மேஷம்

எதிரிகள் தொல்லை ஒழியும் நோய்கள் நீங்கி ஹெல்த் அற்புதமா இருக்கும். எதிர்பார்த்து காத்திருக்கும் குட் நியூஸி வீடு தேடி வரும். நல்ல ரீஸன்ஸ்க்காக நெறைய செலவு செய்வீங்க. வண்டி வாகனங்களை பழுது நீக்கறதுக்காகச் சின்னச்சின்ன செலவு செய்வீங்க. செலவுக்கேத்த  சேமிப்பு இருக்கும். டோன்ட் ஒர்ரி. புதிய முயற்சிகள் வீடு தேடி வரும். குழந்தைங்களுக்கான சுப காரியம் நடைபெறும். சொத்து வாங்குவதற்கான நேரம் கை கூடி வரும். ரிலேடிவ்ஸ் ஹெல்ப்  தேடி வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்ய இது உகந்த நேரம் இல்லைங்க. ப்ளீஸ் கொங்சம் வெயிட் பண்ணுங்க. அதே நேரம்.. உங்களோட ஜாதகப்படி சாதகமான அமைப்பு இருந்தா கோ அஹெட். மனக் குழப்பம் நீங்கும். லேடீஸ்க்கு  கோல்ட் நகைங்க சேர்க்கை ஏற்படும். வேலைக்குப் போற லேடீஸ்க்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் கெடைக்கும். விலை உயர்ந்த நகை, பணத்தை பத்திரமாக வெச்சுக்குங்க. யாருக்கும் கடன் கொடுத்து மாட்டிக்க வேணாங்க. பெருமாள் கோவிலுக்குப் போய் வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் தானாய் நடைபெறும்.

ரிஷபம்

இந்த வாரம்  வருமானம் மட்டும் இல்லீங்கோ…. மன நிம்மதியும் அதிகரிக்கும். ஸ்வீட் நியூஸெல்லாம் வந்து சேரும். வாழ்க்கையில் முன்னேற்றம்னா என்னன்னு ஆஃப்டர் எ லாங் டைம் இப்போ சுவைப்பீங்க.  சுக சந்தோஷங்களையும் சந்தோஷங்களும் அடை வீங்க. வீட்டில் சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். வீட்ல யாருக்காச்சும் (அல்லது நீங்களே எதிர்பாத்துக்கிட்டிருந்தாக்கா) புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கெடைக்கும். பெரியவங்களோட நல்ல வார்த்தைங்களைக் கேட்டு, புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டு ஜெயிப்பீங்க. மகான்களை தரிசனம் செய்ஞ்சு ஞானம் பெறு வீங்க. ஃப்ரெண்ட்ஸ் அல்லது  ரிலேடிவ்ஸ் வருகையால் ஹாப்பி ஆவீங்க. சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும்.  திடீர்னு பிரமோஷன், இங்கிரிமென்ட் ஆகியவை கெடைக்கும். அனுமார் கோயில் போய் நெய்தீபம் வடை மாலை வெண்ணை சாத்துங்க. கண்டிப்பா நன்மைகள் நடக்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 20  முதல் ஏப்ரல் 23 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம்.

மிதுனம்

விற்பனை ஏஜென்ட் மாதிரி உள்ளவங்க வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். உடன்பிறப்புக்களுக்கு இடையே கடந்த சில வாரங்களா இருந்துக்கிட்டிருந்த கருத்து வேறுபாடு  போயே போச். இந்த வாரம் விருந்து, பார்ட்டி அது இதுன்னு சந்தோஷத்தோட உச்சிக்குப் போவீங்க. கொண்டாட்டங்கள் ஒங்களை ஹாப்பி ஆக்கும். அரசுப் பணியாளர்களின் நிறைய உழைச்சு நன்மை அடைவீங்க. உயர் அதிகாரிகாரிங்களோட பாராட்டால் திருப்தியும் சந்தோஷமும் மட்டுமல்லாமல்  ஆஃபீசில் முன்னேற்றமும் உண்டுங்க. பயணங்களில் முன்பதிவுப் பிரச்சனைகள், வசதியற்ற நிலைகளால் இடையூறுகள் என இருந்துக்கிட்டிருந்த பிரச்னைங்க தீரும். பிசினஸ் செய்யறவங்களுக்கு, தொழிலில் இருந்துக்கிட்டிருந்த தடைகள் ஒரு வழியா முடிவுக்கு வரும். ஸோ… வருமானம் மெதுமெவா இன்கிரீஸ் ஆகும். சனீஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏத்துங்க. சூப்பர் சந்தோஷம் பெருகும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 23  முதல் ஏப்ரல் 25 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம்.

