வார ராசிபலன்: 3.12.2021 முதல் 9.12.2021 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

நீங்க விரும்பிய பல விஷயங்கள் நிறைவேறும். குடும்பத்தினர் .. குறிப்பா  கணவர்/ மனைவி உங்களை புரிஞ்சுக்கிட்டுப் பாசம் காட்டுவாங்க. சுய தொழில் செய்யறவங்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தவறான பழக்கம் உள்ள நண்பர்கள் சேர்க்கையை தவிர்ப்பது நலம் தரும். மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாமன் வகை உறவுகளால்  கொஞ்சம் நல்ல விஷயங்கள் நடக்குங்க. அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய அனுமதி கடிதங்கள் சான்றிதழ்கள் கைக்கு வரும். அலுவலக வேலை சம்பந்தமாக வெளியூரில் தங்கி வேலை செய்ய வேண்டியிருக்கும். தொழில் பிசினஸ்  வெற்றிகரமாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீங்க. உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு அருமையான ஹாப்பி திருப்பங்கள் உண்டுங்க. போன வாரம் இருந்துக்கிட்டிருந்த பணப் பிரச்னை, மனப் பிரச்னை இரண்டும் நல்ல விதமாய் முடிவுக்கு வந்துடும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை

(சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கவனமாய் இருங்க)

ரிஷபம்

எந்தநேரத்தில் எதைப் பேசணும்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். அதனால் நிறையப் பிரச்னைங்களுக்கு முற்றுப் புள்ளி வெச்சுடுவீங்க.  நீங்க பெற்ற உலக அனுபவம் உங்களுக்குக் கரெக்டான நேரத்தில் கை கொடுத்து ஹெல்ப் செய்யுங்க. வாரம் முழுக்கவுமே சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கப் பெறுவீங்க. உங்கள மீது குற்றம் சொல்ல நினைச்சவங்க மனசு மாறி அந்த எண்ணத்தை  விட்டுடுவாங்க. டோன்ட் ஒர்ரி. எதிர்பார்த்த அமவுன்ட் புதன்கிழமை கைக்கு வரும். குடும்பத்தில் ஒண்ணு ரெண்டு நிறைகுறைகள் இருக்கத்தான் செய்யும். பொருட்படுத்தாம போயிடுங்க. குடும்பத்தில் ஒரு பெண்மணி கர்ப்பமடைந்த இனிய நியூஸ் வரும். கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தவர்கள் அண்ட் பிரிஞ்சவங்க ஒன்று கூடுவாங்க. பூர்வீக சொத்து சம்பந்தமாக வாரிசுதாரர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமித்த கருத்து உண்டாகி நிம்மதியைத் தரும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 5 முதல் டிசம்பர் 7 வரை

(சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கவனமாய் இருங்க)

மிதுனம்

குடும்பத்தில் உங்களுக்கோ அல்லது ஃபேமிலியில் உள்ள ஒருவருக்கோ, நீண்ட நாட்களா விரதம் இருந்து எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் இப்போது அமையும். உத்தியோக வகையில் திடீர் இடமாற்றத்திற்கு சான்ஸ் இருக்குங்க.  சகோதரி மேரேஜ் விஷயமாக ரிலேடிவ் ஒருத்தர்கிட்டேயிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்யோக விஷயத்தில் உங்க கோரிக்கை ஒண்ணு நிறைவேறுவதால் மனசில் உற்சாகம் பிறக்கும். சொந்த ஊருக்கு பணிமாற்றம் கிடைக்கும். வழக்கு  சம்பந்தமாக சமாதானத் தீர்வுக்கு அமைப்பு உள்ளது. எதிர்பார்த்த பெரிய தொகை புதன்கிழமை கைக்கு வரும். நெருங்கிய உறவுகளால் சில நன்மைகள் நடக்க சான்ஸ் இருக்கு. அல்லது அவங்க மூலமா நல்ல நியூஸ் வரலாம். தாயார் உடல் நலம் காரணமாக மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். மனைவி அல்லது கணவரிடமும் பிள்ளைங்களிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லதுங்க. ப்ளீஸ்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரை

(சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கவனமாய் இருங்க)

கடகம்

வேலை அல்லது வீடு  மாறுவது குறித்து இறுதி முடிவு எடுப்பதைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளிப்போட சான்ஸ் இருக்கான்னு பாருங்களேன். ப்ளீஸ். பகுதி நேர வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். கமிஷன் காண்ட்ராக்ட் சம்பந்தமான வேலைகளில் நல்ல லாபம் கிடைக்கும். லோன் போட்டிருந்த பணம் கிடைக்கும். வார மத்தியில் திடீர்ப் பயணம் ஒண்ணு இருக்க சான்ஸ் இருக்கு. மாமியார் வீட்டு உறவுக்காரங்களோட இருந்துக்கிட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும் நல்லுறவு மலரும். வயிறு சம்பந்தமான சிறிய பிராப்ளம் ஒண்ணு வந்து நீங்கும். சிநேகிதர்கள் அல்லது தோழிகளால் சில சங்கடங்களும் பிரச்னைகளும் வர வாய்ப்பு உள்ளது. சூழ்நிலை அறிந்து நடந்து கொள்வது அவசியமாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்காம கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடியுங்க. பெட்டர்.

சிம்மம்

திடீர் யோகங்கள் உண்டுங்க. வீடு கட்ட எதிர்பார்த்த அரசு அனுமதி கிடைக்கும். தாயாருடன்  ஏற்பட்டிருந்த குட்டியூண்டு கருத்து வேறுபாடு நீங்கி அவங்க உங்ககூட பழம் விட்ருவாங்க. உங்களைப் பிடிக்காமல் இத்தனை காலம் இருந்த ஒருத்தர்கூட இந்த வாரம் நல்லுறவு மலரும். பேச்சில் கொஞ்சம் கேர்   ஃபுலா இருங்கப்பா. தட் மீன்ஸ்…. பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது பெட்டராயிருக்கும். அப்பிடி இருந்துட்டீங்கன்னா குடும்பத்தில் மட்டும் இல்லாம ஆபீஸ்லயும் மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் வரும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாங்க. குழப்பங்கள் மன அழுத்தம் எல்லாமே மேஜிக் போட்ட மாதிரி நீங்கும் பூர்வீக / பிதுரார்ஜித சொத்து சம்பந்தமான விஷயங்கள் நல்ல படியா முடியும். அப்பா வழித் தாத்தா பாட்டியிடமிருந்து உதவிகளும் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும்.

கன்னி

வர வேண்டிய கடன் அல்லது  வாடகை பாக்கி கைக்கு வரும். திருமண விழாவையோ அல்லது குழந்தை பாக்கியமோ எதிர்பார்த்தவர்களுக்கு குட்= நியூஸ் உண்டு. பங்குவர்த்தகத்தில் உங்க கணிப்புகள் சரியாக அமையும். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். புதிய வேலையில் சேருவதற்கான கால நேரம் கூடி வந்துள்ளது. சில விஷயங்களில் தடை தாமதங்கள் இருக்கும். கொஞ்சம் பொறுமையாப் போகணுங்க.  பிரச்னைகள் படிப்படியாத்தான் நீங்கும். உங்க வேண்டுகோளை மேலதிகாரிங்க  ஏற்றுக் கொள்ள கொஞ்சம் டைம் பிடிக்கும். குடும்பத்தில் ஒரு திருமண விஷயமாய் உறவினரிடம் இருந்து ஹாப்பி நியூஸ் வரும். அதனால் குதூகலம் அடைவீங்க. ராகு ஏழில் தொடர்வதால் வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது நிதானம் கவனம் தேவை. பெண்களுக்கு தோழிகளால் சில சங்கடங்கள் வந்தாலும் உங்க சாதுர்யத்தாலும் பேச்சுத்திறனாலும் சரி செய்துக்குவீங்கம்மா.

