வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

Must read

மேஷம்

ஒன்பதில் சனி இருப்பதால் திடீர் அதிருஷ்டங்களை எதிர்பார்க்க வேண்டாம் உழைப்பை மட்டுமே நம்புங்க. குரு உங்கராசியைப் பார்க்கிறார். அதாவது தன் வீட்டைத் தானே பார்க்கிறார். ஆகவே மனதில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும்.சகோதரர்களுடன் குருக்ஷேத்திர யுத்தமெல்லாம் வேண்டாம். ஸ்பீட் பிரேக்கர் போட்டாற்போல் வேகம் குறையும்.மனசில் நல்ல சிந்தனைகள் விதைப்பீங்க. மகனோடு/ மகளோடு உலக யுத்தம் வேண்டாம். வாக்கினில் கொஞ்சம சர்ககரை தடவறது நலலது. இந்தப் பக்கத்திலிலுந்து ஒரு லாபம் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு லாபம் என்று வரும். அரசாங்கத்திடமிருந்து பைசா வரும். 11க்கு குரு பார்வை இருப்பதால் லாபம் அதிகரிக்கும். இதான்.. இந்த ஒரு குணம்தாம்மா எனக்கு உங்ககிட்ட வருத்தம் தருது. ஒண்ணா… ஒரேயடியாய் உங்களைப் பற்றி உசத்தியா நினைச்சுக்கறீங்க, இல்லாட்டி மொத்தத் தன்னம்பிக்கையும் வடிஞ்சு ஒரு ஓரமாய் உட்கார்ந்துடறீங்க. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைன்னு ஒண்ணும் இருக்கு. உங்க பிசினஸ் அருமையாய் பிக் அப் ஆகி மனசு முழுக்க சந்தோஷம் நிரப்பும்மா. டோன்ட் ஒர்ரி.

சந்திராஷ்டமம்: 18.02.2017 முதல் 20.02.2017 வரை

ரிஷபம்

ராசிக்கு  உரிய கிரகம் சுக்கிரன். அவர் லாபத்தைக்  குறிக்கும் பதினோராம் வீட்டில் அமர்ந்தி ருக்கிறார். எனவே பேச்சில் கவர்ச்சி கூடும். அதனால் லாபமும் கூடும்உங்கள் பத்தாம் வீட்டுக்கு குரு பார்வை ஏற்பட்டிருப்பதால் புதிய வேலை மாற விரும்பினால் அதற்கு இதுவே உகந்த நேரம். எட்டில் சனி என்பதால் வண்டியை கவனமாக ஓட்டுங்கள்.இரண்டாம் வீட்டுக்கு சனி பகவானின் பார்வை கிடைத்திருப்பதால் குடும்ப நிகழ்வுகளில் சற்று மெது வான போக்கு இருக்கலாம். அதைக் கண்டு பயம் எதுவும் வேண்டாம்.முன் ஒரு காலத்தில் செய்தீங்களே முயற்சி…அது இப்போ பலன் கொடுக்கும். கவர்ன்மென்ட் வேலை கிடைக்கும். ஆனால் அதை ஒப்புக்கறதுக்கு முன்னால் நல்லவங்களோடு கலந்து நாலையும் யோசிங்க. ஜாலியான பொழுது போக்குக்காக வயலில் விதை நெல் தூவுவது போல் பணத்தை இறைக்க வேண்டாம். திருமணம் நிச்சயமாகவில்லை என்று காத்திருந்தவர்களுக்கு ‘ ஓ இத்தனை நல்ல பார்ட்னர் அமைய வேண்டும் என்பதனால்தான் ஆண்டவன் இவ்வளவு காலமாக  வெயிட் செய்ய வெச்சானா!’ஃ

