வார ராசி பலன் (12 ராசிகள்) – வேதா கோபாலன்

Must read


 
 
 
 
மேஷம்

அலவலகத்தில் திடீர் நிகழ்வு ஏற்படும். என்றைக்கோ எதிர்பார்த்த நன்மை ஒரு வழியா உங்களைத் தேடி வந்து மடியில் உட்காரும். குருவாயூரப்பன் சுலோகம் சொல்லுங்க பதினொன்றில் கேது இருப்பதால் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் வரும். ஐந்தாம் வீட்டில்  ராகுவும் ஆறில் குருவும் அமர்ந்திருக்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகள் வெளி நாடு சென்று வெற்றியடைவார்கள். பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் தந்தை பிரபல மாவார்.  பலரால் பாராட்டப்படுவார். அவர் கலைத்துறையைச் சேர்ந்தவராக இருந்தால் மேடையில் வெற்றியைக் கொண்டாடுவார்.

ரிஷபம்
எங்கும் நிதானம் எதிலும் நிதானம் என்று போகிறதே என்று பரபரத்து என்ன பயன்? முயற்சி களை அதிகரியுங்க. இந்த சோம்பல் சோம்பல்னு ஒரு விஷயம் இருக்கே…அந்த சமாசாரம் உங்களை அண்டாமல் குச்சியை ஓங்கி விரட்டுங்க. ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்ப தால் உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் ஆரோக்யம் அருமையாக இருக்கும்.  எட்டில் சூரியன் இருப்பதால் ஆரோக்யத்தில் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.ஏழாம் வீட்டு புதன் கணவருக்கு/ மனைவிக்கு நன்மை ஏற்படுத்தித் தருவார். அலுவலகத்திலோ, வீட்டிலோ, புத்திசாலித்தனமான முயற்சிகள், பேச்சு நடவடிக்கை மூலம் பெருமையும் நன்மையும் கிடைக்கம். பிசினஸ் முயற்சிகள் சாதகமாக முடியும்.
 

மிதுனம்
செலவான செலவு…வரலாறு காணாத செலவு ஏற்பட்டாலும் அதற்கெல்லாம் அசருகிற நபராம்மா நீங்க? வெளுத்துக் கட்டுங்க. விநாயகர் அகவல் சொல்லுங்க பத்தாம் வீட்டைக் குரு பார்ப்பதால் உங்களுக்கு வேலை கிடைக்கும் அல்லது ஏற்கனவே உள்ள வேலையில் பதவியும் சம்பளமும் உயரும். சூரியன்  ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பாஸ்போர்ட் விவகாரங்கள் மிகவும் சுலபமாக முடியும். குழந்தைகளுக்கு அரசாங்கத்திட்மிருந்து நன்மைகள் வரும். பதினோராம் வீட்டை 3 கிர கங்கள் பார்ப்பதால் பல வித வருமானங்களும் லாபங்களும் ஒரே சமயத்தில் வரும்.

கடகம்
சட்டென்று ஒருவித கவர்ச்சி அம்சம் ஏற்பட்டு செய்யும் காரியங்களில் நேர்த்தி அதிகரிக்கும். அட அவங்களேதான் நீங்களா என்று காண்போர் தங்கள் மூக்கின் மீது  சுட்டுவிரலை வைத்து அதிசயப்படப்போகிறார்கள். ஐந்தாம் வீட்டில் புதன் இருப்பதால் குழந்தைகள் தங்கள் புத்தி சாலித்தனத்தால் வெற்றிபெற்று உங்களுக்கு மகிழ்ச்சியும் கர்வமும் அளிப்பார்கள். 5 ல் சனி இருப்பதால் கடன் வாங்குவது பற்றி யோசியுங்கள். அவசரம் வேண்டாம்.  சனியின் காரணமாக மெதுவாகத்தான் அடையும். படிப்பு சம்பந்தமான செலவுகள் ஏற்படும். உங்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கல்விக்கு உதவுவீர்கள். 