துலாம்

உங்க மதிப்பும் கௌரவமும் வீட்டிலும் வெளியிடங்களிலும், அதிகமாகுங்க. அலைச்சலும் வீண் செலவுங்களும் முன்பைவிடப் பெரும்பாலும் குறைஞ்சிடுங்க. திடீர்ப் பயணங்கள் இருக்கும்தான். பட்.. அது உங்களுக்குச் சந்தோஷமான பலனைத் தரும். தந்தை உடல் நலம் காரணமாக மருத்துவச் வந்தாலும் நீங்க பயந்த அளவு வராது. பொது அமைப்புக்கள் சங்கம் போன்றவற்றில் உள்ளவங்களுக்குப் பதவி அல்லது பொறுப்புகள் கெடைச்சு மதிப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து பாகப்பிரிவினையாலோ அல்லது மத்த காரணங்களாலோ, சொத்து/ நகை / பணம் கைக்கு வரும். வீடுகட்ட எதிர்பார்த்துக்கிட்டிருந்த கவர்மென்ட் அனுமதி கிடைக்கும். வீடு மாற வேண்டிய கட்டாயம் சூழ்நிலைகள் வரலாம். பெண்களுக்கு சின்னஞ்சிறு ஆரோக்ய உபாதைகள் வந்து நீங்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாவே இருந்தாலும் ஆதாயம் கிடைக்கறதால ஹாப்பியா ஆயிடுவீங்க.

விருச்சிகம்

புதிய உற்சாகத்துடன் செயல்படுவீங்க. நீண்ட  நாட்களாக வசூல் ஆகாமல் இருந்த பெரிய தொகை வட்டியுடன் நல்ல முறையில் கைக்கு வரும். அரசாங்கத்திலிருந்து ரொம்ப காலமாய் வராமல் காத்திருந்த  அனுமதி கடிதம் கெடைச்சுடுங்க. உத்தியோக வகையில் எதிர்பார்த்த விஷயம் ஏதோ ஒண்ணு சாதகமாய் முடியும். பிள்ளைங்க உங்களை புரிஞ்சுக்கிட்டுப் பாசம் காட்டுவாங்க. சுப விஷேசதிற்கான முகூர்த்த தேதியை முடிவு செய்வீங்க. தொழில் செய்யறவங்க, வாய் வார்த்தை மூலம் நல்ல லாபம் அடைவாங்க. எதிலும் நிதானமும் கவனமும் கண்டிப்பா தேவைங்க. வாடகை வராமல் ரொம்ப காலமாய்க் காலியாய் இருக்கும் பிளாட் அல்லது வீட்டுக்கு புதிய வாடகைதாரர்கள் வருவாங்க. அதனால் வருமான இழப்பு நீங்கும். முன்னே இருந்துக்கிட்டிருந்த வலிகளும் உபாதைங்களும்  காணாமல் போய் நிம்மதி குடுக்கும்.  

தனுசு

பெரியவங்க மற்றும் அனுபவசாலிங்களின் அறிவுரைகள் ஆலோசனைகளை கேட்பது நல்லதுங்க. பெண்களுக்கு விரக்தி சோர்வு மன அழுத்தம் வராதபடி பாஸிடிவ்வா மனசை வெச்சுக்கிட்டு உற்சாகமான விஷயங்களில் மனசைச் செலுத்துங்க. சின்னச்சின்னதாய் ஓரிரண்டு தடைகள் தாமதங்கள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாதீங்க. உணர்ச்சிவசப்படாம எதையும் அணுகுவது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தமாக குடும்பத்தினரிடையே சின்ன சலசலப்பு இருந்தாலும் அதை ஒரு பெரியவர் தலையிட்டு எல்லாருக்கும் திருப்தி வரும்படி முடிச்சு வைப்பாருங்க. அதனால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீங்க. தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் நல்ல டீப்பா யோசிப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

