மேஷம்

பல வாரங்களுக்குப் பிறகு, கணவன்  மனைவிக்கிடையே நல்லுறவு இருக்கும். திருமணமாகாதவங்களுக்குக் நல்ல இடம் அமைஞ்சு திருமணம் கைகூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. அதுக்காகப் பெரிசாய்க் கவலைப்பட எதுவும் இல்லை. வந்த வேகத்திலேயே பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரவும் வந்தாச்சு! கவலையைத் தூக்கி மேஜைக்குக் கீழே உள்ள அந்த டஸ்ட் பின்னில் போடுங்க. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம். மனசு சந்தோஷப்படும்படியான இன்ஸிடென்ட்லாம் ஒன் பை ஒன்னாக  நடைபெறும். சொத்துப் பிரச்சினை ஒரு வழியா முடிவுக்கு வரும். அடகு நகையை மீட்கப்போறீங்க பாருங்க. ஹாப்பியான விஷயங்களுக்காக செலவுகள் அதிகரிக்கும்.  சிறு சிறு தாமதங்களைத் தவிர்க்க இயலாது.

ரிஷபம்

காதலில் இது வரை இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் சரி யாகும். சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க ..ஆம். உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க… வீட்டிலும் உங்களின் செயல்பாடுகள் அட என்று வியக்க வைச்சுப் பாராட்டுக்களை அள்ளிக் குடுக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒங்களோட சிரமம் அறிந்து ஒங்களோட பொறுப்பு களை மத்தவங்க பகிர்ந்து கொள்வாங்க.  வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்துவீங்க. மனசுல அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் அமையலாம். அது நீங்க ஆசைப்பட்டபடியே அமையும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

உங்களால நிறைய உழைக்க முடியும். தெரியும். பட்…  கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்கங்க. ஓ.கே? அதிலும் மத்தவங்களுக்கு உழைக்கணும்னா ஓடிப்போய் முதல் ஆளா நிப்பீங்க. பொதுவாய்ப் பார்க்கப்போனா இது நல்ல விஷயம்.. பாராட்டப்பட வேண்டிய அம்சம். ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் அலுவலகம் என சொந்த விஷயங்கள் காத்திருக்கும்போது அதற்கு முக்கியத்துவம் குடுங்க. என்றைக்கோ கலந்து கொண்ட விஷயம் ஒன்றிற்கு இன்றைக்கு முக்கியத்துவம் கிடைத்து, பாராட்டு/ பரிசு பெறுவீங்க. பக்தி மார்க்கத்துல மனசு ஈடுபடும். முன் எப்பவோ செய்துக்கிட்ட பிரார்த்தனைங்க நிறைவேறும். எடுத்த காரியங்களை துணிவோடு முடிப்பீங்க. கூட்டுத் தொழிலில் அமோக லாபம் பார்ப்பீங்க. வாரக் கடைசில அதிகப் பொறுமையோட இருங்க.

சந்திராஷ்டமம் : ஜூன் 14 முதல் ஜூன் 16 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

நேரம் காலம் பார்க்காமல் கணிணியின் முன் உட்கார்ந்து உழைக்கறீங்களே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக்கூடாதா? இதை நான் கேட்கலை. உங்க உடம்பு கேட்குது. அதன் வார்த்தைக்கு மதிப்புக் குடுத்துடுங்க. டாடிக்கும் உங்களுக்கும் வாக்குவாதம் வராமல் கவனமா இருங்க. வெற்றிப்படியில் சில தடைகள் நேரிடலாம். பொருட்படுத்த வேண்டாம். திருமணம் சம்பந்தமான விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். உங்க கிட்ட ஒரு விஷ யத்தைப் பாராட்டியே தீரவேண்டும். உங்களோட பொறுமை. அது உங்களை மேலும் உயர்த்தும். காத்திருந்த விஷயம் கனிந்து சந்தோஷமும் வெற்றியும் தரும். புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் காட்டுவீங்க. ஆபரணச் சேர்க்கை உண்டு. வழக்குரைஞர்கள் சிறப்பாக தொழில் செய்வாங்க. மருத்துவர் களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 16 முதல் ஜூன் 18 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

