மேஷம்

மேஷராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகு விஷயங்கள்  சக்ஸஸ்ஃபுல்லா நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். நம்பி பணம் கொடுத்தவர்கள் நம்பிக்கைக்கையைக் காப்பாத்திக்குவாங்க. போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் வாங்கிய மனை இடத்திலிருந்த சிக்கல்கள் அல்லது வழக்குகள்விலகும். குழந்தைகள் பற்றி நீங்க கொண்டிருந்த பயங்கள் விலகும். கொஞ்சமும் எதிர்பாராத இடங்களிலிருந்து பாராட்டும்  ஷொட்டும் கெடைச்சு, அகமகிழ்ந்து போவீங்க. யாரை எதிரியா நெனைச்சீங்களோ அவங்கள்லாம் உங்களை மதிச்சு நேர்ல வரும்போது நீங்க நெனைச்சமாதிரி அவங்க மோசமானவங்க இல்லைன்னு புரிஞ்சு நிம்மதியாவீங்க. பணப்பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையறதால மனசுல நிம்மதி ஏற்படும்.

ரிஷபம்

ரிஷபராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வியாபாரம் சிறப்பாக் கை கொடுக்கும். குடும்பத்துல சுப காரியங்கள் திடீர்னு நடக்கும். அதற்கான செலவுகளை ஈடுகட்ட தடுமாற்றம் அடைஞ்சாலும் இறுதியில் வெற்றி அடைவீங்க. பெரியோர்கள் சந்திப்பு நடந்து தெய்வ வழிபாடுகள் செய்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வீங்க. பெண்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதைக் கண்டு ஹாப்பி ஆயிடுவாங்க. தாமதப்பட்டு கொண்டிருந்த மேரேஜ் கன்ஃபர்ம் ஆகும். வேலையில்லாதவங்களுக்கு ஜாப் கெடைக்கும். குடும்பத்தாரோட செம ஜாலியா ஊர் சுத்தி சந்தோஷப்படுவீங்க. கணவன் மனைவிக்குள்ள உறவும் ஒத்துமையும் ஹாப்பியா இருக்கும். கடன் தொல்லைகள் அகலும். மகன் அல்லது மகள் பத்தி ரொம்ப நாளா இருந்துக்கிட்டிருந்த மனக்கவலைகள் விலகும். கூட்டுத் தொழில் செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்வீங்க. சிலருக்கு திருமணம் கைகூடி வந்து இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பாங்க.

மிதுனம்

மிதுனராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீங்க. பிள்ளைங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீங்க. பக்குவமாக செயல்பட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க. புதுசா இன்வெஸ்ட்மென்ட் செய்வீங்க. ரியல் எஸ்டேட் தொழில் மூலம் அமோகமான லாபம் பார்ப்பீர்கள். அல்லது ஷேர் மார்க்கெட்டில் ஹாப்பியா சக்ஸஸ் ஆவீங்க. ரொம்ப காலமாய்க் காத்துக்கிட்டிருந்த சான்ஸ் ஒண்ணு உங்களைத் தேடி வரும். குறிப்பா கலைத்துறைல உள்ளவங்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயிருந்து உறவினர்களோ அல்லது நண்பர்களோ ஒங்களை வந்து பார்ப்பாங்க. வரும்போது நீங்க விரும்பி சந்தோஷப்படக்கூடிய விஷயங்களைக் கொண்டு வந்து குடுத்து உங்களை உற்சாகமயமாக்கப்போறாங்க பாருங்களேன். ஜாலிதான் போங்க.

கடகம்

கடகராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வெளிநாட்லேயிருந்து நல்ல செய்தி வந்து சேரும். அரசாங்கத்திலிருந்து அனுகூலமான நியூஸ் வந்து சேரும். நீண்ட நாள் பகையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து அப்பாடான்னு நிம்மதியடைவீங்க. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான பதிலை பெறுவீங்க. உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்க நில்லுன்னா நிற்பாங்க. உக்காருன்னா உக்காருவாங்க. வியாபாரத்தில் இயல்பான நிலையே இருக்கும். இனி செய்யவேண்டிய வேலைகளை பற்றிய வரைவுத் திட்டம் போடுவீங்க. துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவாங்க. வியாபாரத்துல லாபம் கொஞ்சம் கூடுதலாக் கெடைக்கும். பிசினஸ் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கெடைக்கும். அரசு நெருக்கடிகள் விலகும். வங்கியின் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும், நிலத் தரகர்களுக்கும் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் ஹாப்பியா இருக்கும்.