சிம்மம்
குறையொன்மில்லை. இதோ கண்ணில் தெரியுது பாப்பா. புதுப்புது லாபங்கள் வரும்மா. நிறைய லாபம்தான், கங்கிராட்ஸ்… பிள்ளையார் சுலோகம் சொல்லுங்கள் ஏழாம் வீட்டிற்கு ராகு பார்வை இருப்பதால் கணவருடன் வெளிநாடு செல்வீர்கள்.இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் புத்திசாலித்தனமான பேச்சினால் வெற்றியடைவீர்கள்.குரு இரண்டில் இருப்பதால் தந்தைக்குப் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். குரு ஒன்பதுக்கு உரியவர் என்பதால் அவரின் பலம் காரணமாக திடீர் அதிருஷ்ட வாய்ப்புக்கள் கட்டாயம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பேச்சினால் நல்ல முறையில் உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினருக்கும் நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் பேச்சு வார்த்தையினாலேயே பிரச்சினைகள் தீரும். எட்டாம் வீட்டை குரு பார்ப்பதால் ஆரோக்யப் பிரச்சினைகள் தீரும்.

கன்னி
பாராட்டுக் கிடைக்கும். புகழ் இன்கிரீஸ் ஆகும். உடனே தலை கிறுகிறுக்க வேண்டாம். அதற்கு அனுமதி மறுத்துடுங்க. திருமணமாகி குழந்தை பிறக்கலைன்னு டென்ஷன் ஆகிக்கிட்டிருக்கறவங்க இன்னும் சில மாதங்கள் பொறுமையாய் இருந்தால் போதும். ராசியின்மீது குரு அமர்ந்து ஐந்தாம்வீட்டைப் பார்ப்பதால் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆறில் கேது இருப்பதாலும் அந்த வீட்டை ராகு பார்ப்பதாலும் வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் நன்மை உண்டாகும். ஆறாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் நண்பர்களுக்குப் பாராட்டும் பெருமிதமும் ஏற்படும். வளர்ந்த குழந்தைகளாக..திருமண வயதில் இருப்பவர்களாக இருந்தால் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் அவர்கள் விருப்பப்பட்டவரை மகிழ்ச்சியுடனும் உங்கள் ஆசியுடனும் கைப்பிடிப்பார்.

துலாம்
நான்  என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றால் உலகம்  உங்களைப் புரிந்து கொள்ளாது.  நல்ல வேளையா அருமையான புத்திசாலித்தனம் இருக்கு உங்க கிட்ட. பிழைச்சீங்க. தீராத கோபம் யாருக்கு லாபம்! எட்டாம் வீட்டினை புதன் பார்ப்பதால் உடல் நிலையில் நீங்கள் பயந்த அளவு எதுவும் கோளாறு இருக்காது. தலைக்கு வந்தது தலைப்பாவையுடன் போகும். பதினொன்றில் ராகு இருப்பதால் வெளிநாட்டுப் பயணத்தால் லாபம் ஏற்படும்.இரண்டில் சனி இருப்பதால் பேச்சில் அதீத கவனம் தேவை.ஐந்தில் கேது இருப்பதால் குழந்தைகளால் சிறு டென்ஷன்கள் ஏற்பட்டாலும் அவர்கள் நியாயமான வெற்றியடைவார்கள். பெருமை உண்டு.

விருச்சிகம்
சும்மா கலைடஸ்கோப் மாதிரி ஆயிடுச்சு இல்லையா வாழ்க்கையும்! காட்சிகள் மாறும் நாடகம் போலே காலம் மாறுகிறது. அதன் போக்கில் உடன் செல்லுங்கள்.2 ல் புதன் இருப்பதால் புத்தி சாலித்தனமான முடிவுகள் எடுப்பீர்கள்.வியாபாரத்தில் ஈடுபடும் ஆசை இருந்தால் உங்கள் ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து முடிவெடுக்கலாம்.பதினொன்றில் குரு இருப்பதால் அலுவல கத்தில் சம்பளம் உயரும்.மூன்றில் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் அனைவரையும் கவர்வீர்கள். இதனால் அலுவலகத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெருமையைப் பாராட்டுவார்கள். குடும்பத்தில் யாருக்கா வது காதல் திருமணம் நடக்க வாய்புள்ளது.