சந்திராஷ்டமம்: 20.02.2017 முதல் 23.02.2017 வரை

மிதுனம்

ஐந்தாம் வீட்டுக்கு உரிய சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருப்பதால் குழந்தைகளின் வாழ்வில் வசந்தம் வீசும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும். ஒன்பதாம் வீட்டில் சூரியனும் புதனும் இணைந்திருப்பதால் அதிருஷ்டமும் அரசாங்க நன்மையும் ஒருங்கே கிடைக்கும். பத்தில் புதனுடன் சுக்கிரனும் இருப்பதல்  அரசாங்க உத்யோகம்  அல்லது வங்கி உத்யோகம் கிடைக்கும். பாஸ்போர்ட் விஸா போன்றவற்றிற்காகக் காத்திருந்தவர்களுக்கு விரும்பியபடியே கிடைக்கும். கலைத்துறை சார்ந்த தொழில் வளரும். ஆறாம் வீட்டில் சனி இருப்பதால் நீங்கள் கடன் மனு செய்திருந்தால் அது கிடைப்பதற்குக் காத்திருக்க வேண்டி வரலாம். பொறுத்தாலும் கிடைத்துவிடும்.  மனதறிந்து எந்தத் தப்பும் செய்யாதீங்க. முடிந்தேவிட்டது என்று நீங்க கைவிட்ட மேட்டர்கள் திடீர்னு துளிர்விட்டுக் காற்றில் ஆடி வயிற்றில் பல லிட்டர் குளிர் பால் வார்க்கும். கணவருக்கு/ மனைவிக்கு உயர்வுகள் தன்னிச்சையாய்க் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்டிருந்த கோபங்களும் ஆத்திரங்களும் மகிழ்ச்சி சுனாமியால் இருந்த இடம் தெரியாமல்  போயிருக்கும்

சந்திராஷ்டமம்: 23.02.2017 முதல் 25.02.2017 வரை

கடகம்

பன்னிரண்டுக்கு குரு பார்வை இருப்பதால் செலவுகள் எவ்வளவு இருந்தாலும் அவை யெல்லாம் சுப செலவுகள்தான். அவற்றால் நன்மையும் மகிழ்ச்சியும் சந்தோஷமும்தான் கிடைக்கும்.நாலில் குரு என்பதால் தாயாருக்கும் உங்களுக்கும் நடுவில் நல்லுறவும் நல்லிணக்கமும் இருக்கும். முன்பிருந்த சண்டை சச்சரவுகள் அல்லது மனத்தாபங்கள் குறைந்து நல்லுறவு ஏற்பட்டு நிம்மதி அளிக்கும்.  மெயில்பாக்சில் உங்களை மகிழ்ச்சியில் துள்ளச் செய்யும் செய்தி வரும். உங்க ஆரோக்யம் உங்க கையில்தான் இருக்கு. பேச்சு சாப்பாடு இரண்டையும் சி சி காமரா போடாத குறையாக் கண்காணியுங்க. உங்க வாழ்க்கைப் பிரச்சினைகளை மத்தவங்க தீர்மானிப்பதற்கு மறந்தும் அனுமதிக்காதீங்க. நம் ஸ்டியரிங்கை அடுத்தவங்க பிடிச்சு ஓட்ட அனுமதிக்க முடியுமா என்ன? முன்பைவிட இப்போ வருமானமும் மன மகிழ்ச்சியும் பிளஸ் பிளஸ்ஸாகியிருக்குமே! ஹப்பியின் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் சிதறி நாலு கால் பாய்ச்சலில் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீங்களே… ரைட்டா? புத்திசாலித்தனம் உங்க உடன் பிறவா சகோதரி. அது உங்களை இக்கட்டிலிருந்து காக்கும். மூக்கின் மேல் சோபா போட்டு உட்கார்ந்திருக்கும் அந்தக் கோபமும் உடன் பிறந்ததுதான், திட்டி அனுப்பிடுங்க.

சிம்மம்

அதிருஷ்ட வீடு என்றும் செளபாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்பதாம் வீட்டை பொன்னன் என்று அழைக்கப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த  குரு பகவான் பார்க்கத் துவங்கியதால் அதிருஷ்டம் உயரும். ஒன்பதாம் வீட்டுக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் தந்தைக்கு நன்மைகள் அதிகரிக்கும். உங்களுக்குத் தந்தையின் ஆதரவும் நெருக்கமும் கூடும். அதுவே அதிருஷ்டத்தைக் குறிக்கும் வீடும் ஆகும் என்பதால் உங்கள் அதிருஷ்டம் அதிகரித்து அதிக வருமானமும் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் செல்வாக்கு  அதிகரிக்கும்.தைரியமாய்த் தன்னம்பிக்கையுடன் அலுவல விஷயங்களைத் தீர்மானிக்கிறீங்க. நன்மைதான் விளையும். மன சாட்சியை மட்டும் அப்பப்ப கன்சல்ட் செய்துக்குங்க. எதற்கெடுத்தாலும் கோபப்படணும்னு வெச்சிருக்கீங்களே அந்த  பாலிசியை மட்டும் மாத்திக்குங்க. நீங்க எது செய்தாலும் உங்களுக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி நன்மையில்தான் முடியும். குழந்தைங்க விஷயத்தில் கண்டிப்பாய் இருக்கேன் பேர்வழி என்று சொதப்பிவிட்டு அப்புறம் விழி பிதுங்க வேண்டாம். கூடிய சீக்கிரம் அவங்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து நீங்களே மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்து அதிசயப்படப் போறீங்களே