சிம்மம்

சிம்மராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பத்திரப்பதிவு செய்வீங்க. சுப விசேஷங்கள் தொடர்பான விஷயங்கள் இந்த வாரம் நல்லபடியா ஃபைனலைஸ் ஆகும். சுபச் செலவுங்க ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்னையில் ஹாப்பியான முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் யூஷுவல் நிலையே இருக்கும். பிசினஸில் வளர்ச்சி இருக்கும். புது பிசினஸ் செய்ய சான்ஸ் கிடைக்கும். எதிர்பாராத ஹெல்ப் கெடைக்கும். தவறான  ஃப்ரெண்ட்ஸ் பேச்சை கேக்கவே  கேக்காதீங்க. அவசியம் நேர்ந்தால் அவங்க நட்புக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடத் தயங்காதீங்க.. ப்ளீஸ். மல்லுக்கட்ட நினைக்கும் எதிரிங்களை புல்லுக்கட்டு மாதிரித் தூக்கி வீச இறைவன் அருள் உங்களுக்கு இந்த வாரம் நெறையவே இருக்குங்க. கோயில்களுக்குப்போய் நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீங்க. குறிப்பாக் குல தெய்வக் கோயிலுக்குக் கட்டாயம் போவீங்க. அதனால மனசுல ஒரு நிம்மதியும், ஆறுதலும், சந்தோஷமும் பரவுங்க.

கன்னி

கன்னிராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஒருவேளை நீங்க பிசினஸ் செய்யறவங்களா இருந்தால்.. தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. வாரக் கடைசியில சில சிக்கல்களை சாமர்த்தியமா ஃபேஸ் பண்ணி ஊதித் தள்ளிடுவீங்க. அதை மனதில் கொண்டு எதையும் தைரியமா செய்ங்க. உங்க முயற்சிங்க மிகச்சிறந்த நன்மைகளை கொடுக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனை கொண்டு வரும். சினத்தை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள் என்பதால் சிக்கலில் மாட்டாமல் தப்புவீங்க. பழைய பாக்கிகளை அக்கறையோடு மட்டுமில்லாம வெற்றிகரமாவும் வசூல் செய்வீங்க. ஆன்மீகப் பெரியோர்களின் சந்திப்பு மன அமைதியை கொடுக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிசினஸ் பீப்பிளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுன்னு சுத்தற சான்ஸ் கெடைக்கும். உத்யோகம் அல்லது தொழில் அல்லது பிசினஸ்க்காக வேண்டி அப்பிடிப் போவீங்க. அது வருமானத்தை அதிகமாக்கும்.

துலாம்

துலாம்ராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ரொம்பவே முயற்சி செய்து மங்கள காரியங்களுக்காக நீங்க செய்த ஏற்பாடுகள் சின்னச் சின்ன பிரச்சனைகளைத் தாண்டி சூப்பராய் வெற்றி பெறும். என்றைக்கோ செய்த முயற்சிக்கும் உழைப்பும் இந்த வாரம் பலன் கெடைக்குங்க. எதிர்பாராத வகையில் பண வரவு உங்களை திக்கு முக்காட வைக்கும். பழைய கடன்களை அடைச்சு நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. குடும்ப விஷயங்களை அடுத்தவங்க கிட்டயெல்லாம் பகிர்ந்துக்காதீங்க. (அவங்க எவ்ளோ நெருக்கமான நண்பர்கள்னு நீங்க நினைச்சுக்கிட்டிருந்தாலும் அதைச் செய்ய வேண்டாம். வேண்டவே வேண்டாம்.) பெண்கள் உற்சாகம் கொள்வாங்க. மனைவி மக்களை சந்தோஷப்படுத்தும்படியான செயல்களில் ஈடுபடுவீங்க. லேசா தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தாலும் அது பற்றிக் கவலையோ வருத்தமோ இருக்காதுங்க. முன்னேயெல்லாம் எதுக்கெடுத்தாலும் பயமயமாய் இருந்த நிலைமை மாறும்.

விருச்சிகம்

விருச்சிகராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

நிதானமான போக்கை கடைப்பிடிக்கறீங்க. வெரிகுட். பிடியுங்க பாராட்டை. தொழில் காரணமாக் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய நிலைல இருந்தவங்கள்ளாம் நெருங்கிய உறவினர்களைச் சந்திச்சு சந்தோஷப்படுவீங்க. வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். திடீர் திருப்பங்கள் பல வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீங்க. உறவினர்களின் தேவையை பூர்த்தி செய்ய கைக்காசை செலவு செய்வீங்க. வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடன் பெறுவீங்க. பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்காகச் சந்தோஷமாச் செலவு செய்வீங்க. அவங்களை பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்னு எக்ஸ்டிரா திறமைகளுக்கும் செலவு செய்வீங்க. உங்க முயற்சிங்க தொழிலுக்கு உதவியாக இருக்கும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பான பலனை கொடுக்கும். மம்மிகூட ஃபைட்டிங் வேணாம்.

தனுசு

தனுசுராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

தாய்மாமன் வழியில சில நடவடிக்கைகள் உங்களுக்கும் உங்க ஃபேமிலிக்கும் உதவியா இருக்கும். இரவு பகலா உழைப்பீர்கள். பண சேமிப்பில் அக்கறை செலுத்துவீங்க. கலைத்துறையினர் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அலங்கார பொருள் விற்பனை, அழகு நிலையம் போன்ற பிசினஸ்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். மருத்துவச் செலவுகள் இருந்தாலும்கூட அதெல்லாம் மன நிம்மதியை கெடுக்காம இருக்கும். ரொம்ப காலமாய் பெண்டிங்ல இருந்த விஷயங்களை முடிப்பீங்க. பல விஷயங்கள்ல நிம்மதிப் பெருமூச்சு உண்டுங்க. என்றைக்கோ குடுத்த கடன்லாம் திரும்ப வரும். என்றைக்கோ வாங்கிய கடன்களைத் திரும்பக் கொடுத்து நிம்மதி அடைவீங்க. தக்க சமயத்துல நண்பர்கள் உதவி செய்வார்கள். தொழில் போட்டிகளை சூப்பரா சமாளிப்பீர்கள். பல குட் திங்ஸ் நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்னு சொல்ல முடியாட்டியும், நாட் பேட்.