அவசியமற்ற செலவுங்க செய்ய வேண்டியிருக்கலாம்.    நீங்க மாணவர்  அல்லது மாணவியா? எனில் கல்வியில் சிறப்புப் பெற்று வெற்றியடைவீங்க. வீட்டில் உலகப் போர் கடந்த சில வாரங்களாய் நடந்துக்கிட்டிருந்தது அல்லவா? கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக்கிட்டே வரும். உல்லாசப் பயணத்துக்கு வருமாறு யாராச்சும் உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்க.  கட்டுமான தொழிலில் கணிசமான லாபம் கெடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வந்து பொருளாதார சிக்கலை தீர்க்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவாங்க. குடுக்க வேணாம்னு சொல்லலை.  ஆனால் யாருக்குக் கொடுக்கலாம் எவ்வளவு தரலாம் என்பதில் சற்றே கண்டிப்பா இருங்க.

சந்திராஷ்டமம் : ஜூன் 18 முதல் ஜூன் 20 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

செலவு பற்றியெல்லாம் பயப்பபடாதீங்கங்க. அது நன்மையும் மகிழ்ச்சியும்தான் தரும். குழந்தைங்களை மிகவும் ஜாக்கிரதை யாகக் கையாளுங்கள். எடுத்த காரியம் யாவினும் வெற்றி. எனினும் (வால்யூம் கம்மியா) அடக்கி வாசியுங்க. மூட்டை மூட்டையாய்ப் பணத்தைக் கொண்டு போய் எதிலும் இன்வஸ்ட் செய்ய வேண்டாம். எனினும் சின்ன அளவில்  ரிஸ்க் எடுப்பதில் லாபம் உண்டு. குழந்தைங்க பத்தின பயத்தைக் கழற்றிக் கடாசுங்க. நல்லா இருப்பாங்க.  டோன்ட் ஒர்ரி. சிலருக்கு அக்கம்பக்கத்துல உள்ளவங்களால தர்மசங்கடமான நிலைமை ஏற்படும். சிவபெருமானை வழிபடுங்க. காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும். மனசுல ஆசைப்பட்ட பொண்ணை/ இளைஞனைக் கரம் பிடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து மனசை சந்தோஷமாக்கும்.

துலாம்

பேச்சில் மிகுந்த புத்திசாலித்தனமும் கவர்ச்சி அம்சமும் கூடும். லாபங்கள் அதிகரிக்கும். நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். எனினும் எதையாவது ஏடாகூட மாய்ச் செய்து வைக்கவும் வேண்டாங்க.. நல்லவங்களா இருங்க. ஜாலியா என்ஜாய் செய்வது எந்த அளவு முடியுமோ அந்த அளவு படிப்பில் கவனத்தைக் கொண்டு போய்க் கொட்டுங்க. தெய்வீக சிந்தனையும் கருணையும் இரக்கமும் மனசுல  நிறையும். அடுத்தவங்களை நம்பி எந்த ஒரு காரியத்துலயும் எறங்காதீங்க.  எதிர்பாராத வருமானம் கெடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையால ஒரு நன்மை ஏற்படும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைச்சு சந்தோஷமடைவீங்க. மனைவி சொல்லே மந்திரம் என்று இந்த வாரத்தை ஓட்டுங்க. யாருக்கும் வாக்குக் குடுக்காதீங்க. எனில் நோ பிராப்ளம் வீக்.

விருச்சிகம்

சந்தோஷத்தில் தலைகால் தெரியாமல் குதிக்க வேண்டிய… சோர்வுடன் அல்லது தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் வளைய வர்றீங்களே.. அதைப் பாராட்டியே தீரணுங்க. பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்க. உங்களுக்குக் கீழே வேலை பார்க்கறவங்களைக் கொஞ்சம் கவனத்துடன் கண்காணியுங்க. புதிய விஷயங்கள் தெரிய வரும். உங்களுக்கே உரிய முறையில் புன்னகையுடன் விசாரிங்க. எதிலும் கவனமா இருந்துடறது நல்லது. குறிப்பாப் பண விஷயத்துல…. குடுக்கவே குடுக்காதீங்க. (பணத்தையும் வாக்கையும்). சகோதர சகோதரிங்களை எதிரியா நெனைக்க வேணாம். நண்பர்கள் உங்களுக்கு வழிகாட்டியா செயல்பட்டு நன்மை செய்வாங்க. பொறுமை அவசியம் தேவை.

