மேஷம்

செலவுங்க கொறைஞ்சு மனசுல நிம்மதி நெறையும். வெளியூர் வெளிநாடு போறதுக்கான சந்தர்ப்பங்கள் ஒங்களைத் தேடி வரும். பர்சனலாவும் போவீங்க… ஆபீஸ்லயும் அனுப்புவாங்க. ஒய்ஃப் வழியில ஆதரவு பெருகும். பிசினஸில் பழைய பாக்கிங்க வசூலாகும். வீட்டுல திருமணம் சம்பந்தமான பேச்சுக்களால் சந்தோஷம் நிலவும். ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு முன் நல்லாப் படிச்ச பிறகு கையொப்பம் இடவும். புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும்.

ரிஷபம்

மனசுல நினைச்சதையும் பிளான் பண்ணினதையும் முடிச்சு நிம்மதியடைவீங்க. உங்க பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவங்க உறுதுணையா இருப்பாங்க. அதிகாரப் பதவியில் இருக்கறவங்க அறிமுகமாவார்கள். சொத்து பிரச்சினையில் ஒன்று தீரும். பிசினஸில் லாபம் அதிகரிக்கும். ஆஃபீஸ்ல அதிகாரிங்களுக்கு நெருக்கமாவீங்க. ஒய்ஃபோட ஒத்துழைப்பு சந்தோஷம் தருமுங்க. எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீங்க. நண்பர்கள் ஹெல்ப் கிடைச்சுடும். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராக சான்ஸ் கொஞ்சம் இருக்குங்க. உறவுக்காரங்களோட சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீங்க. அல்லது கோவிலுக்குப் போவீங்க. வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கப் புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீங்க. புதிய தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும். ஹோப் யூ ஆர் ஹாப்பி.
சந்திராஷ்டமம் : மே மாதம் 8ம் தேதி முதல் மே மாதம் 10ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

மிதுனம்

திடீர்த் திருப்பங்கள் நிறைஞ்ச வாரங்க. பல வகைகளிலும் ஹாப்பியான வீக். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். உங்க பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். ஃபேமிலியில் சில குழப்பங்கள் இருந்துக்கிட்டே இருக்கும்னாலும் அது பெரிய மண்டைக்குடைச்சலா ஆகாது. பயணங்களைத் தவிர்த்துடுங்க. உங்க சகோதர, சகோதரிகளால் நன்மை எதுவும் கிடைக்காது. பட் அதே சமயம் பிராப்ளம்ஸ்ஸும் எதுவும் வராது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீங்க. பண வரவுக்கு குறைவு இராது. கடந்த சில தினங்களாக இருந்துக்கிட்டிருந்த அலைச்சல், கோபம், டென்ஷன் யாவும் நீங்கும். ஃபேமிலியில நிம்மதி உண்டு. கடனாக் குடுத்த பணத்தை வசூலிப்பீங்க. பிசினஸில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீங்க. ஆஃபீஸ்ல புது அதிகாரி உங்களை மதிப்பார். குட் குட்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 10ம் தேதி முதல் மே மாதம் 12ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

கடகம்

எதிர்பார்த்த தனவரவும் உண்டு ஒய்ஃப் மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைச்சுடும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் வீட்ல சந்தோஷம் பெருகும். கொஞ்சம் வயசுல பெரியவங்களா இருந்தா ஒங்களுக்கு வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்ஞ்சு சந்தோஷப்படுவீங்க. இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபார பர்ப்பஸ்க்காக தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீங்க. சில குறுக்கீடுகளையும் சந்திப்பீங்க. மனம் தளராமல் அவற்றை கையாண்டு வெற்றி கொள்ளத் தயங்காதீர்கள். டோன்ட் ஒர்ரி. யூ வில்.

சிம்மம்

சந்தோஷம் நிறைஞ்ச வாரங்க. இந்த வாரம். வீட்ல மகிழ்ச்சி பொங்கி மங்கல காரியங்கள் ஈடேறும். எதிர்பாராத தனவரவும் உண்டு. உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் ஒய்ஃப்க்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. பிசினஸில்வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். ஆஃபீசில்அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பெண்மணிகள் ஹஸ்பெண்டின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீங்க. மாணவ மணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். விளையாட்டுக்களைத் தவிர்த்திடுங்கள். திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பாங்க. எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். பிசினஸில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். வெரி குட்.

