வார ராசிபலன்: 24.6.2022 முதல் 30.6.2022 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

ஃபேமிலில ஒத்துழைப்பு சிறப்பா இருக்கும். வீட்ல மகிழ்ச்சி தரும் சுப விசேஷங்கள் முடிவாகும். திருமணமாகாத லேடீஸுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். பிசினஸ் வியாபாரம் வளர்ச்சி அடையும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையில்லாத செலவுங்க ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டி வரும். நீண்ட நாள் ஃப்ரெண்டு ஒருத்தரால ஆதாயம் உண்டாகும். நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரியப் பேச்சுவார்த்தைங்க முடிவுக்கு வருவதற்குள் நிறைய சங்கடங்களை ஃபேஸ் செய்ய வேண்டியிருக்கும். இருந்தாலும் சக்ஸஸ்தானி. பட்… கவனமாகப் பேசணுங்க. தட்ஸ் ஆல்.

ரிஷபம்

பிசினஸ் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. எடுத்துக்கிட்ட வேலைங்க எல்லாத்தையிம் சரியாச் செய்து முடிப்பீங்க. வியாபார பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். கமிஷன் தொழில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப் பெறுவீங்க. மொபைலிலோ அல்லது மெயிலிலோ வரும் நியூஸ் மனசுக்கு உற்சாகத்தைத் தரும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும். பண வரவு தாராளமாக இருக்கும். பிசினஸில் வளர்ச்சி உண்டாகும். வெரி குட் குரோத்.

மிதுனம்

குழந்தைங்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. புதிய வாகனம் வாங்கும் சிந்தனை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் நடைபெறக்கூடிய வாரம். தேவையான உதவிங்க உடனுக்குடன் கெடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக விலகும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆர் யூ ஹாப்பி?

கடகம்

நினைச்ச விஷயம் ஒண்ணு நிறைவேறும். பணவரவு சரளமாக இருக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்னை ஒன்று படிப்படியாகத் தீரும். குடும்ப உறவுகள் பலப்படும். ரிலேடிவ்ஸ்ஸோட ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும். சேமிப்பில் இருந்து ஒரு தொகையைக் குடும்பத்தினருக்காகத் தருவீங்க. ஆபீஸ்ல இயல்பான நிலையே தொடரும். ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்குத் தாமாக முன்வந்து உதவுவாங்க. பிசினஸ்ல இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். தாமதப் பட்டுக்கிட்டிருந்த தொழில் ஒப்பந்தங்கள் இந்த வீக் நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவங்களுக்கு இதுவரை இருந்து வந்த முடக்கமான நிலை மாறிப் படிப்படியாக முன்னேற்றத்தைக் காணலாம். வியாபாரிகள் தங்கள் பிசினஸில் வளர்ச்சி காண்பாங்க. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கங்கிராஜுலேஷன்ஸ்பா.

சிம்மம்

ஸ்டூடன்ஸ் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவாங்க. கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவாங்க. கலைத்துறையினருக்கு நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த பேங்க்  லோன் கெடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். மனதில் தேவையற்ற எண்ணங்கள் வந்து போகாதபடி கவனமாக இருக்கறது நல்லது. பிசினஸ் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல நியூஸ் கிடைக்கும். லேடீஸுக்கு, சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும். எதிர்பார்த்த எல்லா ஹெல்ப்பும் கிடைக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரி களுக்கு லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வாவ். இட்ஸ் நைஸ்.

கன்னி

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் தேவையான உதவிகளைச் செய்து தருவாங்க. அது பற்றிய நியூஸ் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் பிசினஸில் நெருக்கடியான நிலை தோன்றும். நிதானமாக இருந்தால் இவை அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதையும் மன உறுதியோடு எதிர்கொள்வீங்க. பிசினஸ்ல வரவேண்டிய பாக்கிங்க வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய சான்ஸஸ் கெடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய ஐடியாஸ் உருவாகும். அதற்கு தேவையான ஹெல்ப்பும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல நியூஸ் உறுதியாகும். கங்கிராஜுலேஷன்ஸ்ங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 23 முதல் 25 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

துலாம்

எதிர்பார்ப்பு ஒன்று வாரம். பணவரவுகள் ஓரளவு இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். புதிய வீடு வாங்குவதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக பேசி வந்த முக்கியமான விஷயங்கள் சில இனி உங்களுக்கு சாதகமாக மாறும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேறு ஆபீஸுக்கு மாறும் முயர்ச்சி சாதகமாக இருக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவருக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் ஓரிரண்டு கிடைக்கும். தொழிலில் இனி எந்த விதமான தடைகளும் இருக்காது, தாமதங்களும் இருக்காது. தொழில் சீரான வளர்ச்சி பாதைக்கு திரும்பும். விலகிச் சென்ற ஊழியர்கள் மீண்டும் வந்துசேர்வாங்க.பிசினஸில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது, நண்பர்களோடு இணைந்து புதிய வியாபாரத்தை துவங்குவது என அனைத்தும் இனி சிறப்பாக இருக்கும். ஆர் யூ ஹாப்பி?