தனுசு

சில சமயங்களில் குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்படலாம். குடும்ப ஒற்றுமை கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல காலம்தான் நடக்குது. எங்கும் எதிலும்.. பல நாளாய்க் காத்துக் கிட்டிருந்த நன்மையெல்லாம் கனியப்போகுது. முன்னோர் வழியில் ஏதாவது சொத்து வரும். உங்களை எந்தத் திறமை இல்லாதவர்னு எல்லாலும் கிண்டல் செய்துக்கிட்டிருந்தாங்களோ அதே திறமையில் வைராக்யமாய் ஜெயித்துக் காட்டுவீங்க. இந்தத் தன்னம்பிக்கை…. தன்னம்பிக்கைன்னு ஒண்ணு இருக்கே.. அது முதல்ல பிடிபடும். அது போய் மற்ற எல்லா நன்மைகளையும் அழைச்சுக்கிட்டு வரும். உங்களின் பரந்த மனப்பான்மையால வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும் பல வகைகளில் வியூகம் அமைத்து வியாபாரத்தை/ வருமானத்தை/ இன்வெஸ்ட்மென்ட்ஸைப் பெருக்குவீங்க.

மகரம்

அரசாங்க அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பாங்க.  சந்தனம் வீடியோ பூமாலைன்னு உங்க குடும்பத்தில்  அமர்க்களப்படும். மம்மிக்கும் உங்களுக்கும் இடையில் சந்தோஷம் தரும் நல்லுறவு இருக்குங்க. பழைய விஷயங்களை மறந்து மன்னிச்சுடுவாங்க. நீங்களும் நம்பிக்கைக்கு உகந்த வகையில் நடந்துக்குவீங்க. உங்களை உங்க பெற்றோர் ரொம்பவும் சப்போர்ட் செய்வாங்க. அப்பாவுக்கு டூர் போகவேண்டிய அவசியம் வரும். சாப்பிடும் விஷயத்துல கவனமா இருங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க. அளவா சாப்பிடுங்க. இன் ஷார்ட், வயிற்றை… குறிப்பா ஜீரண மண்டலத்தை கவனமாப் பார்த்துக்குங்க. பேங்க்கில் உங்கள் கையிருப்பு அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களால தொழிலுக்குத் தேவையான ஆர்டர்களை பெறுவீங்க.  பேச்சில் கடுமை வேணாங்க.

கும்பம்

நன்மையும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பேச்சில் கவனம் தேவை. எஸ்பெஷலி, கோபமான பேச்சைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நிச்சய தார்த்தம்.. திருமணம்.. வளைகாப்பு.. குட்டி பாப்பாவுக்குப் பெயர் சூட்டுவிழா என்று ஏதாவது ஒரு சுப காரணத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். அந்த செலவு சந்தோஷத்தைத் தரும். கிட்டே சேர்க்காத உறவினர்கள் உள்ளே வருவார்கள். ராசியாகும். சந்தோஷம் வரும். எஸ்பெஷலி உடன்பிறப்புக்கள். முன்பைவிட இப்போது அதிகத் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீங்க. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீங்க. குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.   பய உணர்ச்சி குறையும்.

மீனம்

மருத்துவச் செலவுகள் ஏற்படுவதுபோல் இருந்தாலும் வாரக்கடைசியிலேயே செவ்வாய் நகர்ந்துவிடுவதால் பிரச்சினை தீரும். ஆபரணங்கள் அணிமணிகள் வாங்க சற்று அதிகம் செலவு செய்வீர்கள். அரசாங்கத்தின் மூலம் ஏதோ ஒரு நன்மை எதிர்பார்த்துக் கிட்டிருந்தீங்களாங்க? அது நல்ல முறையில் நிறைவேறுமே. ஒன்றிற்கு மேற்பட்ட வருமானங் கள் வரும். பத்தாம் வீட்டில் புதன் வக்கிரமாகியிருப்பதால் புதிய வேலை தேடும் பணி இப்போதைக்கு வேண்டாமே குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்க மம்மி யின் ஆதரவால் உங்களுக்கு ஒரு நன்மை ஏற்படுங்க. பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் தானாக நடைபெறுங்க.