தனுசு
கொஞ்சம் தைரியமாய் முதலீடுகளை அதிகப்படுத்துங்க. வங்கிக் கணக்கில்  டிஜிட்கள் அதிகரிக்கும். விரயஸ்தானமாகிய பன்னிரண்டாம் வீட்டில புதன் இருபூபதால் கல்விக்காக நிறைய செலவு செய்வீர்கள். வார ஆரம்பத்தில் பேச்சு விஷயத்தில் சற்று அதிகக் கவனமாக இருங்கள். ஏனெனில் சந்திராஷ்டமம். ஏழரைச் சனியின் காரணமாகச் சற்று நிதானப்போக்கு நிலவும். இரண்டில்  சுக்கிரன் இருக்கிறார். இதனால் உங்கள் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடைகளில் பேசுவீர்கள். புகழ் கூடும். அலுவலகத்தில் பாராட்டும் விருதுகளும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 16.12.2016 வெள்ளி பகல் 1.06 முதல் 18.12.2016 ஞாயிறு மாலை 06.11 வரை

மகரம்
ராசியில்  சுக்கிரன். ஆடை அணிமணிகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அரசாங்கத்தின் மூலம் லாபம் கிடைக்கும். அல்லது அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த விஷயம் நடக்கும். ராசிக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் தன்னம்பிக்கை அதிகரித்து வெற்றிப் பாதையில் செல்வீர்கள். பதினோராம் வீட்டில் சனி இருப்பதால் லாபம் சற்று நிதானமாகவே வரும். வருமானத்தில் தடைகள் இருக்கலாம். எனினும் செவ்வாய் இருப்பதால் திடீரென்று எதிர்பாராமல் தடை விலகும்.
சந்திராஷ்டமம் : 18.12.2016 ஞாயிறு மாலை 06.12 முதல் 20.12.2016 செவ்வாய் இரவு 01.36 வரை

கும்பம்
ஒரு நாள் நடந்துகிட்ட மாதிரி மறுநாள் நடந்துக்க மாட்டீங்கறீங்களே. இன்னிக்கு காஷ்மீர்ப் பனி மாதிரி குளுகுளுன்ன பேசிட்டு நாளைக்கு டெல்லி வெயில் மாதிரி அப்பளம் வறுத்தீங்கன்னா உங்களை நம்பி ஒருத்தராவது நட்பு பாராட்டுவாங்களா? 12 ம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் சுக போகங்களுக்கான செலவு இருக்கும், கலைத்துறையில் இருப்பவர்கள் வெற்றிக்குக் காத்திருக்க வேண்டும். புகழும் மேனமையும் இந்த ராசிக்காரர்கள் அனைவருக்குமே கிடைக்கும். பத்தாம் வீட்டில் சூரியன் இருப்பதால் உங்களுக்கு அரசாங்க உத்யோகம் .. குறிப்பாக வங்கி வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குரு எட்டில் இருப்பதால் தன்னம்பிக்கை குறைய அனுமதிக்காதீர்கள்.
சந்திராஷ்டமம் :  20.12.2016 செவ்வாய் இரவு 01.37 முதல் 23.12. 2016 வெள்ளி பகல் 11.27 வரை

மீனம்
உங்க திறமை மற்றும் புத்திசாலித்தனம் உங்கள் பரந்த முதுகில் ஒருசின்ன ஷொட்டு வாங்கித் தரும். அதென்ன அப்படி ஒரு கோபம்? மம்மி பொறுத்துப்பாங்க. டாடி தாங்கிப்பாங்க…இந்தக் காலத்தில்  உங்க புருஷன் கூட சகிச்சுப்பாரும்மா. அக்கம்பக்கம், அலுவலகம் எல்லாம் தாங்கிக்க தலையெழுத்தா என்ன? 11ம்  வீட்டில் சுக்கிரன் இருப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் புகழும் பாராட்டும் விருதும் கிடைக்கும். பத்தாம் வீட்டில் சூரியன் இருப்பதால் தந்தை மூலமாக நன்மைகளும் லாபமும் கிடைக்கும்.11ம் வீட்டில் சுக்கிரன்  இருப்பதால் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்குப் பெருமையும் புகழும் கிடைக்கும். 11ம்  வீட்டுக்கும் ராசிக்கும் குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அதற்கான சுப செலவு செய்ய வேண்டி வரும். அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

More articles

Latest article