கன்னி

உத்யோக ஸ்தானமாகிய பத்தாம் வீட்டுக்கு குரு பார்வை. இதன் காரண மாக வருமான உயர்வு கிட்டும்.   குரு பகவான்தான் தனது சுபமான கண்களால் உங்கள் ராசியைப் பார்ப்ப தால் திருமணமாகாவங்களுக்குக் கல்யாணம். குழந்தை பிறக்காதவங்க வீட்டில் நல்ல செய்தி! உங்கள் ராசியை குரு பகவான் பார்ப்பதால் படிப்பில் நல்ல மதிப்பபெண் வாங்கி முன்னேறுவீர்கள். திடீரென்று பணவரவு அதிகரிக்கும். வருமானம் குவியும். அலுவலகத்தில் லாபங்களும் நன்மையும் கிடைக்கும். நீங்கள் நினைத்தும் பார்க்காத சமயத்தில் உங்களை செல்வம் தேடி வரும். குழந்தைகளின் வாழ்வு வளம் பெறும். வங்கி இருப்பு அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் புதன் 7ல் இருப்பதால் உங்கள் இல்லத்தில் உறவினர் வருகை உற்சாகம் தரும். மாமன் வழி சொந்தங்களுடன் உறவு பலமாகும்.இரண்டாம் வீட்டு குரு பகவான் காரணமாகப் பேச்சில் இனிமையும் பணிவும் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடைபெறும் அல்லது குழந்தைப் பேறு கிட்டும்கோயில் குளம்னு ஜாலியாய் சூட்கேஸைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட்டீங்க. பாப்பாவைக் கொஞ்சப்போறீங்க. கங்கிராட்ஸ். திருமணம் பற்றி எதுக்காக இத்தனை கவலைப்படறீங்க. எல்லாம் தன்னிச்சையாய் நல்லபடியாய் இதோ முடிஞ்சாச்சு. எதற்கெல்லாம் பல காலம் காத்திருந்தீங்களோ அதெல்லாம் வெற்றிகரமாகத்தான் முடியும். 

துலாம்    

பதினோராம் வீட்டில் அமரந்திருக்கும் ராகுவும்  அந்த வீட்டைப் பார்க்கும்  கேதுவும் நன்மை களை அளிக்கத் தயாராக உள்ளனர். ராசியில் சந்திரன் வருகிறார். மனத் தெளிவு அதி கரிக்கும். குழப்பமான விஷயங்களை நீங்களாகத் தவிர்ப்பது நல்லது. அதீத யோசனைகள் மற்றும் சிந்தனைகள் ஏற்படும். சற்று அல்லாட்டமும் செலவுகளும் இருந்தாலும் சமாளிச்சு நிமிர்ந்துடுவீங்க. கணவருக்கு/ மனைவிக்கு பதவியும் சம்பளமும் உயரும். உங்களுக்கும் வெளுநாட்டு ட்ரிப்பும் இருக்கு. அலுவலகத்தில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிஞ்சுக் கும்,. ஜீரண உறுப்புகள் பற்றி கூகிள் செய்து நிறையத் தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டால் சாப்பாட்டு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பீங்க!  நண்பர்களுக்காகவும் சிநேகிதிகளுக்காகவும் மனம் கசிந்து கடனுக்குக் கையெழுத்துப் போடும் அளவுக்கு உருகா தீங்கம்மா. இருக்க வேண்டிய தொலைவில் இருப்பதும் வைப்பதும் நமக்கு மட்டுமல்ல அவங்களுக்கும் நல்லது  லோன் போட வேண்டாம்மா.

