வார ராசிபலன்! (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

Must read

 மேஷம்
ஆரோக்ய வீடாகிய எட்டாம் வீட்டில் சனி இருந்தாலும் மூலிகைக்கும் மருத்துவத்துக்கும் உரிய புதன் அதே வீட்டில் இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதுபோல் பெரிய ஆபத்து ஏதும் இன்றி சாதாரண மருத்துவத்திலேயே குணமாகும்  ராசிக்கும் ஆரோக்ய ஸ்தா னத்துக்கும் உரிய செவ்வாய் லாப வீடாகிய 11ல் இருப்பதால் வைத்திய செலவுகளால் நஷ்டம் இருக்காது. சந்திராஷ்டமம். எனவே வார மத்தியில் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருங்க. ஆரோக்யம் பற்றிக் கொஞ்சம் கவலைப்படுங்க. அனுமான் சுலோகம் சொல்லுங்க
பரிகாரம்: சிவனுக்கு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய ஜபித்தால் சந்திராஷ்டமக் கடுமைகள் குறையும்
சந்திராஷ்டமம் :  25.12.2016 ஞாயிறு இரவு 10.54 முதல் 28.12.2016 புதன் காலை 10.29 வரை

ரிஷபம்
பத்தாம் வீட்டை ராகு பல காலமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  வெளியூர் வெளிநாடு என்று உத்யோகம் காரணமாக மனைவி/கணவர்.. குழந்தை குட்டிகளைப் பிரிந்து வாகனம் ஏற வேண்டி வரும். மனதைத் தயார் செய்து கொள்ளுங்கள். ஐந்தாம் வீட்டு குரு சுப விசேடங்களில் கலந்து கொள்ள உங்களை அனுமதிப்பார். ராசியைச் சூரியன் பார்த்துக்கொண்டிருப்பதால் உஷ்ணத்தால் உடல் பாதிப்பு ஏற்படலாம். நீங்கள் சந்திர உச்ச ராசிக்காரர் என்பதால் பிரச்சினை வராது. சஷ்டி கவசம் சொல்லுங்க. பல நாள் கனவுகள் பலித்திருக்கும். வாழ்த்துக்கள். பயமெல்லாம் காற்றில் திறந்து வைத்த கற்பூர பேக்கெட் மாதிரி காலியாகியிருக்கும். குழந்தைகளும் மகிழ்ச்சி  அளிப்பாங்க.
பரிகாரம்: காகத்துக்கு உணவு அளித்து திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராட முடிந்தால் நல்லது
சந்திராஷ்டமம் :  28.12.2016 புதன் காலை 10.30 முதல் 30.12.2016 வெள்ளி இரவு 08.33 வரை

மிதுனம்
மூன்றாம் வீட்டைச் செவ்வாய் ஏழாம் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் சகோதர சகோதரிகளின் கோபம்  அதிகரிக்கக்கூடும். அனுசரித்துச் செல்ல வேண்டி வரலாம். பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டாம் வீட்டைச் சுக்கிரன்  கருணையுடன் பார்த்துக் கொண்டிருப்பதால் குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் காதல் நிறைவேறித் தடைகளை வென்று திருமணம் நிறைவேறும். ஏழாம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே உள்ள சிறிய மனத்தாபங்களை அவர் சற்று அதிகரித்துவிட வாய்ப்புள்ளது. இடம் கொடுக்காதீர்கள்.
பரிகாரம்: முருகருக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வஸ்திரம் மற்றும் வேல் சாற்ற வேண்டும்

கடகம்
சுக்கிரனின் சுகமான பார்வை  உங்கள் மீது வீசுகிறது. கலைத்துறைகளில் ஆர்வம் வரும். கலைத்துறைகளில் ஏற்கனவே உள்ளவர்களுக்குப் புகழும் பெருமையும் தேடி வரும். அழகுணர்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகளும் சயன சுகமும் கூடுதலாகும். ஆடை அணி மணிகளிலும் அலங்காரப் பொருட்கள் மீதும் ஆசையும் ஈடுபாடும் அதிகரிக்கும். சுக்கிரன் எதிர்பாலி னத்தினரைக் கவரச் செய்வார். இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் நீங்கள் நல்ல எண்ணத்துடன் ஏதாவது சொல்ல முனைந்தாலும்கூட அது மற்றவர்களுக்குத் தவறாகப்படக்கூடும். கவனமாகப் பேசுங்கள். பேரன்ட்ஸ் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத நன்மைகளை அளிப்பாங்க. எல்லாவற்றையும்விட  உங்கள் காதல் வாழ்க்கை அமோகம்.  மனதில் மகிழ்ச்சி நயாகராதான்.  வியாபாரத்தில் லாபம் அபாரம். ராமாணம் படிங்க.
பரிகாரம்:  துர்க்கை அம்மனுக்குப் புடவை சாற்றி கருப்பு உளுந்தை துர்க்கை சன்னிதியின் அளியுங்கள்

