சென்னை:
ட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் கடந்த 6-ஆம் தேதி மீண்டும் கூடியது. தற்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.