வார ராசிபலன் 14-07-17 முதல் 20-07-17 வரை : வேதா கோபாலன்

 

மேஷம்

கல்விக்காக நிறைய செலவை செய்வீங்க.  அது உங்களுடைய கல்வியாகவும் இருக்கலாம் மற்றவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். ஏன் முன்பின் தெரியாதவங்களின் கல்வியாய் இருக்கக்கூட வாய்ப்புண்டு. வெளியூர் வெளிநாடு செல்ல நிறைய வாய்ப்பு இருக்கு. எதையும் கவனத்துடன் இரண்டு முறை சரிபார்த்து செய்யுங்க. குறிப்பா அலுவலக வாசிகளுக்கு இந்த வாக்கியம் மஞ்சள் நிற ஹைலைட். திருமணமே வைபோகமே. கண்ணுக்கெட்டின தொலைவு வரை காணாமல் போயிருந்த சுப வேளை வந்தே விட்டது.

ரிஷபம்

வரவு எட்டு டாலர், செலவு பத்து  டாலர்னு  செய்யாதீங்க. ரகம் ரகமாய் .. டிசைன் டிசைனாய்.. வகை வகையாய் செலவுகள் வரப்போகுது. நீங்களா வேற தாம் தூம்னு வேட்டு விடாதீங்க. அதுவா வரட்டும். ரெடியா வாசலைப் பார்த்துக்கிட்டிருங்க. ஃப்ரெண்ட்ஸ்தான் இப்ப உங்களுக்கு  சகலமும். கிண்டல் தொனியில்லைங்க. அவங்க மேல சத்தியமா நிஜம். டாடியின் ஆரோக்யத்தை மட்டும் கவனிச்சுக்குங்க,  இனஃப். வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடு  என்று பயணம் செய்யும் நீங்கள் ஓய்வு பற்றி யோசிப்பீங்க. கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்.

மிதுனம்

புது வாகனம்.. புது வீடு .. என்று எதாவது வாங்க சான்ஸ் இருக்குங்க. அம்மாவுக்கு அவங்க அப்பா வீட்டிலிருந்து சொத்தில் பங்கு கிடைக்கும்… ஞாயிறு சினிமா, திங்கள்  பீச், செவ்வாய் சர்க்கஸ், புதன் டிராமா என்று ஜாலியாகப் போவீர்கள்.  எனினும்…திடீரென்று ஆன்மிக ஈடுபாடு வரும். அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது. யார்கிட்டயும் சண்டை போடமாட்டேன்னு 100 முறை இம்பெசிஷன் எழுதுங்க. சகோதர சகோதரிகள் இப்போதைக்கு பயங்கர எனிமிகளாய்த் தெரிவாங்க, கிளறி நிரந்தமாக்காதீங்க. அப்டியே விடுங்க, சரியாகும்.

கடகம்

மனதில் உறுதியும் பேச்சில் இனிமையும் கூடி மற்றவர்களுக்கு நன்மை செய்வீங்க. அழகு சாதனங்களுக்கும் அலங்காரப் பொருட்களும் பணம் ஓடும். வெளியூர்ப்பயணம் சந்தோஷம் குவிக்கும். சகோதர சகோதரிகளிடம் வாக்கு வாதம் இல்லாமல் பார்த்துக்குங்க. புதிய வேலை கிடைக்கும். அதற்குப் புது காரில் போவீங்க. சிலருக்குப் புதுக் கணவர் அல்லது புது பாப்பா வரலாம். வியாபாரத்துல ஈடுபட்டிருக்கறவங்களுக்கு நன்மையும் லாபமும் அதிகமாகும்.

சிம்மம்

இத்தனை காலம் இருந்து வந்த டென்ஷனும் கவலையும் பயமும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று சற்றுத் தள்ளிப் போய்க்கொண்டிருந்தாலும் இப்போதே உறுதியாகும். மேமாதம் வெற்றியாகும். பணம் புரளும். குழந்தைகளால் சந்தோஷம் கூரை வரை குவியும். அப்பா அம்மா எப்போதும் இல்லாத அளவு அனுசரணையாய் இருப்பாங்க. உடன் பிறந்தவர்கள் முன்பைவிட அன்பாய் இருப்பாங்க. புதிய வேலை மாறணுமா? தசை புக்தி  அனுமதிச்சால் ஜமாயுங்க. கடன்கள் அடையும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை

கன்னி

புது குழந்தை அல்லது புது அலுவலகம் பார்ப்பீங்க…. அது இது எதுன்னு நாலாபக்கங்களிலும்  மழைச்சாரல் போல வழி கண்டுபிடிச்சுக்கிட்டு பணம் உங்க அக்கவுன்ட்டை நோக்கிப் பாய்ந்து வரும். கபால்னு பிடிச்சு டபால்னு சேவ் பண்ணிக்குங்க. ஸ்டாக்மார்க்கெட்டி இது மாதிரி ரிடர்ன் பார்த்ததில்லையே நீங்க? என்ஜாய். வீடு மாறி.. வாகனம் மாற்றி.. எல்லா வாகனத்திரும் பிரயாணம் செய்வீங்க. ஆனா உங்களுக்கா அலுக்கும்? புது பிசினஸ் ஆரம்பிக்க நினைக்கறவங்களுக்கு இது சரியான நேரம், ரெடி ஸ்டெடி .. ஸ்டார்ட்..