சிம்மம்
பன்னிரண்டாம் வீட்டுக்கு சுக்கிரனின் பார்வை இருப்பதால் ஆடை அணி மணிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக சற்று அதிகப்படியான பணம் செலவு செய்வீர்கள். ஆறாம் வீட்டை குரு பகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்கள் நெருங்கிய நட்பு வட்டா ரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். அவர்கள் தெய்வீக மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள். உங்களுக்கு அவர்களின் உதவியும் ஆலோசனையும் கிட்டும். இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு உங்கள் வாக்கை நல்ல முறையில் நிறைவேறச் செய்வார். நல்ல விதமாகப் பேச வைப்பார்.
பரிகாரம்: செவ்வாய்க் கிழமை ராகுகால விளக்கு ஏற்ற வேண்டும். விநாயகரை தினமும் வணங்குவது நல்லது.

கன்னி
ராசியின்மீது குரு இருப்பதால் அவ்வளவாகப் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும் குரு அமர்ந்திருக்கும் இடத்தைவிட அவர் பார்க்கும் இடங்களுக்குத்தான் முக்கி யத்துவம் உள்ளது என்ற வகையில் ஐந்தாம் வீட்டுப் பார்வை குழந்தைகளுக்கும் ஏழாம் வீட்டுப் பார்வை கணவர் அல்லது மனைவிக்கும் ஒன்பதாம் வீட்டுப் பார்வை தந்தைக்கும் நன்மைகளைச் செய்யும். அந்த ஒன்பதாம் வீடு செளபாக்கியத்தைக் குறிக்கும் வீடு என்பதால் திடீர் அதிருஷ்டம் ஏற்படும். பன்னி ரண்டாம் வீட்டைக் கேது பார்ப்பதால் விரக்தியான மன நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவசரப் போக்கு வேண்டாமே! யோசியுங்க. அப்புறம் எதையும் செய்யலாம். நல்லவங்களோட ஆலோ சனையை நாடினால் மட்டும் போதாதும்மா…வரிக்கு வரி பின்பற்றவும் வேண்டும்
பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லி விஷ்ணு கோயிலில் பச்சைப் பயிறு அளியுங்கள்

துலாம்
இரண்டாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூட்டம்போட்டு அமர்ந்திருக்கின்றன. சந்திரன் நகர்ந்து விடுவார் எனினும் அவர் இரண் நாட்கள் அங்கிருப்பதால் அமர்ந்திருப்பதால் வார்த்தைகள் மென்மையாகத் தீவிரமின்றி வரும். சனி அமர்ந்த ஢ருப்பதால் சற்று சுள்ளென்று பேசிவிட்டுப் பிற்பாடு மனசுக்கள் வருத்தப்படுவீர்களே தவிர நேரடியாக மன்னிப்புக் கேட்க மனது வராது. புதன்  அமர்ந்தி ருப்பதால் அறிவாற்றல் மிக்க பேச்சு வெளிப்படும். நீங்கள் சிறப்பாகக் கல்வி கற்றவர் என்றால் உங்கள் பேச்சில் உங்கள் அது பற்றிய நிபுணத்துவம் வெளிப்பட்டு உங்கள் சிறப்பை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும். திடீர் அதிருஷ்டம் பாட்டுக்கு தானாக வந்து கதவைத்தட்டிப் பொன் மூட்டையை இறக்கி வெச்சுட்டுப் போயிடும்! குட் லக். செம பிரயாணங்கள் இருக்கும். அதிருஷ்டக்கூடையை உங்கள் தோளில்தான் இறக்கி வெக்கப்போகுது காலம். சிவன் சுலோகம் சொல்லுங்க
பரிகாரம்: குருவாயூரப்பன் கோயிலில் மூன்று நெய்தீபங்கள் ஏற்றி வியாழக்கிழமை மஞ்சள் இனிப்பு வழங்குங்கள்
விருச்சிகம்
உங்கள் ராசியின்மீது இரண்டு கிரங்கள் அமர்ந்திருப்பதாலும் சந்திரனும் இவர்களுடன் இரண்டு நாட்கள் அமர்வதாலும்  உங்கள் குணமும் பேச்சும் ஒரு நாளைக்கு இருந்தாற்போல் மற்றொரு நாள் இருக்காது. சனி இருப்பதால் சற்று முரட்டு சுபாவம் உங்களையும் மீறி வெளிப்படும். புதன் இருப்பதால் புத்திசாலித்தனமான காரியங்கள் செய்தாலும் சேர்க்கை காரணமாகவும் பகைகாரணமாகவும் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த வீட்டில் சந்திரன் இருப்பதால் அவரை பலப்படுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். ரொம்ப நாள் கழிச்சு நெருங்கிய உறவுக்காரங்களை சந்திப்பீங்க. நிறைய வழிபாட்டு இடங்களுக்குப் போக ஆரம்பிப்பீங்க. முன்பு பேசினதுபோல் இப்போ கட்டவிழ்ந்து பேச வேண்டாம்
பரிகாரம்: சிவன் கோயிலில் தயிர் அன்னம் அல்லது வெள்ளை இனிப்பை விநியோகம் செய்யுங்கள்

