மேஷம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பாங்க. தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும். அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால்  நன்மையும் மகிழ்ச்சியும் ஏற்படக்கூடும். இளம் வயதினர் மனசை அலைபாய விடாமல் படிப்பில் மட்டுமே அக்கறை காட்ட வேண்டும். இல்லாட்டி ஆசை வார்த்தைக்கு அடிமைப்பட்டு தடம் மாறி போகக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். வீடு கட்டுவதற்கான அடித்தளம் அமைப்பீங்க. மணல் வியாபாரத்தில் அரசாங்க அங்கீகாரம் பெறுவீங்க.

சந்திராஷ்டமம் : மே மாதம் 23 முதல் மே மாதம் 25 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும்  செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

வீட்ல மங்கள காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலை உருவாகும். வெளியூர் பயணங்களின் மூலமாக வருமானம் பார்ப்பீங்க. குடும்பத்தின் மீதுள்ள அக்கறையால் அதிக நேரம் உழைப்பீங்க. கூட்டுத்தொழில் அமோக லாபம் தரும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற துறையினர் பேரும் புகழும் அடைவாங்க. சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒங்களோட சிரமம் அறிந்து ஒங்களோட பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வாங்க. விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.  எதிர்பாராத பணவரவு உண்டு.  கடன்கள் விஷயத்துல கவனமா இருப்பது அவசியம்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 25 முதல் மே மாதம் 27 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும்  செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

மிதுனம்

எந்தக் காரியத்தையும் நல்லா யோசிச்சு செய்ங்க. உறவுகள் நட்புகள் வகையில் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தொழிலில் போட்டி ஏற்படலாம். அதற்கு தகுந்த மாதிரி நடந்துக்குங்க. தாய்வழில எதிர்பார்த்த காரியம் திடீர் வேகம் பிடிச்சு, சக்ஸஸா முடியும். நண்பர்களின் சந்திப்பும், அவங்க மூலம் எதிர்பாராத ஆதாயமும் உண்டாகும். புதிய முயற்சியை வார ஆரம்பத்துலயே தொடங்குவது நல்லது. வாகனத்துல செல்லும்போது கவனமாகப் போங்க. சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும். முக்கிய முடிவுகள் எதையும் எடுக்குமுன் நல்லா யோசிச்சு, உங்க நலம் விரும்பிங்க கிட்ட ஆலோசனை கேட்டு, அதுக்குப் பிறகு டிஸைட் செய்ங்க.   உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 27 முதல் மே மாதம் 29 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும்  செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

கடகம்

வியாபாரம் வெற்றிகரமா நடக்கும். அதே நேரத்தில் செலவுகளும் வருவதற்கான சான்ஸும் உண்டு. பிள்ளைங்க படிப்புல கவனமா இருப்பாங்க. குடும்பப் பிரச்சனைங்க எதையும் வெளியில சொல்லாதீங்க. சுபகாரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் வரும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். அரசு வேலையில் உள்ளவங்களுக்கு உத்தியோக உயர்வு உற்சாகத்தை கொடுக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். காதலர்கள் பொறுமையை கடைபிடிக்கணுங்க. சண்டை வராம பார்த்துக்குங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பு தொழிலுக்கு சப்போர்ட்டா விளங்கும். உறவினர்கள் ஒருவகையில் உதவியாக இருப்பாங்க. நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் சற்று தாமதமாகும். பட்.. புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த விஷயம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமா முடிஞ்சுடும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 29 முதல் மே மாதம் 31 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும்  செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

சிம்மம்

எடுத்த காரியங்களை துணிவோடு முடிப்பீங்க. கூட்டுத் தொழிலில் அமோக லாபம் பார்ப்பீங்க. வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்துவீங்க. மனசுல அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவாங்க. சிலருக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால தர்மசங்கடமான நிலைமை ஏற்படும். சிவபெருமானை வழிபடுங்க. காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும். கனவுக்கன்னி கரம் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வீங்க. (நீங்க பெண்ணாய் இருந்தால் கனவுக் கண்ணன்னு மாத்திப் படிச்சுக்குங்கப்பா). அடுத்தவங்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீங்க.  எதிர்பாராத வருமானம் கெடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையால ஒரு நன்மை ஏற்படும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைச்சு சந்தோஷமடைவீங்க. மனைவி சொல்லே மந்திரம் என்று இந்த வாரத்தை ஓட்டுங்க. யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க.

கன்னி

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீங்க. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீங்க. குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அம்பிகையை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க, நற்பலன் அதிகரிக்கும். மத்தவங்களோட பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிங்க. எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால முறியடிச்சு நிம்மதியாத் தூங்குவீங்க. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.  எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு தெய்வ வழி பாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

துலாம்

ஏற்றுமதி இறக்குமதி தொழில் அதிக அக்கறை காட்டுவீங்க. வியாபாரிகள் விற்பனையில் சிரத்தையுடன் செயல்படுவாங்க. இந்த நேரத்தில் கிடைக்கும் பொருளாதார முன்னேற்றத்தை எதிர்காலத்திற்கு பயன்படுத்த ஏதுவான காரியங்களை செய்வீங்க. திருமணம் ஆகாமல் இருந்த இள வயதினருக்கு இந்த வாரத்துல பேச்சுவார்த்தை நடந்து திருமண பிராரப்தி உண்டாகும்.. புதிய வீடு கட்ட திட்டம் போடுவீங்க. அதுக்காகப் பணத்தை புரட்டுவீங்க. எதிரிகளால ஏற்பட்ட இடையூறுகள் விலகும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். மத்தவங்க கிட்ட பேசும்போது பொறுமை அவசியம். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கவர்மென்ட் கிட்டேயிருந்து கெடைக்கும். பிசினஸ் முன்னேற்றமாக நடக்கும். அனைத்து தரப்பு வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவாங்க.

