்படுங்கம்மா. அனுமான் சுலோகம் சொல்லுங்க.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் சிவப்பு நிறம் உபயோகியுங்க.

சிம்மம்: சிரமம் வருவது போல் தோன்றி எல்லாம் தலைப்பாகையோடு போகும்போது அப்பாடான்னு ஆகும். எல்லா விஷயங்களையும் அணுகும் முறையில் சிறந்த பக்குவம் உள்ள உங்களுக்கு அலுவலகத்தில் மேலும் சிறந்த நற்பெயர்கள் கிடைக்கும். குழந்தைங்க மேடை ஏறிப் பாராட்டும் பரிசும் வாங்குவாங்க. நீங்க உள்ளங்கை ரேவை அழியும்படி கைத்தட்டுவீங்க. கணவர் கிட்ட உங்க வாய்ச்சொல் வீரத்தைக் காட்டாதீங்கம்மா

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் ஊதா நிறம் உபயோகியுங்க.

கன்னி: பன்னிரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் சிறு தடைகள் அல்லது தாமதங்கள் இருந்தால் கவலை வேண்டாம்இரண்டாம் வீட்டில் குரு அதிசாரமாக இருப்பதால் குடும்பத்தில் யாருக்காவது திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பெண்கள் சம்பந்தமான நிகழ்ச்சியாக இருக்கும்.சட் சட்டென்று திரை  போட்டுத் திரை விலக்கிக் காட்சிகள் மாறும் நாடகம் போல் அதிருஷ்டம் எதிர்பாராத நேரங்களிலெல்லாம் கதவைக்கூடத் தட்டாமல் ஓடி வந்து அணைத்துக் கொள்ளும். மச்சம்தான் போங்க. கவர்ச்சி அம்சம் மேம்படும். காதல் வளரும். . ரோஷத்தைக் கிளற ஒரு அளவு இருக்குப்பா. மம்மீ ஃபாரின் போவாங்க. எது எடுத்தாலும் தடை.. தாமதம்னு டென்ஷன் ஆக வேண்டாம். தானாய் இயல்பாய் நடக்கும். இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மெரூன் நிறம் உபயோகியுங்க.

துலாம்: பதினோராம் வீட்டில் ராகு இருப்பதால் வெளிநாட்டு முயற்சிகள் எல்லாம் வெற்றிகரமாக இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு சம்பள உயர்வு உத்யோக உயர்வு ஆகியவை சுலபமாகக் கிடைக்கும்.எதற்கெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்ல முறையில் முடிந்திருக்குமே. நிம்மதியா? உங்க அம்மாவுக்கு நல்ல தெல்லாம் நடக்கும். புது வண்டி வாங்கப் போறீங்க.  சபாஷ். ஆல் த பெஸ்ட். கேட்ட சீட் கிடைச்சாச்சு. இத்தனை காலம் இல்லாத ஆர்வம் படிப்பில் துள்ளும். அலுவலகத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். பொறுமையை அணியுங்கள். எல்லாம் சீக்கிரத்தில் சரியாகும்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் இள மஞ்சள் நிறம் உபயோகியுங்க.

விருச்சிகம்: ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வித வருமானங்கள் அல்லது லாபம் அல்லது வரவு அல்லது ஆதாயம் (அப்பாடா!) வரும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் கூடும். கோயில் திட்டங்கள் இப்போது நிறைவேறவில்லை என்றால் டென்ஷன் வேண்டாம். அததற்கு நேரம் வர வேண்டாமா! கல்யாணம் கச்சேரி  கொண்டாட்டம் எல்லாமே இதே வந்தாச்சு. காத்திருந்தீங்களே.. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்தா நல்லதும்மா. லோன் போடுவதைச் சற்றுத் தள்ளிப்போடப்பாருங்க.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பச்சை நிறம் உபயோகியுங்க.