சந்திராஷ்டமம் : 2023 டிசம்பர் 28 முதல் 2023 டிசம்பர் 31 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

மகரம்

மகரராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

நம்பிக்கையான நபரா இருந்தாலும்கூடப் பண விஷயத்துல கவனமா நடந்துக்குவீங்க என்பதால நோ பிராப்ளம். வியாபாரத்துல துணிச்சலுடன் ஈடுபடுவீங்க. நிலம் வாங்கி விற்பது அல்லது கட்டடம் கட்டுவது மாதிரியான பிசினஸ்கள் திடீர்னு பிக் அப் ஆகி நல்ல பலனை கொண்டு வரும். குடும்பத்துல திருமணம் நிகழும். அல்லது புதிய உயிர் உற்பத்தியாகி அனைவரையும் சந்தோஷத்துல ஆழ்த்தும். அவசரம் பதற்றம் போன்ற குணங்களை விடுத்து இப்போது நிதானமும் பக்குவமுமாய்ச் செயல்பட வேண்டியது ரொம்பவே முக்கியம். எஸ்பெஷலி பேச்சில் ரொம்ப ரொம்ப கவனமாய் இருந்துட்டாலே போதுங்க. எடுத்துக்கிட்ட வேலைங்க எல்லாத்தையும் ஈஸியா செய்து முடிப்பீங்க. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். ரொம்ப காலம் கழிச்சுக் குடும்பத்துல ஒருத்தருக்கு உத்யோகம் கெடைக்கும்.

சந்திராஷ்டமம் : 2023 டிசம்பர் 31 முதல் 2024 ஜனவரி 2 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

கும்பம்

கும்பராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பிள்ளைங்களால முன்னேயெல்லாம்  சில பிரச்சனைகளைச் சந்திச்சு மனசு நொந்து.. வாழ்க்கை வெறுத்து அமைதியை இழந்தீங்கதானே? பெரிய மனிதர்களோட.. அல்லது வெல் விஷர்களோட ஆதரவால் வார இறுதியில்­­­­ பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைச்சு நிம்மதியும் சந்தோஷமும் அடைவீங்க. உங்க நடவடிக்கைகள் நன்மை தீமை என கலந்த பலன்களை கொண்டு வரும். புதிய முதலீடுகளை ரொம்பவே கவனத்தோட, கேர்ஃபுல்லா செய்யுங்கப்பா/ ஆபீசில இருந்துக்கிட்டிருந்த அவஸ்தையெல்லாம் மாறி நிம்மதி வரும். தொல்லை குடுத்துக்கிட்டிருந்த மேலதிகாரி நிம்மதியா, சந்தோஷமா வேற ஆபீசுக்குப் போயிடுவாரு. நீங்களும் அப்பாடான்னு நிம்மதியாவீங்க. யார் கிட்டயும் யார் பற்றியும் வம்பு பேச வேண்டாங்க. யாரையும் குறை சொல்லாதீங்க. வார்த்தைகள்ல கவனமா இருங்க. டாமினேஷன் வேணாம். அதிகமா உழைப்பீங்க. பிற்காலத்துல பலன் வரும்.

சந்திராஷ்டமம் : 2024 ஜனவரி 2 முதல் 2024 ஜனவரி 5 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

மீனம்

மீனராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பிசினஸ் செய்யறவங்களுக்கு யோகமான காலகட்டம். சிறு வியாபாரிகள் பெரிய லாபத்தை பார்ப்பீங்க. ரத்த உறவுகளால சில நன்மைகளும் லாபங்களும் நல்ல பலன்களும் உண்டாக சான்ஸ் இருக்குங்க. இளம் வயதினர்கள் மேரேஜ் பந்தத்தில் ஈடுபடுவார்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கணவர் அல்லது மனைவிக்கு  ரொம்பவும் சப்போர்ட்டா இருப்பீங்க. இதனால தம்பதி ஒற்றுமை அதிகமாகும். நீங்களும் உங்க கணவர் அல்லது மனைவியும் நிறைய உழைப்பீங்க. உழைப்புக்கேற்ற லாபம் ஓரளவு இருக்கும். நல்ல விஷயம் என்ன தெரியுமா? செலவு கட்டுப்படப் போகுதுங்க. வேலை இடத்தில் கவனமாயிருப்பீங்க.  பணியில முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பிரமோஷன் கெடைக்கலாம். இளம் வயதினர் மனதை பரிமாறி லவ்வில் ஈடுபட சான்ஸ் இருக்கு.