மேஷம்                          

தந்தை வழியிலுள்ள பிரச்சனைகள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமூகமாக தீர்க்கப்படும். சிலர் தாத்தா, பாட்டியாவாங்க. குழந்தைப் பேறுக்காகக் காத்துக்கிட்டிருக்கறவங்களுக்கு குட் நியூஸ் உண்டு. செலவுங்களால சந்தோஷம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும்.  குடும்ப உறுப்பினர்களிடம் சகஜ நிலை திரும்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். ஸ்டூடன்ட்ஸ் அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். ராசியில் செவ்வாய், சனி சேர்க்கை இருப்பதால் திருமண முயற்சிகள் காலதாமதமாகலாம்.  புதிய நண்பர்கள் கிட்ட முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேணாங்க. தொழில் கூட்டாளிங்க கிட்ட அனுசரிச்சுப் போங்க. அமாவாசையன்று தாத்தா, பாட்டி மற்றும் முன்னோர்களிடம் நல்லாசி பெறவும்.

ரிஷபம்

சிலருக்கு சொத்து விற்பனையில் லாபம் உண்டாகலாம். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான  இடமாற்றம் ஏற்படும். ஏழைகளுக்கு சனிக்கிழமை அரிசி மற்றும் காய்கறிகள் தானம் குடுங்க. உங்க திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் எண்ணங்களிலும் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தந்தை வழி ரிலேடிவ்ஸ், நண்பர்கள் மூலம் ஆதாயங்களும், உதவிகளும் பெறும் வாரமாக இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களைக் காக்கும். பணியிடத்திலும் கல்வி நிலையத்திலும் உங்களுக்கு எதிரா செயல்பட்டவங்க விலகுவாங்க. நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். சமாளிக்க முடியாமல் இருந்துக்கிட்டிருந்த பல பிரச்சனைகளுக்கு இனி சுலபமாக தீர்வுகாண முடியும். சிலருக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். அமாவாசையன்று  காக்கைக்கு தயிர் சாதம் வைத்து முன்னோர்களை வழிபடவும்.

மிதுனம்

ஆபீஸ்ல இதுவரைக்கும் இருந்த டென்ஷன் குறையத் துவங்கும். அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு உபரி, தனி வருமானம் மகிழ்ச்சியைத் தரும். கடனால் பாதித்த கவரவம், மரியாதை குறைவு மறையும். லாபகரமான வாரம். புதிய சொகுசு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்குகள் ஒத்திப்போகும்.  சிலருக்கு பெண்களால் தேவையற்ற மன உளைச்சல் எண்ட் கார்ட் போட்டுடும். பிள்ளைங்க உயர் கல்விக்காக வெளி மாநிலம், அல்லது ஃபாரின்  போக சான்ஸ் இருக்கு. கடுமையாக உழைக்க நேரும்.  பட் வேலைங்களை வெற்றிகரமா முடிச்சு ஹாப்பி ஆயிடுவீங்க. எனவே உழைச்ச களைப்பு இருக்காது.முக்கிய பணிகள் தேங்கும். தொழில் நிமித்தமான அலைச்சலான பயணங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். சுய வைத்தியத்தை தவிர்க்கணுங்க. சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.

கடகம்

பல சின்னச்சின்ன தடைங்கள்லாம் இருந்துக்கிட்டிருந்தாலும்கூட முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் பக்க பலமாக இருக்கும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சில சுப விரயங்கள் உண்டு. அமாவாசையன்று பசுவிற்கு அகத்திக்கீரை குடுங்க. சூப்பரான முன்னேற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க சாதகமான வாரம். மற்றும் பல நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களை ஆதரிக்கக்கூடிய நல்ல ஃப்ரெண்ட்ஸையும் பார்ட்னர்ஸையும் பெறுவதற்கு நல்ல வாய்ப்புள்ள வாரம். செலவெல்லாம் ஏற்பட்டாலும் சமாளிச்சுடுவீங்க. நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துக்குங்க. ஸோ தட்.. தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே இன்ட்டிமஸி அதிகரிக்கும். திருமண வயசுல உள்ளவங்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஃபிக்ஸ் ஆகும்.

