மேஷம்

ஆறில் குரு.கடன் அனுமதிக்காகக் காத்திருந்தவர்களுக்கு அது சிரமமின்றிக் கிடைக்கும்.  எட்டாம் வீட்டில் புதன் இருப்பதால் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதிலேயே குணமடை வீர்கள். பதினென்றில் கேது இருப்பதால் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் வரும்.பத்தாம் வீட்டிற்கு குரு பார்வை உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடை.க்கும். புதன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தந்தையின் உடல் நலன் எந்த அளவு தீவிரமாக இருந்தாலும் அந்த அளவு பிரச்சினையின்றி எளிதாக குணமாகி நிம்மதி அளிக்கும். உங்க கிட்ட ஒரு விஷ யத்தைப் பாராட்டியே தீரவேண்டும் மேஷம்ஸ்! தலைகால் தெரியாமல் குதிக்க வேண்டிய… அல்லது தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் காட்டிக்கறீங்கறே! அது! இப்போ முதல் வகை கால கட்டம்.
ரிஷபம்

பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்க. கீழே வேலை பார்க்கறவங்களைக் கொஞ்சம் கண்காணியுங்க. நம்பறதுக்கும் ஒரு அளவு வேணும் இல்லையா?ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் தந்தையின் வாழ்வில் திடீர் நிகழ்ச்சி ஒன்று நிகழும். அது நல்ல நிகழ்ச்சியாகவே இருக்கும்.பத்தாம் வீட்டில் கேது இருப்பதால் உங்கள் அறிவாற்றலால் உத்யோகம் சிறக்கும்.ராசியைச் சனி பார்ப்ப தால் அதிகம் உழைக்க வேண்டி வரும். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற உணர்வு  ஏற்படும். ஆனால் அது சற்று அதிகத்தன்னம்பிக்கை அல்லது கற்பனை உணர்வு. ஏழாம் வீட்டில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதமோ வன்மையான சண்டையோ வராமல் பார்த்துக் கொண்டால் இருவரும் பிழைக்கலாம். ஐந்தாம் வீட்டில் குரு இருப்பதால் குழந்தைகள் புத்திசாலித்தனமான செயல்கள் செய்து பாராட்டும் புகழும் பெறுவார்கள். மற்றவர்களின் கல்விக்கு உதவி செய்து புண்ணியமும்  பாராட்டும் கிடைக்குங்க.
மிதுனம்

எட்டாம் வீட்டில் செவ்வாய்  இருப்பதால் அறுவை சிகிச்சை தவிர்க்கப்படும். இதன் காரணமாக ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்க வழக்கங்கள் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். உல்லாசப் பயணத்துக்கு வரும்படி யாராவது உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்க..  உங்களால் தவிர்க்க முடியக்கூடிய பயணத்திற்கெல்லாம் ‘நோ’ தான். வேறு வழியில்லாத அலுவலகப் பயணத்தை மட்டும் ஒப்புக்குங்க. அபார்ட்மென்ட் வாங்கப் போறீங்க. கங்கிராட்ஸ்.
கடகம்

புது வண்டி வாங்கப் போறீங்க. பார்த்து ஓட்டுங்க. அலுவலகத்தில் புதிய பொறுப்பு.  அதிக சம்பளம். அபரிமிதமான மரியாதைன்னு உங்களை உயரத்தில் தூக்கி  வைப்பாங்க. வேலைதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். ஸோ வாட் என்று கேட்கும் ரகமாச்சே நீங்க! ஐந்தில் சனி இருப்பதால் குழந்தைகளின் முன் னேற்றம் சற்று மெதுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனினும்  எந்தத் தொல்லை யும் வந்த வேகத்தில் சரியாகும்.  ஒன்பதை குரு பார்க்கிறார். தந்தைக்கு லாபங்கள். தந்தை யால் லாபங்கள் ஆகியவை ஏற்படும். இதுவே அதிருஷ்ட வீடு என்பதால் உங்களுக்கும் திடீரென்று அதிருஷ்ட வாய்ப்பு ஏற்படும்.
சிம்மம்