தனுசு: வேலை பளு இருக்கும்தான். அது நீங்கள் புலம்பிப் பொருட்படுத்தும் அளவுக்கு இருக்காது. குழந்தைகள் பேக்கெட் பேக்கெட்டாக சந்தோஷத்தை அளிப்பார்கள். நண்பர்களா பகைவர்களா என்று கொஞ்சம் உரசிப்பார்த்துப் பழகுங்கள். குறிப்பாக எதிர்பாலினத்தினரை. வீட்டில் உள்ளவங்க வெளிநாடு போவாங்க. குழந்தைங்களை சும்மா திட்ட வேண்டாம், அவங்க வேணும்னு எந்தத் தப்பும் செய்யலைம்மா. பாவம். கணவருக்கு வெளியூர் வெளிநாட்டு வாய்ப்புக்கள் கிடைக்கும். அவர் அலுவலக டூர் போவார்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  மெரூன் நிறம் உபயோகியுங்க.

மகரம்: ராசியின் மீது சூரியன் இருப்பதால் குடும்பத்தில் யாருக்கேனும் அரசியல் செல்வாக்கு ஏற்படும்.  அல்லது அரசாங்கத்தின்மூலம் உதவி கிடைக்கும்.கோபத்திற்கு வழியே கொடுக்கா தீர்கள். எந்தச் சூழலிலும்…யார் உங்களுக்கு டென்ஷன் ஊட்ட முயற்சித்தாலும் கம்மென்றி ருங்கள். பொறுமைக்குப் பரிசு அடுத்த பஸ்ஸில் வந்து கொண்டே இருக்கும். இப்ப கொஞ்ச நாட்களா ஆரோக்யத்தை அலட்சியம் செய்துக்கிட்டிருக்கீங்க. ஏன்?? மாத்திக்குங்கம்மா.. அப்பாவுக்கும் உங்களுக்கும் அதிருஷ்டம் அடிக்கும். என்ஜாய்.உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பளிச்சென்று கண்ணைக் கவரும் வெள்ளையை  உபயோகியுங்க.

கும்பம்: புதன், லாபத்தைக் குறிக்கும் பதினோராம் வீட்டில் இருக்கிறார். இதனால் நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும். பன்னிரண்டில் புதன்  இருப்பதால் கல்வி சம்பந்தமான பயன்மிக்க செலவுகள் ஏற்படும்.ராசியின் மீது உள்ள சுக்கிரன் உங்களைக் கவர்சிகரமாகப் பேச வைப்பார். செல்வாக்கு அதிகரிக்கும். மத்தியஸ்தம் செய்வீர்கள். குடும்பத்தில் யாருக்காவது காதல் திருமணம் அமைய வாய்ப்புள்ளது. ஊருக்கெல்லாம் நல்லவராய் இருக்கீங்க. வீட்டுக்குள்ளும் நல்ல பெயர் எடுங்களேன்! உங்க அதிருஷ்டம் எல்லோரும் உங்களை அனுசரிச்சுக்கிட்டுப் போறாங்க. எத்தனை நாட்களுக்கு? சாப்பாட்டு விஷயத்தில் அதி ஜாக்கிரதையா இருங்க. குடும்பத்தில் இவ்வளவு நாளாய்க் காணாமல் போயிருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஒரு வழியாய் மீண்டு வந்தாச்சில்ல.. சந்தோஷமா?  பெட்டி படுக்கை பேக் பண்ணி ரெடியா  வெச்சிருக்கீங்களா?

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் வெண்மையை உபயோகியுங்க.

மீனம்: விரயத்தில் சுக்கிரன் இருப்பதால் காதல் திருமணம் கைகூட. பன்னிரண்ட இன்னும் சில காலம் பொறுத்திருங்கள். கணவருக்கு/மனைவிக்குப் பல வித நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் இணைந்து சந்தோஷப்படப் போறீங்க அல்லது குடும்பத்தில் ஒரு நபர் கூடுதலாவாங்க. சகோதரர்களுடன் அவ்வளவாகத் தொடர்பு இல்லைன்னாலும் பிரச்சினை இருக்காது. எந்த நாட்டுக்கு வேணாலும் ….. போக வேண்டியிருக்கலாம். ஜாக்கிரதைம்மா.  வீட்டில் கட்ட மாவிலைத்தோரணம் தயாராகும், சுப நிகழ்ச்சி வருது.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் நீல நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம் :19,01,2017 முதல் 22,01,2017 வரை

More articles

Latest article