சந்திராஷ்டமம் : ஜூன் 25 முதல் 28 வரை.சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

லேடீஸுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் வெற்றியும் பெறுவாங்க. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். உங்களோட திறமையை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பாக அது அமையும். ரொம்ப காலமா எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும்தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஃபேமிலியோட நேரத்தைச் செலவிட்டு மகிழ்வீங்க.  நிதானமாக செயல்பட வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். தொழில் மற்றும் பிசினஸில் கவனமாக இருக்கவேண்டும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ரியல் பெனிஃபிட்

சந்திராஷ்டமம் : ஜூன் 28 முதல் 30 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

ஆபீஸ் பணிகளில் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக் கொள்வது நல்லது. தாமதப்பட்ட பணவரவு கிடைக்கும். பிசினஸில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்பு சின்னத்  தடைங்களுக்குப் பிறகு எதிர்பார்த்த மாதிரியே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும். நன்மைகள் நடைபெறும். ஒங்களோட பர்சனல் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக்கிட்டிருந்த ஒரு பிராப்ளம் முடிவுக்கு வரும். பிசினஸில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நல்ல பலன்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். யெஸ். ஆல் ஹெல்ப்ஸ்.

மகரம்

தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்துல உள்ளவங்களோட தேவைங்களைப் பூர்த்தி செய்து தருவீங்க. வீட்டுல புதிய பொருட்கள் வாங்குவீங்க. தொழில் தொடர்பான உதவிங்க கிடைக்கப் பெறுவீங்க. ஹாஸ்பிடல் மற்றும் மெடிக்கல் செலவுங்க வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிராப்ளம்ஸ் மற்றும் டென்ஷன்ஸ் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உறவினர்கள் வருகை ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மோஸ்ட்லி யூ வில் கெட்.

கும்பம்

குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உறவினர்கள் வருகை ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பிஸினஸ்ல லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சூழல் அமையும். ஃபேமிலில உள்ளவங்களோட தேவைங்களை நிறைவேத்தி அவங்களை ஹாப்பியாக்குவீங்க. அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீங்க. பராமரிப்புச் செலவுகள் அதிகமாக ஏற்படும். பழுதடைந்த விஷயங்களை வீட்டில் மீண்டும் புதுப்பிக்கும் வேலையைச் செய்வீங்க. விட்டுப்போன நட்பும் உறவும் மறுபடியும் சரியாகி ஒற்றுமை வரும். எதிர்பார்த்த எல்லா ஹெல்ப்பும் கொஞ்சம் தடை தாமதங்களுக்குப் பிறகுதான் கெடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். பேச்சிலும் செயலிலும் தவறில்லாமல் பார்த்துக்குங்கப்பா. தப்பான ஃப்ரெண்ட்ஷிப்பை கட் செய்ங்க. பீ வெரி வெரி கேர்ஃபுல்.

மீனம்

வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான புது அக்ரீமென்ட் போடுவீங்க. வெளிநாடு போக சான்ஸ் கெடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் வாரம். உங்க குழந்தைங்களோட எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  உங்க கணவர் அல்லது மனைவிக்கு முக்கியமான விஷயங்களில் ஏற்பட்டுக்கிட்டிருந்த தடை தாமதங்கள் விலகும். சொத்துகள் தொடர்பான கேஸ் அல்லது பிராப்ளம்ஸ்ஸில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஹெல்த் பாதிப்புகள் அனைத்தும் முறையான சிகிச்சை காரணமா விலகும். இனி மருத்துவச் செலவு என்பதே இருக்காது. தந்தைவழி உறவுகளிடம் ஏற்பட்ட பிராப்ளம் ஒண்ணு முடிவுக்கு வரும். சமாதானம் உண்டாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். பெண்களின் தேவைகள் நிறைவேற நிறையவே பாடுபட வேண்டியிருக்கும்மா. ஜஸ்ட் டோன்ட் வொர்ரி.

More articles

Latest article