ஆமாம்… தெரியாமத்தான் கேட்கறேன்.. அப்டியாவது லோன் போட்டே ஆக ணுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன், ப்ளீஸ்… இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு! கவலையைத் தூக்கி டஸ்ட் பின்னில் போடுங் கப்பா. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம். நேரம் காலம் பார்க்காமல் கணிணியின் காலடியில் உட்கார்ந்து உழைக்கறீங்களே அந்தக் கண்ணுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கக்கூடாதா? உங்க ரேஷன் கார்டில் இன்னொரு பெயர் சேரப்போகுது. கன் ஆன்! செம ஜாலிதான்.
கன்னி

ராசியின்மீது குரு பகவான் அமர்ந்திருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அவை உங்களின் திறமை யையும் புகழையும் உலகிற்குப் புரிய வைக்கும். ஐந்தில் உள்ள சுக்கிரன் குழந்தை களைப் புகழ் பெற வைப்பார். குறிப்பாகக் கற்பனை சார்ந்த  துறைகளான நடனம் நாட்டியம் ஓவியம் போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் மிகச் சிறந்து விளங்கு வார். ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் புகழ் அடைவார்கள்.பதினோராம் வீடாகிய லாபஸ்தானத்தைச் செவ்வாய் பார்ப்பதால் மருத்துவர்களுக்கும் கட்டடத்துறையி இருப்பவர்களுக்கம்  லாபம் பெருகும்.ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் புகழ் அடைவார்கள். அதுவும் திடீர்ப் புகழ் அடைவார்கள்.
சந்திராஷ்டம்: 10.12.2016 சனிக்கிழமை காலை 04.52 முதல் 12.12.2016 திங்கள் காலை 07.16 வரை
துலாம்

சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க சரி. உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க…சரி சரி சரி. அதுக்காக உழைப்பதற்கு ஒரு அளவில்லை? எட்டாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். எதற்கெல்லாம் பயந்தீர்களோ அவை சரியாகும்.  வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வராமல் காத்துக் கொள்ளுங் கள்.  முதுகு பெண்ட் ஆகிற வரைக்குமா உழைக்க முடியும்? கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்க. சரியா?  ஓகே?
சந்திராஷ்டம் : 12.12.2016 திங்கள் காலை 07.17 முதல் 14.12.2016 புதன் காலை 09.44 வரை
விருச்சிகம்

எதிரிகளுக்கு நீங்க சிம்ம சொப்பனமாகத்தான் ஆகிவிடுவீங்க…நான்கில் கேது என்பதாலும் ராகு பார்ப்பதாலும் வெளிநாட்டில் கல்வி கற்க எண்ணம் கொண்ட வர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். குரு பகவான் நல்ல நிலையில் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் லாபம், சம்பாத்தியம், நிதி நிலைமை போன் விஷயங்களில் பிரச்சினையே இருக்காது. நான்காம் வீட்டில் கேது இருப்பதால் கடன் பெற்றுப் புதிய வீடு வாங்குவீர்கள். மருத்துவக் கல்வி பயிலுபவர்கள் சிறந்த முறையில் வெற்றி பெறுவீர்கள்.இரண்டில் புதன் .இருப்பதால் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். இதன் காரணமாக அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம் : 14.12.2016 புதன் காலை 09.45 முதல் 16.12.2016 வெள்ளி பகல் 01.05 வரை
தனுசு