விருச்சிகம்

நாலாம் வீட்டில் கேது. படிப்பில் முழுக் கவனம் செலுத்துங்க. பத்தாம் வீட்டில் அமர்ந்தி ருக்கும் ராகு உங்களுக்கு ஓர் அருமையான உத்யோ கத்தை வாங்கித்தர வாய்ப்புள்ளது! சனி இரண்டில். குடும்பத் தலைவி /தலைவருக்கு…ஆரோக்யம்  கொஞ்சம் பயமுறுத்தும். ஆனால் அதைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம். இப்போது உள்ளவை மிகவும் தற்காலிக் பிரச்சினைகளே. அதிலும் நல்ல நிலையில் குரு இருப்பதால் பணத்திற்கோ நிம்மதிக்கோ குடும்ப ஒற்றுமைக்கோ குறை இருக்காது. இரண்டாம் வீட்டில் சனிபகவான். அதற்கென்ன இப்போ! உங்களை அவர் எதுவும் செய்ய  மாட்டார். நீங்கதான் சனியை வணங்குபவர் ஆயிற்றே!வாகனங்கள் சற்று அதிகச் செலவு வைக்கும். தாயாருடன் பிரச்சினை வராதபடி அனுசரித்துச் சென்றால் நன்மை வரும! கடகத்தின் மீது சந்திரன் வரப்போவதால் வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டு திணற வேண்டாம். எதுவுமே நடக்கும்போது தானாக நடக்கும். கற்பனை பயங்கள் வேண்டாமே! ஐந்தாம் வீட்டில் உள்ள புதன் குழந்தைகளின் அறிவாற்றலையும் சமயோசிதத்தையும் அதிகரித்துக் கொடுப்பதனால் அவர்கள் பள்ளி அல்லது கல்லூரி அல்லது அலுவலகத்தில் நல்லந நற்பெயர் எடுப்பதற்கு உதவுவார். வெளிநாட்டுப் பயணம் நிர்ணயமாகும். சாப்பிட நேரமில்லை. தூங்க நேரம் இல்லைன்னு அலவலகத்தில் வேலை அழுத்தும். (இல்லைன்னாலும் அலுவலகத்தில் என்றைக்குத் தூங்கியிருக்கீங்க!) மம்மி கூட சண்டை. டாடி கூட சண்டை. நண்பர்கள் கூட சண்டை. கத்திச் சண்டை. கத்தாமல் சண்டை. எதுக்கு இதெல்லாம். கின்னஸ்?

தனுசு

ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகளுக்குக் கோபம் ஏற்படலாம். சரி சமமாக சண்டை பேத வேண்டாம்.ஏழரைச் சனி  இருப்பதால் சம்பந்தமில்லாத சிறு பழிகள் ஏற்பட்டாலும் ராசிக்கான குரு பார்வை காரணமாக அனைத்தும் விலகும். சனி காரணமாக உழைப்பு அதி கரிக்கும். எனினும் குரு காரணமாக ஊதியம் உயரும். பன்னிரண்டில் சந்திரன் வார ஆரம்பத்தில் வருவதால் வெளியூர்ப்பயணங்கள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். அதற்கான செலவினங்கள் அதிகரிக்கும். எனினும் செலவுகள் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். வங்கிக் கணக்கில் தொகை உயரும். மாணவர்கள் தங்கள் மார்க்கைப் பார்த்துக் கண்கள் விரியும். அதிருஷ்டமும் உழைப்பும் ஒரு சேரக் கைகொடுக்கறதுன்னா சும்மாவா? வீட்டில் ஜாதகம் எடுத்திருந்தால் மடமடன்னு முடியும் (கவலைப்படாதீங்க… அம்மா அப்பாவும் இதைப் படிப்பாங்க?) பாப்பா பிறக்கும். டாட்டா போகத் திட்டமிட்டிருந்தீங்க. நடக்கும்.

மகரம்

இரண்டாம் வீட்டுக்கு ராகு பார்வை. பேச்சைக் குறையுங்க. அல்லது பேசாதீங்க!  கணவருக்கும்/ மனைவிக்கும் உங்களுக்கும் கொஞ்ச நாளாய் ஃபைட்டிங் ஃபைட்டிங். விட்டுக் கொடுத்துடுங்களேன்? தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும். கார் வாங்கப் போறீங்க. வீடு வாங்கவும் உகந்த சமயம் இது. பயணம் போவீங்க. நிறையப் பயணம்! பெரிய பயணம்! டாடிக்கு எல்லா நன்மைகளும் ராக்கெட் வேகத்துல ஓடுமே. இதபாருங்க.. இந்த சோம்பல் சோம்பல்னு ஒரு விஷயம் இருக்கு பாருங்க அதைத் தூக்கி ரீசைக்ளிங்க தொட்டியில் போட்டு அதையும் முழுக்க காலி பண்ணிடுங்க. சற்று அழகாகத் திட்டமிட்டு ஒழுங்காய் நிறைவேற்றினால் ஜெயிச்சு நிமிர்வீங்க. மாணவிகள் போன வருஷம் மாதிரிக் காலாட்டிக்கிட்டு மார்க்கை லாரியில் அள்ள முடியாது. கொஞ்சம் படிங்க பல வருடங்களாய் எவ்வளவு திட்டமிட்டாலும் போக முடியாத ஊர்களுக்கும், கோயில்க ளுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் இனி உடனுக்குடன் போவீங்க.