சந்திராஷ்டமம்: ஜூலை 16 முதல் ஜூலை 18 வரை

துலாம்

எத்தனையோ நாட்களாய்.. மாதங்களாய்… வருடங்களாய் .. மனதை வாட்டிக்கொண்டிருந்த கவலைகளெல்லாம் பறந்தே போகும். வெளியூர் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பேக் செய்ய ஆரம்பிச்சிருப்பீங்களே. பேச்சில் பணிவும் அடக்கமும் தேவைன்னு எதிரில் உள்ள சுவரில் எழுதி வெச்சுக்குங்க. எப்போதையும்விட அலுவலகப் பொறுப்புக்கள் தலைமேல் ஏறி உட்காரும். ஆபீஸ் வீடு இரண்டு இடங்களிலுமே எழுதினால் இன்னமும் நல்லது. மம்மிக்கு திடீர்ப் புகழ் பரிசு எல்லாம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 18 முதல் ஜூலை 21 வரை

விருச்சிகம்

வியாபாரிகளுக்கு திடீரென்று லாபம் நிறைய வரும். பாஸ்போர்ட் விசாவெல்லாம் புதுப்பிக்க வேண்டிய தேதிகளை ஒரு முறைக்கு எட்டேகால் முறை சரிபார்த்துக்குங்க. அந்தப் பக்கத்து சொந்தம் இந்தப் பக்கத்து உறவுக்கு அடிக்கடி கான்டாக்ட் செய்ய வேண்டியிருக்கும். முகத்தை பாய்லர் மாதிரி வெச்சுக்காதீங்க. உறவினர் வீடுகளில் தினமும் ஸ்வீட்தான்.. விருந்துதான் பால்பாயசம்தான். எதுக்கும் ஜீரண மருந்துகளைக் கைவசம் வெச்சுக்குங்க. சிலர் வாழ்வில் நடப்பதை உங்களால் ஜீரணிக்கவே முடியாது.

தனுசு

எங்கும் எதிலும் தடையும் தாமதமும் இருந்த நிலை மெல்ல மெல்ல மாறி துரிதைமாகப் பணமும் வரும்.. அதற்கேற்ற செலவும் வரும். பயம்  வேண்டாம். நல்ல செலவுதான்.. வீடு அல்லது ஃப்ளாட் வாங்கப்போறீங்க… கங்கிராட்ஸ்.. முன்பு முகம் திருப்பிப் போனவர்கள் எல்லாம் இப்போது ”உன்னைப் போல் உண்டா!” என்பார்கள். ஊரெல்லாம் பாராட்டினாலும் வீட்டில் புலி மாதிரி உறுமறீங்களே. அது மட்டும் வேண்டாம்மா. பொழுது போக்கு அம்சங்களுக்குக் குறைவில்லை. கவர்ச்சி அம்சம் என்பார்களே அது அதிகரிக்கும்.

மகரம்

திருமணம்.. குழந்தைப் பேறு  .. கிரகப் பிரவேசம்.. என்று சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்…  இத பாருங்க, வெயில் காயும்போதே வைக்கோலைக் காய வையுங்கன்னு ஒரு ஆங்கிலப் பழமொழி நினைவிருக்கா? அதை நல்லா நினைவு வெச்சுக்க வேண்டிய சமயம் இதுதான், அடிக்குது பாருங்க …அதிருஷ்டக் காத்து வீசுது, கவலைகளை அதில் ஊதிப் பறக்க விடுங்க. உங்களுக்கு ஏராளமான லாபங்கள் உறுதியானாலும் அதெல்லாம் உங்களை வந்தடைய நத்தை வாகனம்தான் உதவும். பொறுங்க

கும்பம்

அப்பாடா.. எதெதற்கெல்லாம் பயந்தீங்களோ அதையெல்லாம் பார்த்துச் சிரிப்பீங்க. நீங்கள் இருக்குமிடத்திற்கே விமானம் ஏறிக் கடல் தாண்டிச் வருமானம் வரும்! நிறையத் தண்ணீர் குடியுங்கள்.  குழந்தைங்க அவங்க வயதுக்குத் தகுந்த மாதிரிதான் நடந்துப்பாங்க. தாத்தா மாதிரிப் பக்குவம் எதிர்பார்த்தால் எப்படி! நிதானமாய் அடி எடுத்து வையுங்கள். . கங்காரு மாதிரி ஜம்ப் செய்ய வேண்டாம். ஹப்பாடா! எத்தனை காலத்துக்குப் பிறகு செலவுகள் கட்டுக்குள் அடங்குகின்றன! புதிய சாதனைகள் படைப்பீர்கள். முதலாளி ஷொட்டும் தருவார். பணமும் அருள்வார். பிறகென்னங்க. ஜாலிதான்.

மீனம்

நிறையப் பணம் வரும் என்பது பற்றி ஒரு  சந்தேகமும் இல்லை. சேமிப்பும் ஏராளமாய் இருக்கும். ஆனாலும் பேச்சில் சற்று கவனமாய் இருக்கணுங்க. ஒரு வார்த்தைன்னா ஒரு வார்த்தைகூட (ஏன் அரை வார்த்தைகூட) கவனக்குறைவாய்ப் பேசிடாதீங்க, ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இருக்கற ஜாப்-ஐக் காப்பாத்திக்கற ரூட்டை யோசிங்க. வேலையைவிடடு ஹைஜம்ப் லாங் ஜம்ப்பெல்லாம் செய்வது இப்போதைக்கு வேணாம். இருப்பதை விட்டுவிட்டு ஃப்ளை பண்ணுவதைப்பிடிக்க எம்பினால் இதுவும் போயிடும் அதுவும் போயிடும். பல மடங்கு கவனமாயிருங்க.


English Summary
weekly-rasi-palan-rasi-palan-14-07-2017-to-20-07-2017-vedha-gopalan