உங்க வீட்டில் யாருக்கோ திருமணம். சீமந்தம் இன்ன பிற விசேஷங்கள் வருதே ஆஹா ..ஜாலி,,. செம ஷாப்பிங் உண்டு. புது உடைகளையெல்லாம் எடுத்து ரெடி யாய் அயர்ன் செய்து வையுங்க. தாயார் கல்வி வாகனம் இவற்றைக் குறிக்கும் நான்காம் வீட்டினை முழு சுப கிரகமாகிய குரு பகவான் பார்க்கிறார்.  நீங்கள் புது மனை புகுவிழா செய்யப்போகிறீர்கள். தந்தைக்கு இவ்வளவு காலம் காத்திருந்த தடை ஒன்று விலகுவதன்மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நன்மையும் லாபமும் ஏற்படும். மூன்றில் கேது இருப்பதால் மூத்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது போல் தோன்றினாலும் விரைவில் சரியாகும். பன்னிரண்டாம் வீட்டில் இரண்டு கிரகங்கள் இருப்பதால் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் பயனுள்ள செலவுகளாகவே இருக்கும்.
சந்திராஷ்டம் :  16.12.2016 வெள்ளி பகல் 01.06 முதல்  18.12.2016 ஞாயிறு மாலை 06.11 வரை
மகரம்

பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக்ல அழகாய்ப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்களே. மைக்கில் மட்டுமல்லாமல் எங்கேயும் எப்போதும் யாரிட மும் எந்த சூழலிலும் கவனமாய்ப் பேசுங்க. ஹஸ்பெண்ட் / ஒய்ஃ கிட்ட அனல் கக்க அனுமதி ’நோ ’ இரண்டில்  கேதுவும்  ராகுவின் பார்வையும் இருப்பதால் குடும்பத்தில் யாரேனும் வெளிநாடு செல்வார்கள்.ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். இது வரை தள்ளிப் போய்க் கொண்டிருந்த கோயில் பயணங்கள் இப்போது அமையும். குழந்தைகளுக்கு மங்களகரமான விஷயங்கள் நிறைவேறும். படிப்பில் வெற்றிபெற்றுப் பரிசுகளுதம் பதக்கங்களும் வாங்கி, தாங்களும் பெருமைப்பட்டு உங்களையும் பெருமைப்படுத்துவாங்க.
கும்பம்

எதுக்கு வேண்டாத விஷயங்களுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க? கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும் மேம். கவலைப்படாதீங்க. என்னது? குழந்தைங்க டென்ஷன் பண்றாங்களா? வாட்!! அவங்க உங்களையா நீங்க அவங்களையா? நாலாம் வீட்டிற்கு குரு  பகவானின் அருட் பார்வை புனித மாக இருப்பதால் புதிய வீடு அல்லது வாகனங்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு அலுவல கத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கட்டாயம் அவருக்கு உண்டு. குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பதால் சுபமான செல வுகள் ஏற்படும்.திருமணம் போன்ற சுப காரியங்களுக்காக செலவழிப்பீர்கள். அதனால் நன்மையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் இருப்ப தால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆனால் அவரின் பலம் காரணமாக அவை தீமை செய்யாது.
மீனம்

ராசியை குரு பார்ப்பதால் தொட்டதெல்லாம் வெற்றியாகவும் லாபமாகவும் முடியும். பதினொன்றாம் வீட்டில் சுக்கிரன் சிம்மாசனமிட்டிருப்பதால் கலைத்துறையினருக்கு லாப மழைதான் போங்க. அதே வீட்டில் செவ்வாய் இருப்பதால் எக்ஸ்பிரஸ் வேக திடீர்  லாபம்தான். ? குடும்பத்தில் சின்ன சின்ன மின்னல்கள் தோன்றுவது இயற்கைதான்! எல்லாம் தற்காலிகம்தான் சகோ! நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது. எங்கும் எதிலும் காத்துக்கிட்டிருந்த நன்மையெல்லாம் கனியப்போகுது. முன்னோர் வழியில் ஏதாவது சொத்து வரும்  மேடம். உங்களை எந்தத் திறமை இல்லாதவர்னு எல்லாலும் கிண்டல் செய்துக்கிட்டிருந்தாங்களோ அதே திறமையில் வைராக்யமாய் ஜெயித்துக் காட்டத்தான் போறீங்க பாருங்க, ஹப்பாடீ.. ஒரு வழியா தன்னம்பிக்கை வந்துச்சே..