தனுசு
ராசியின்மீது சூரியன் அமர்ந்திருப்பதால் உஷ்ண சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டாம் வீடாகிய வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பேச்சில் மிகுந்த கவர்ச்சி அம்சம் வெளிப்படும். சிலர் மேடைப்பேச்சிலோ பேச்சுப் போட்டியிலோ சிறந்து விளங்கிப் பாராட்டும் கைதட்டலும் பெற வாய்ப்புள்ளது. குடும்பதிலும் அலுவலகத்திலும் எதிர்பாலி னத்தினரின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் ராகு இருப்பதாலும் கேது அந்தவீட்டைப் பார்ப்பதாலும் தந்தையின் உடல் நிலையையும் அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள நல்லறவையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஸ்கேல் வெச்சு அளந்து பேசுங்க. காதலர்/ காதலி உயர் நிலை அடை வார். காதல் பலித்து உடனே மோதிரம் மாற்றப்போறீங்க. மகாலட்சுமி சுலோகம் சொல்லுங்கள்
பரிகாரம்: கோதுமையால் செய்த பண்டங்களை தானம் செய்வது நல்லது. ராமரை வணங்குங்கள்

மகரம்
ராசியின் மீது சுக்கிரன் அமர்ந்திருப்பதால் உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். ராசியை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியாகும். மனதில் நல்லெண்ணங்கள் மேலோங்கி அவற்றைப் பரப்பவும் செய்வீர்கள். இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தினருடன் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். கூடவே கேதுவும் இருப்பதால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்றாலும் ராசிக்கு, குரு பார்வை இருப்பதால் உங்கள் பெருந்தன்மையும் நல்ல செய்கைகளும் எல்லா மனத்தாபங்களையும் சரிக்கட்டிவிடும்.
பரிகாரம்: சுந்தரகாண்டம் படிக்கலாம். பிள்ளையார்ப்பட்டி சென்று அங்கு கணபதி ஹோமம் செய்தால் பெரிய நற்பலன் உண்டு

கும்பம்
ராசியின்மீது செவ்வாய் மற்றும் கேது  அமர்ந்திருப்பதால் சற்று அரக்க குணம் உங்களைப் பிடித்தாட்ட வாய்ப்புள்ளது. சற்று பணிவும் மென்மையும் இருந்தால் நல்லது. உங்கள் ராசி நாதனாகிய சனி பகவானும் அந்த குணத்தைத்தான் அளிப்பார். இரண்டாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் என்பதோடு பேச்சில் மென்மை கூடுவதால் மேற்சொன்ன குணங்கள் சற்று மென்மையாகும். இரண்டாம் வீட்டு குரு பார்வை காரணமாக உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கலைத்துறையைச் சேர்ந்த வர்களுக்குப் பொறுமை தேவை. திருமணத்திற்கு நாள் குறிச்சுட்டாங்களாம்மா?  மஜாதான். பரவா யில்லை. முன்பைவிட அடக்கி வாசிக்கறதால உங்க மேல் ‘அவர்  வைத்திருக்கும் மதிப்பு மேலும் மேலும் கூடும்.
பரிகாரம்: செவ்வாயன்று துவரை சாதம் விநியோகிக்க வேண்டும். சஷ்டி கவசம் சொல்லுங்கள்

மீனம்
பன்னிரண்டாம் வீட்டில் உள்ள கேது சற்று விரக்தியான சிந்தனைகளையும் மன ஓட்டங்களை யும் அளித்தாலும்கூட ராசியை குரு பார்ப்பதால் அவையனைத்தும் ஆன்மிக சிந்தனைகளாக மாறி உங்களுக்கு நன்மைகளையே ஏற்படுத்திக் கொடுக்கும். பதினோராம் வீட்டில் சுக்ரன் இருப்பதால் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய நன்மைகள் உண்டாகும். பத்தாம் வீட்டு சூரியன் அரசாங்க உத்யோகம் வாங்கித் தருவார். வேறு கம்பெனி மாற நினைச்சீங்க. எப்பிடி இருக்கு புது அலுவல கம்? ஆபீசும் பதவியும் முன்பைவிட  ரொம்பவும் அழகாய் மதிப்பாய் இருக்கில்ல… சந்தோஷம். விஷ்ணு சுலோகம் சொல்லுங்க
பரிகாரம்: ஏழை  எளியோருக்கு உடைகள் உணவு போன்றவை கொடுக்க வேண்டும்
சந்திராஷ்டமம் : 23.12.2016 வெள்ளி பகல் 11.28 முதல் 25.12.2016 ஞாயிறு இரவு 10.53 வரை

More articles

Latest article