விருச்சிகம்

நல்ல வேளையா, அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அகலக் கால் வைக்காம கேர்ஃபுல்லா அடி எடுத்து வைக்கறீங்க. குட். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும். மனைவியுடன் முன்பிருந்த சச்சரவுகள் தீரும். கவர்மென்ட் ஊழியர்களும், ஐ டி அன்பர்களும் இந்த வாரத்தில் மன மகிழ்ச்சி அடைவாங்க. மேலதிகாரிகளின் அன்பையும் பாராட்டையும் பெறுவீங்க. தனியார் துறை ஊழியர்களுக்கும் இது மகிழ்ச்சியை தருகின்ற வாரமாக அமையும். அக்கறையுடன் வேலை பார்த்து முதலாளிகளால் அனுகூலம் அடைவீங்க. உங்க மனசுக்க நெருக்கமான நபர் ஒருவர், உங்களுக்கு மன நிம்மதியை மகிழ்ச்சியையும் கொடுப்பார். வெளியூர்ப் பயணங்களில் மூலமாக வியாபாரத்துக்குத் தேவையான ஆர்டர்களை பெறுவீங்க. அலைச்சல் அதிகமானாலும் அதற்குரிய பலன் கிடைக்கும். கணவர் அல்லது மனைவி நடந்து கொள்ளும் முறை உங்க மனசை சந்தோஷமாக்கும்.

தனுசு

மனசுல உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒங்களோட யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவாங்க. ஆஞ்சநேயரை தியானித்து வாரத்தைத் தொடங்குங்க. சிறப்பா இருக்கும். வசீகரமான பேச்சால யாரையும் கவர்ந்து இழுப்பீங்க. இளம் வயசுக்காரங்க காதலைச் சொல்லிக் கொள்கின்ற வாரமா இது அமையும். நல்லதொரு துணையைத்  தேடிக்கிட்டு அவங்களோட எதிர்காலத்துல இணைவதற்கு திட்டம் தீட்டுவாங்க. நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் நன்மையும் முன்னேற்றமும் ஏற்படக்கூடும். எதையும் யோசிச்சு, திட்டமிட்டுச் செய்யற வங்களுக்கு நன்மையான வாரம்.

மகரம்

பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மற்றவர்களிடம் இணக்கமான ஒற்றுமை ஏற்படலாம். தொழிலில் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் நுட்பங்களால் நல்ல அனுபவத்தைப் பெறுவீங்க. புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். ஒங்களோட முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பாங்க. தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட்டாலும் அவங்க நெகிழ்ந்து நன்றி சொல்லும்போது உருகிடுவீங்க. மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும். விரும்பாத இடத்திற்கு மாற்றங்கள் இப்போதைக்கு இருக்காது. எனினும் தேவையே இல்லாமல் மனசைப் போட்டு டென்ஷன் பண்ணிக்குவீங்க. அது வேணாமே? மற்றவங்க கிட்ட பேசும்போது வார்த்தைங்களை கொஞ்சம் கேர்ஃபுல்லா யூஸ் பண்ணுங்கப்பா

கும்பம்

நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும். எந்த முடிவெடுப்பதற்கு முன்னும், நன்கு சிந்தித்து செயல் படுவது நல்லது. எல்லா விஷயங்கள்லயும் எச்சரிக்கை யுடன் செயல்பட்டு எதிரிங்க திட்டங்களை முறியடிப்பீங்க. இந்த வாரம் எல்லாம் கலப்பு பலன்களாகவே இருக்கும். உங்க விருப்பங்கள், அபிலாஷைகள் அனைத்தும்  நிறைவேற ஆரம்பிச்சாலும், எதுவும் ஒரு தடை தாமதத்துக்குப் பிறகுதான் நிறைவேற ஆரம்பிக்கும். நீங்க ஆணாயிருந்தால் ஆசைப்பட்ட நகைகளை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீங்க. பெண்ணாயிருந்தால், கணவர் நகை வாங்கித் தந்து சந்தோஷப்படுத்துவாரு. மேற்படிப்புக்காகப் பிள்ளைகளை ஃபாரின் அனுப்புவதற்கான ஏற்பாட்டை செய்வீங்க. பெண் பிள்ளைகள் உங்களைப் பெருமைப்படுத்துவாங்க. பல காலம் சந்திக்காத நபர்களை நேருக்கு நேராச் சந்திக்க சந்தர்ப்பம் வரும்.

மீனம்

பொருளாதார நிலை மற்றும் குடும்ப நிலை ஓரளவே சிறப்பாக அமையும். சிலருக்குப் பணி நிமித்தமாக செல்ல வேண்டிய வெளியூர் பயணங்கள் சந்தோஷகரமா முடியும். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் பெறுவீங்க. இடம் விட்டு இடம் மாறி வேறு ஊரிலோ, நாட்டிலோ வாழ நேரலாம்.  ஆனால் அதையும் ஹாப்பியாச் செய்வீங்க. உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் பொருட்படுத்தும் அளவுநீளமான பிரிவா இருக்காது. இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கடைபிடிப்பீங்க. வாரக்கடைசியில் செய்யும் செயல்களிலும் பேசும் பேச்சிலும்… ஏன்.. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு வசீகரத் தன்மை இருக்கும். உங்களை யாரும் அசைக்க முடியாது. தொழிலுக்கு ஏற்படும் சிக்கல்களை புத்திசாலித்தனமாக தீர்ப்பீங்க. பழைய வீட்டை புதுப்பித்து அழகுபடுத்துவீங்க. அலைச்சல் இருந்தாலும் அத்தனையும் ஹாப்பி அலைச்சல்ஸ்தான். பலன் இனிக்கும்.