சிம்மம்

அமைதியான சகஜமான அணுகுமுறை தேவை. இந்த வீக்கோட பலன்கள் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆன்மீக ஈடுபாடு சிறந்தது. வழிபாடு மற்றும் பிரார்த்தனைக் கென்று சிறிது நேரம் ஒதுக்க நினைப்பீங்க. வெரி குட். பிகாஸ் இதன் மூலம் ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தொண்டு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திருப்தி கிடைக்கும். முயற்சிக்கு ஏற்ற அளவுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த வாரம் உங்க கிட்ட அதிர்ஷ்டம் காணப்படும். இது முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த வாரம் இல்லீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுவீங்களாம். ப்ளீஸ். உங்க மனசுல தெளிவு காணப்படும். இதனால் உங்க செயல்களை திறமையா செய்வீங்க. பொருத்தமான செயல்களை செய்து உங்க நிலையை மேம்படுத்துவீங்க. இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். பொறுமையைக் கொஞ்சம் வளர்த்துக்கிட்டீங்கன்னா போதும்.

கன்னி

வெற்றி மேல் வெற்றி  உண்டாகும். தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் பலிதமாகும். சிலர் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்வாங்க. இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் கிடைக்கப் போகுதுங்க. சிலருக்கு புதிய வேலை பற்றிய எதிர்பார்த்த குட் நியூஸ் கெடைக்கும். மறைந்து கிடந்த உங்களோட அனைத்து திறமைகளையும் வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். கணவர்/  மனைவியின் பெற்றோரால் வரவு உண்டாகும். பெண்களுக்கு  குடும்ப சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு பிசினஸ் அல்லது வேலை நிமித்தமாக வேற இடத்துக்கு மாற நேரும். வேற்று இன மத நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். சிலரின் கல்யாண முயற்சி சக்ஸஸ் ஆகும். அரை குறையாக நின்ற பணிகள் தொடரும். கூலித் தொழிலாளிகளுக்கு தண்ணீருடன் உணவு தானம் கொடுங்க. நன்மை நடக்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 29 முதல் மே 2 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

துலாம்

எண்ணம் போல் எல்லாமும் அமையப் போகும் வாரம். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயம் தீர்ந்து மனசில் நிம்மதி வரும். குடும்பத்துல நிலவிய குழப்பங்களை சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். நண்பர்களாலோ தொழில் கூட்டாளிகளாலோ ஏற்பட்ட பிராப்ளம்ஸ் சீராகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. ஃப்ரெண்ட் ஒருத்தர் உங்க திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் உண்டாகும். திருமண முயற்சி பலிதமாகும். அமாவாசையன்று பசுமாட்டுக்கு தானம் குடுங்க.

சந்திராஷ்டமம் : மே 2 முதல் மே 4 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

விருச்சிகம்

தடைபட்ட அனைத்து செயல்களும் நிறைவடைஞ்சு நிம்மதி குடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைங்களுக்காக சுப செலவு செய்தது எதுவும் வீண் இல்லைன்னு புரிஞ்சு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும்.  மருமகள், மருமகன் உங்க முயற்சிகள் வெல்வதில் ஆர்வம் காட்டுவாங்க. பூர்வீகச் சொத்தில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கொடுக்கல் வாங்கல் சிரமமின்றி நடைபெறும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். தந்தை தாயை வணங்குங்க பணம் மற்றும் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சந்திராஷ்டமம் : மே 4 முதல் மே 7 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