கும்பம்

ராசியின்மீது கேது பகவான் அமர்ந்திருப்பதாலும் ராகு பார்வை கிடைத்திருப்பதாலும் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வெளிநாட்டு உத்யோகம் கிடைக்கும்! கேது என்பவர் ஞான காரகன் என்பதால் அரிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு மற்றறர்களை வியப்புக்குள்ளாக்கு வீர்கள். அவர் உங்கள் பத்தாம் வீடடைப் பார்க்கிறார். லாபத்தைக் குறிக்கும் பதினோராம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் லாபங்களில் சற்றுத் தடைகளும் தாமதங்களும் ஏற்படக்கூடும். எனினும் ராசிக்கு குரு பார்வை இருப்பதால் செல்வ நிலை உயரும். உங்கள் ராசிக்கு ராகு பார்வை இருக்கிறதே. எனவே வெளியூர் வெளிநாட்டிலிருந்து  நெருங்கிய உறவினர்கள் வருவார்கள். அவர்களால் நன்மைகளும் விளையும்.பத்தாம் வீட்டில் சந்திரன் வருகிறார். அவர்  எண்ணங்களையும் சிந்தனைகளையும் மனதையும் குறிப்பவரும் கட்டுப்படுத்துபவருமான  மனோகாரகன். எனவே உத்யோகம் பற்றித் தெளிவாக  முடிவெடுப்பீங்க!மனதிலே குழப்பமில்லை! அலுவலத்தில் உங்கள் நற்பெயரை அதிகரித்துக் கொடுக்கவும் அதன் காரணமாக மேலும் மேலும் வாய்ப்பு அதிகரிக்கவும் இந்த வாய்ப்பு உதவும்.அதை இதை சாப்பிட்டு ஆரோக்யத்துக்கு எதிரியாயிடாதீங்க. ஹப்பாடான்னு ரிலாக்ஸ் பண்ணுவீங்க. வீட்டில் யாருக்கோ திருமணம் நடக்கலைன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே. கவலை தீர்ந்ததா? கணவர்/ மனைவி வீட்டாரிடம் நல்ல பெயர் எடுப்பீங்க.எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க.போனவை எல்லாம் வரும். திருமணத் தடை சீக்கிரம் நீங்கும்.

மீனம்

இரண்டாம் வீட்டை குரு பார்க்கிறார். மாணவர்களுக்கும் திருமணம் குழந்தைப் பேறு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருப்பவர்க ளுக்கும்  இனிப்பான செய்தி காத்திருக்கிறது.ஆறாம் வீட்டை ராகு பார்க்கிறார் என்பதால்  நண்பனும் பகை போல் தெரியும்.  அவர்கநள் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.  ஆறாம் வீடு கடனையும் குறிப்பது என்பதால் கடன் வாங்கி எதுவும் செய்யாதீர்கள்.  ஒரு வேளை பல நாட்கள் திட்டமிட்ட நியாயமான கடன் வாங்க வேண்டியிருந்தால் சனி பகவானை வேண்டிக்கொண்டு செய்யுங்கள். பதினோராம் வீட்டை சனி பார்ப்பதால் வர வேண்டிய லாபங்கள் சற்றுத் தடை தாமதங்ளுடன்தான் வரும். எனினும் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் சரியாகிவிடும். ராசியில் சுக்கிரன். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். பேச்சிலும் செயலிலும் நடைஉடை பாவனையிலும் கவர்ச்சி அம்சம் கூடுதலாகும். மேடை ஏறிப் பேசிக் கைத்தட்டல் வாங்குவீங்க. கல்யாணம் காட்சின்னு சென்ட் போட்டுக்கிட்டுக் கிளம்புவீங்க. குடும்பத்தில் ஒரு சின்ன சைஸ் மேளமாவது கொட்டும். நண்பர்கள் உண்மையான நண்பர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் பகைவர்களைப் பார்த்து பயப்படவும் வேண்டாம். இரண்டும் தலைகீழாகப் போகுது.

More articles

Latest article