கடகம்

மனசில் இருந்த பாரங்கள் குறைஞ்சு, லேசாகி நிம்மதி வரும். சிலருக்குச் சின்ன செலவுகள் காரணமாக் கைமாத்து வாங்க வேண்டியிருக்கலாம். பட் அது ஒங்களுக்குப் பெரிய டென்ஷன்லாம் குடுக்காதுங்க. தொழிலிலும் பணியிலும்  புதுப்புது டெக்னிக்ஸைக் கையாண்டு சக்ஸஸ் பார்ப்பீங்க. இந்த வாரம் புதுமுயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடை வீங்க. சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். நல்ல செயல்களில் ஈடுபடு வீங்க. புண்ணியம் சேர்த்தப்பீங்க. டாடிக்கு நல்ல விஷயங்கள் நடைபெறும். சின்னச்சின்ன விழாக்கள் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். புது இன்வெஸ்ட்மென்ட் உங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்.  பணவிஷயமான பிராப்ளம்ஸ் கொஞ்சம் கொஞ்சமா தீர்ந்து முடிவுக்கு வரும். சிவன் கோயிலில் அர்ச்சனை அபிஷேகம் செய்ங்க. நல்ல விஷயங்கள் தானே நடக்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 27 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம்.

சிம்மம்

இந்த வாரம் புதிய ஜாப் முயற்சி செய்யலாம். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்யறவங்களுக்கு இன்கிரிமென்ட் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு வரக்கூடும். சிலருக்கு இடமாற்றம் தேடி வரும்.  சிலருக்கு இன்கிரிமென்ட் வரலாம். சிலருக்கு இந்த அத்தனையுமே ஒண்ணா வரக்கூடும். கணவன் மனைவி இடையே இருந்த பிராப்ளம்ஸ் நீங்கி அந்நியோன்னியம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாக சான்ஸ் இருக்கு. இன்கம் திருப்தி தரும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் சிறந்து விளங்குவாங்க. ஸ்டூடன்ட்ஸ்க்குக்  கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வாகனங்களில் நிதானம் கண்டிப்பாக் கடைபிடிக்கணுங்க. கூர்மையான பொருட்களை கையாளும் போது கேர்ஃபுல்லா இருங்க . பெரிய அளவில் இன்வெஸ்ட் செய்ய செய்ய வேணாம். ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் செய்யறதானா சின்ன அமவுன்ட் போடுங்க. ராமர் கோயிலில் சிவப்புப் புஷ்பம் சாத்தி வேண்டிக்குங்க. கட்டாயம் நல்ல விஷயங்கள் நடக்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 27  முதல் ஏப்ரல் 29 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம்.

கன்னி

உடன்பிறப்புக்களிடையே இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த கருத்து வேறுபாடுகள் உங்க முயற்சியால முடிவுக்கு வரும். பிள்ளைங்க நடந்துக்கும் முறையில் அவங்க மேல உள்ள  பாசத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் இப்போ அவங்களறாலேயே தீர்ந்து நிம்மதி வரும். சிலருக்கு மகான்களின் சந்திப்பால் நல்ல டர்னிங் பாயின்ட் ஏற்படும். நேர்த்தியா டிரஸ் மற்றும் மேக் அப் செய்துகிட்டு, விருந்தினர்களுடன் ஜாலியா… ஹாப்பியா என்ஜாய் செய்வீங்க.. கவர்மென்ட் உதவியால ஏதோ ஒரு வகைல முன்னேற்றம் ஏற்படும். ரூர் போவீங்க. சந்தோஷம் பெருகும். தீயோர் தொடர்பால் கடந்த சில வாரங்கள் ஏற்பட்டிருந்த வீண் பிரச்சனைங்க முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உள்ளவங்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படலாம். குழந்தைங்களால இத்தனை நாளும் இருந்துக்கிட்டிருந்த  தொல்லைங்க நீங்கும். விஷ்ணு கோயில்ல துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்ங்க. நிறைய நிம்மதி கெடைக்கும்.

துலாம்

பப்ளிக் பிளேஸ்ல வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லதுங்க. ஃபேமிலியில் மனமகிழ்ச்சி, சிரமங்களை எதிர்கொண்டு வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவீங்க. இந்த வாரம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடைபெற்று மனதில் சந்தோஷம் பொங்கும். நண்பர்க்ளோட கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும்.புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலமாகப் பணப் பயன்களை அடை வீங்க. சிலருக்குப் பாசம் மிக்க உறவுகளை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ண சந்தர்பம் கெடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட்டு மாட்டிக்க வேணாம். யாரை நம்பியும் லோன் தர வேணாம். வண்டி வாகனங்களில் போகும் போது கேர்ஃபுல்லா இருங்க. மகாலட்சுமிக்கு (தாயாருக்கு)ப் புடவை சாற்றி வேண்டிக்குங்க. கஷ்டங்கள் அத்தனையும் ரெக்கை கட்டிப் பறந்து ஓடிடும்.