தனுசு

எதிரிங்களால  இத்தனை காலமாய் ஏற்பட்டிருந்த இன்னல்கள் தீரும். சிலருக்குக் கல்யாண பார்ட்னர் அமைவதில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் எல்லாம் தீரும். உங்க செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இன்கிரீஸ் ஆவும். இழந்த இன்பங்களை நல்லவர் ஒருவர் மீட்டுத் தரப் போகிறார். தொட்டது துலங்கும். சகோதர, சகோதரிங்களிடம் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்படும். ஃபாரின் செல்லும் முயற்சி கைகூடும். புதிய சொத்துச் சேர்க்கை உண்டாக சான்ஸ் இருக்குங்க.. உடன் பிறந்தவர்களுடன் சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தை இப்போதைக்கு வேணாங்க. கொஞ்சம் போஸ்ட்போன் பண்ணுங்க. வேண்டாத பிரச்சனைங்களை யோசிச்சு மனசுல குழப்பத்தை அதிகரிச்சுக்கக் கூடாதுங்க. வயசானவங்களோட தேவை அறிஞ்சு உதவுங்க.

மகரம்

ஒங்களோட சோதனைங்க எல்லாம் சாதனைங்களா மாறும். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட அன் எக்ஸ்பெக்டட் வெற்றி உண்டாகும். பேச்சை மூலதனமா வெச்சிருக்கறவங்களுக்கும், கமிஷன் தொழில் செய்யறவங்களுக்கும் நல்ல தொழில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி ஓடி வரும். வேலையில் உள்ளவங்களுக்கு இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க இதுதாங்க ஏற்ற நேரம். திருமணத் தடை அகலும். சில பெண்கள் பொறந்த வீட்டுக்குப் போவாங்க.  பிசினஸ்லயும், வாழ்க்கைலயும் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். கவர்ன்மென்ட் வேலை முயற்சி வெற்றி தரும். தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு கணவன் வழி உறவினர்களின் சப்போர்ட் மற்றும் ஹெல்ப் உண்டு. திருமணத்தடைங்க விலகும்.

கும்பம்

சாதகமான வாரம். தொழில் போட்டிகளை சமாளிக்கும் மன வலிமை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். பேச்சினால் அட்ராக்ஷன் ஏற்படும். அவசரம் இல்லாம நிதானமாச் செயல்படுங்க. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆதரவில்லாத குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ங்க. ஃப்ரெண்ட்ஸும் ரிலேடிவ்ஸூம் தொழில் வளர்ச்சிக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. தொழில் தொடர்பானவங்க கூட நல்லிணக்கம் உண்டாகும். மேரேஜ் அல்லது குழந்தை பிறப்பின் காரணமாய் ஃபேமிலி வளரும். உங்க கடின உழைப்பிற்கான நல்ல பலன்களை இந்த வாரம் பார்க்கப்போறீங்க. முன்னேற்றங்கள் கிடைக்கும். மொத்ததில் சந்தோஷமும் நிம்மதியும் ரொம்ப நாள் கழிச்சு மீளும். முன் கோபத்தை குறைச்சுக்கிட்டுப் பொறுமையுடன் செயல்படணும். அமாவாசை தினத்தில் ஏதாவது தானம் செய்ங்க

மீனம்

சிலர் வீடு, நிலம் வாகன வகையில் சுப முதலீடு செய்வீங்க. பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வாங்க.  தொழில்ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். செல்வ செழிப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாகவே வந்து சேரும்.  குடும்ப விஷயங்களை மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்காம இருக்கறது நல்லது. உங்க முயற்சிங்க வீண் போகாதுங்க. பொருளாதாரத்துல நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெரியவங்களோட ஆதரவோடு புதிய தொழில் முயற்சியில் ஆர்வம் காட்டுவீங்க. பொது வாழ்வில் உள்ளவங்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கெடைக்க சான்ஸ் இருக்குங்க. வேலையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். பட் அதையும் ஹாங்ப்பியா செய்வீங்க. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களைக் கொடுத்து உதவுங்க.