கன்னி

எதையும் ஆலோசிசிச்சு செய்யறது நல்லது. பணியில் உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் வாரங்க. கலைத்துறையினர் பெயரும் புகழும் பெறுவதற்கான முயற்சியில் தீவீரமாக ஈடுபடுவீங்க. சில வாய்ப்புகள் உங்களை வந்தடையும். மத்தவங்களுக்க ஒங்க மேல பொறாமை எழலாம். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். குழந்தைங்க பற்றி உங்களுக்கிருந்த பயம் தீரும். மற்றவர்களுக்கு நன்மை செய்து சந்தோஷப்படுவீங்க. பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீங்க. மனதில் அவ்வப்போது தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்தமுடியாது. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். ப்ளீஸ்.

துலாம்

விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரங்க. ஆஃபீசில் சக ஊழியர்களிடம் விவாதம் வேணாமே. ஒங்களுக்கு சமுதாயத்துலயும், ஆபீஸ்லயும் மதிப்புக் கூடும் வாரங்க. பிரமோஷன் கிடைக்கக்கூட சான்ஸ் இருக்கு. பணவசதி திருப்திகரமாக இருந்தாலும், பிள்ளைங்களால தேவையற்ற செலவுகள் ஏற்பட்டுக் கையிருப்பைக் குறைக்கும். வெளியில போறபோது எடுத்துக்கிட்டுப் போற பொருள்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளணுங்க. சின்னச்சின்ன பிராப்ளம்ஸ் வரும்தான். ஆனாலும் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பேரன்ட்ஸ்ஸோட விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பிசினஸில்புது இடத்திற்கு கடையை மாற்றுவீங்க. விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். ரியல் பெனிஃபிட்.

தனுசு

ஆஃபீசில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீங்க. வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. ஷ்யூர். புதிய அத்தியாயம் துவங்கும் வாரங்க. பழைய கடன்கள் சுலபமாக வசூலாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டாலும், தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். பிசினஸில்புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீங்க. உடன் பிறப்புக்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. ஹெல்த் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில், ஆஃபீசில் திருப்தி உண்டாகும். ரியல் ஸாடிஸ்பேக்ஷன்.

மகரம்

எந்தக் காரியத்தையும் ஆழமாக சிந்தித்து செயல்படுத்தவும். அதே நேரம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த விவகாரங்கள் சாதகமாக முடியும். உங்களுக்குச் சேர வேண்டிய பணம் எவ்வகையிலாவது வந்து சேரும். கடந்த இரண்டு வாரங்களாகக் ஹஸ்பென்ட்-ஒய்ஃப்க்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழையபிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீங்க. குதூகலமான வாரங்க. நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து ஹாப்பியான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். இடைவிடாத வேலைபளு காரணமாக நேரத்துக்கு சாப்பாடு சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.

கும்பம்

குடும்பத்திற்காக உங்கள் சந்தோஷங்களை தியாகம் செய்வீங்க. சிலருக்கு ஒய்ஃப், மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அரசு ஆதரவு, அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கும் நான் வெஜ் விரும்பிகளுக்கு டைஜஷன் தொல்லைகள் எழலாம். சிலருக்குப் பணியில் இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை தீரும். எனவே துன்பம் வரும் போது துவண்டு போயிடாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேறும் ஆர்ட் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குங்க. சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீங்க. ஃபேமிலியில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. ஆஃபீசில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நெவர் டூ இட்.

மீனம்

இனிய செய்திகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரங்க. பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு ஜாப் கிடைச்சுடும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம். அன்புக்கு இனியவர்களால் உங்கள் கண்ணீர் துளிகள் துடைக்கப்படலாம். சோம்பல் அகற்றி சுறுசுறுப்பாய் இருப்பது நல்லது. உங்களது அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய உழைப்பு, பிறரால் கவனிக்கப்பட்டு, ரொக்கப் பரிசுகள் வழங்கப்படலாம். பிசினஸில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைச்சுடும். பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தடைகள் நீங்கும். ஹப்பாடா. ரிலீஃப். அறிவால் சாதிக்கும் வாரங்க. கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீங்க. சகோதர வகையில் பயன் அடைவீங்க. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 4 ம் தேதி முதல் மே மாதம் 6ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.