விருச்சிகம்

பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ் வீங்க. அப்பா வழி ரிலேடிவ்ஸ்ஸோட ஹெல்ப்  கெடைக்கும். அப்பா வழி சொத்துக்கள், பிதுராஜ்ஜித சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அபரிமிதமான பணவரவு உண்டு. பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவைங்க. பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் பிராப்ளம்ஸ் வம்பு வழக்கு வரும். வாகன பழுதுகள் நீங்கும். வெளிநாடு போகும் அமைப்பு வரும். ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் வரும். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பல காலம் ஒங்க கிட்ட இருந்து வந்த விரக்தி மனப்பான்மையும் மொரட்டுத்தனமும் நீங்கும். ஆன்மிக ஈடுபாடு வரும். மனசில் கருணை எண்ணம் அதிகரிக்கும். நெறையப் பேருக்கு ஒங்களைப் பிடிக்கும். முருகருக்கு விளக்கேற்றி துவரம்பருப்பு தானமும் பவழ தானமும் செய்ங்க. அருமையான அதிர்ஷ்டம் அடிச்சுக்கிட்டு ஓடி வரும்.

தனுசு

அரசியல் துறையில் உள்ளவங்களுக்குப் புதுப்புதுப் பொறுப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் மூலம் ஹெல்ப் தேடி வரும். உடல் உபாதைங்க விலகும். தோல் நோய்கள் நீங்கி அப்பாடான்னு நிம்மதி பிறக்கும். அலுவலகத்தில் வேலை  செய்யும்போது ரொம்பவே கவனமும் நிதானமும் தேவைங்க. வேலையில் பிரமோஷன்  வரும். புதிய பொறுப்புகள் வரும். சம்பளம் அதிகரிக்கும். வேலையில் இருந்துக்கிட்டிருந்த பிரச்சினைகள், சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். பல்வேறு சிறப்புகள் வீடு தேடி வரும். முகத்தில் பொலிவு கூடும் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். கவர்மென்ட் டிபார்ட்மென்ட்ல வேலை செய்யறவங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். இளைஞர்கள் வாழ்வில் முன்னேறச் செய்துக்கிட்டிருக்கற முயற்சிகள் எல்லாம் பலிதம் ஆகும். பைரவருக்கு விளக்கு ஏத்திக் கும்பிடுங்க. மனசுல சந்தோஷம் அதிகமாகும்.

 மகரம்

பிரைவேட் கம்பெனியில் வேலை செய்யறவங்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்குத் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியில் உள்ளவங்களுக்கு இன்கம் அதிகரிக்கும்.  பிள்ளைங்க மூலம் நன்மைகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதியால் லாபம் அதிகரிக்கும். சிலர் பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய வண்டி வாகனங்களை வாங்க சான்ஸ் உள்ளது. வாகனம் ஓட்டும்போது கவனமும் நிதானமும் தேவைங்க.  மம்மிகிட்ட சண்டை வேணாம். பயணங்களில் விழிப்புணர்வு அவசியம். இரவு நேரப் பயணங்களைத் அவாய்ட் செய்ங்க. உணவு விசயத்தில் கேர்ஃபுல்லா இருங்க. புது ஆளுங்ககிட்ட வீண் வாக்குவாதங்களைத் அவாய்ட் செய்ங்க. சோம்பல் இல்லாம பார்த்துக்குங்க. அம்பாள் .. துர்க்கை  கோயில்கள்ல குங்குமம் வாங்கிக்குடுத்து அர்ச்சனை செய்ங்க. ஆல் பிராப்ளம்ஸ் சால்வ் ஆகும்.

கும்பம்

உஷ்ணம் தொடர்பான நோய் ஏற்பட்டுச் சரியாயிடுங்க. ஆரோக்யம் மெல்ல மெல்ல மீளும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவாங்க . வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கெடைக்க சான்ஸ் இருக்குங்க. ஸ்டூடன்ட்ஸ்க்கு  சிறப்பான வாரம். உயர்கல்வி யோகம் தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வும் வேலையில் இடமாற்றமும் உண்டாவதில் கொஞ்சம் டிலே இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்கம்அதிகரிக்கும். லேடீஸ்க்குநன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் கவனமும் நிதானமும் தேவைங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் ஒங்களைத் தேடித் தானா ஓடி வரும்.

மீனம்

மனசுக்குள்ள கும்மாளமும், குஷியும் இருக்கும். செலவுக்கும் குறைவிருக்காது. வருமானமும் கொறையாது. அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரிலேடிவ்ஸ்ஸோட எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே கோபமெல்லாம் மறைந்து சமாதானமாகி, ஹாப்பி ஆயிடுவீங்க. அளவுக்கு அதிகமாக முயற்சிகள் செய்து நன்மைகள் காண்பீங்க. அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் நன்மைங்க ஏற்படும். குழந்தைங்களின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனசுல சந்தோஷம் ஏற்படும். நீங்கும் உயரதிகாரிகளிடம் கவனமாக பேசவும். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். வீட்டிற்குத் தேவைங்கயான ஆடம்பர பொருட்கள் வாங்குவீங்க . தட்சிணாமூர்த்தியை வணங்குங்க. நன்மையெல்லாம் தேடி வரும்.