மகரம்

விருந்தினர்கள் வருகையால் செலவு கூடினாலும் சந்தோஷமும் நிறையக் கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து  அவங்க கிட்ட மதிப்பும் மரியாதையும் ஏற்படும்படி செய்துடுவீங்க. நல்ல முன்னெச்சரிக்கையுடன் பயணம் செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் இருந்தா லும் மனசு ஹாப்பியா இருக்கும். எந்த முன்னேற்றத்திலும் எதிர்பார்த்த ஸ்பீட் இருக்காது.  அரசாங்க அனுமதிக்குக் காத்துக்கிட்டிருக்கறவங்க இன்னும் கொஞ்சமே கொஞ்ச காலம் வெயிட்டிங் போட்டால் போதுங்க. நல்லபடியா முடியும்.  இந்த வாரம் யாரிடமும் எந்த வம்புக்கும் போக வேண்டாங்க. அலுவலகத்தில் வேலையில் கவனம் தேவை. பிறரை நம்பி உங்க பணிகளை ஒப்படைக்க வேண்டாம். சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல அனுபவஸ்தர்கள் மற்றும் அட்வகேட்களைக் கலந்து ஆலோசித்து செய்வது நல்லதுங்க.  பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்தும்போது கடமையையும் மறக்காதீங்கப்பா.

கும்பம்

முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். கடுமையாக விடா முயற்சியுடன் ஈடுபட்டுக்  காரியங்களில் வெற்றி பெறுவீங்க. மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிச்சீங்களானால் சூப்பராய் மதிப்பெண் பெற உதவும். யாரையும் அநாவசியமாய்க் கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பகைச்சுக்காம சாஃப்டாய் அனுசரிச்சுப் போயிட்டீங்கன்னா இது பெஸ்ட் வாரமாவே ஆயிடுங்க. கடன் பிரச்னைகள் குறையத் தொடங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்பம் வந்து சேரும். மேலகாரிங்க உங்களுடன் அனுசரணையாக நடந்துக்குவாங்க. தொழில் செய்பவர்கள், தங்களது துறையில் ஓரளவு வளர்ச்சியைக் காணுவீங்க. வேலைப்பளு கொஞ்சம் அதிகமாவே இருக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை ஒரு நல்ல நியூஸ் வந்து சந்தோஷப்படுத்தும். பதவி உயர்வு, நல்ல இடத்துக்கு மாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்க இன்னும் கொஞ்சகாலம் காத்துக்கிட்டிருதுக்கணுங்க.

மீனம்

பயணத்தின்போது ரொம்ப கேர்ஃபுல்லாயிருங்க. நிறைய கவனம் தேவை. அலட்சியமாவோ கவனக்குறைவாகவோ  இருந்தால் கைப்பொருள் காணாமல்  போக வாய்ப்புள்ளது. சில கிரகங்களின் சஞ்சாரம் சாதகமான மாற்றங்களை தரும். எனவே டோன்ட் ஒர்ரி. கவர்மென்ட் ஊழியர் களுக்கு விரும்பியபடி விரும்பிய இடத்துக்கோ அல்லது டிபார்ட்மென்ட்டுக்கோ இடமாற்றம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அதனால் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைவீங்க. உங்களுடைய முயற்சிகளில் எதிர்பாலினத்தினரின் உதவிங்க கிடைக்கும். எதிர்பார்க்கும் சுப செய்தி செவ்வாய் அல்லது புதன் கிழமை வரும். வாடகை அல்லது குத்தகை வட்டி பாக்கிகள் ஈஸியா வசூலாகும். பிசினஸ்  சுமாராக இருக்கும். வீடு வாங்க வேண்டும் என்றோ வாகனம் வாங்க வேண்டும் என்றோ ஆசைப்பட்டுக் கிட்டிருந்தவங்களுக்கு அந்த எண்ணமும் ஆசையும் நிறைவேறுங்க.

More articles

Latest article