மேஷம்

பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் போறதுங்க. மேலதிகாரிங்களால உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகப் போகுது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. புதுசா வேலை தேடறவங்களுக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்துல வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீங்க. ரிலேடிவ்ஸ் மற்றும் நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் ஹெல்ப்ஸ் கெடைக்கும். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். சின்னச்சின்ன குட் நியூஸ்லாம் வரும். உற்சாகம் நிறைஞ்ச வாரம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவீங்க. மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயம் விலகி நம்பிக்க அதிகமாகும். சில விஷயங்களை ரொம்ப ஃபாஸ்ட்டா முடிப்பீங்க.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 22 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

இந்தவாரம் எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மனஉறுதியோட இருப்பீங்க. கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள்ல கூடுதல் கவனத்தோட செயல்படுவது நல்லது. வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். பயம் வேணாம். கனவுகள் பலிக்கும். எண்ணத்தில் தெய்வ சிந்தனையும் பாசிடிவ் தன்மையும் கருணையும் இரக்கமும் படியும். இதனால உங்க முகத்துல பொலிவும் பிரகாசமும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்துல இருந்துக்கிட்டிருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீங்க.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 24 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

குடும்பத்துல ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும். வெற்றி கிடைப்பதுல இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீங்க. எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகளில் இருந்துக்கிட்டிருந்த சோதனைகள் மாறும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்துக்கிட்டிருந்த தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் இன்கம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டு விட்டு தொழில் வியாபாரத்துலகவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்துலஉள்ளவங்களுக்கு  வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது  நல்லதுங்க . குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி ஹாப்பி ஆவீங்க.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 27 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

குடும்பத்துல இருந்து வந்த  டென்ஷன்ஸ் குறைஞ்சு, மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. மத்தவங்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீங்க. மனசுல துணிச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. அக்கம்பக்கத்துல உள்ளவங்க அன்பா இருப்பாங்க. புதுசா ஏதோ ஒரு விஷயம் கத்துக்குவீங்க. அது பிற்காலத்துல உங்களுக்கு லாபகரமா இருக்கப்போகுது பாருங்களேன். இப்போதைக்கு உங்க முக்கிய கவனம் ஆரோக்கியத்துலதான் இருக்கணும். மனசுக்குள்ள புதுசா ஒரு உற்சாகம் பிறக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன்பு ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது.

சிம்மம்

அரசாங்க உத்யோகத்துல உள்ளவங்களும் அரசியல்வாதிகளும் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதனால நன்மைகள் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஸ்டூடன்ஸ்க்குக் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான ஹெல்ப்ஸ் கிடைக்கும். வியாபாரிகள், திட்டமிட்டு வியாபாரம் செய்தால் இலாபம் பார்க்கலாம். அரசு கெடுபிடிகள் குறையும். சோம்பல் உங்களை அணுக விடாமல் கேர்ஃபுல்லா இருங்க. வீண் பயத்துல மனசுல எடம் குடுக்காதீங்க. குடும்பத்துல சின்னச்சின்ன கசமுசா இருந்தாலும் உடனுக்குடன் டென்ஷன்ஸ் தீரும். தொலை தூரப் பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது.  வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான புதிய வழிகள் தென்படலாம். இத்தனை காலமா, அது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. ஜாலியாப் பொழுது போகும்.

கன்னி

வேலைப்பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்பட சான்ஸ் இருப்பதால அப்படிப்பட்ட நிலைமையைத் தவிர்க்க முயற்சி செய்யுங்க. வீட்டுக்கு உறவினர் வருகை காரணமா, விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என குழந்தைகளோடு, ஆனந்தம் பொங்கும். சிலருக்கு அஜீரணத் தொல்லைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவுல பயப்படவோ கவலைப்படவோ நேராது. நீங்க எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாமதமாகவே வரும். ஆனாலும் வந்து சேர்ந்து நிம்மதியாவீங்க. சுருங்கச் சொன்னால், இந்த வாரம் பொருளாதார நிலை சீராக இருக்கும். சிலருக்கு வீட்டில் நிச்சியிக்கப்பட்ட திருமணங்கள் ஃபைனலைஸ் ஆகி சந்தோஷம் விநியோகிக்கும்.  போக்குவரத்து பிரச்சனைகள் காரணமாக பயணம் செய்ய முடியாத சூழ்நிலைகள் எழலாம். இதுநாள் வரை இருந்துக்கிட்டிருந்த பயங்கள் மறைந்து,  மனோதைரியம் அதிகரிக்கும்.

துலாம்

நல்லவங்க ஹெல்ப் கிடைப்பதன் காரணமாக எதையும் எதிர்த்து வெற்றி பெறுவீங்க. தொழிலில் மற்றும் எதிர்பார்த்த தனவரவு ஏற்பட, சிறிது தாமதம் ஆகும். எனினும் சமாளிச்சுடுவீங்க. அரசுக் கடன்கள் அல்லது வங்கிக்கடன் கிடைக்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். ஆனால், பாராட்டுகள் கிடைக்கும்.  சிலருக்கு, வாகன வசதிகள் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும் அரியர்ஸ்ஸை ஊதித்தள்ளிடுவீங்க. அதன் காரணமாக படிப்பில் ஆர்வம் அதிகமாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்., குடும்பத்துடன், நல்லுணவு உண்டு சந்தோஷமாப் பொழுதைக் கழிப்பீங்க. நல்லவங்க சேர்க்கையால் எல்லாம் நல்ல விதமாகவே  நடக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் தடைக்கு பின் முன்னேற்றம் உண்டு. வயிறு சம்பந்தமான சின்ன ஆரோக்கய டென்ஷன்ஸ் வந்தாலும் வந்த வேகத்துலயே அவை விலகும்.

விருச்சிகம்

கணவர் அல்லது மனைவிக்கு வாழ்க்கைல பெரிய முன்னேற்றம் ஏற்படும். சம்பளம் அல்லது பதவி உயர்வு உண்டு., சாதுக்கள் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என உங்களோட பொழுது பக்தி மயமாகக் கழியும். வாழ்க்கைல நீங்க எதிர்பார்த்தபடி முன்னேற்றங்களும், சுகானுபவங்களும் இருக்கும். நினைத்தது எதுவும் சற்று வேகக் குறைவாகவே நடந்தேறும். மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களின் உழைப்பால், கௌரவத்தையும், புகழையும் அடைவாங்க. இந்த வாரம் நெருங்கிய உறவுகளை அனுசரித்துப் போவீங்க. அதனால அவர்களின் ஹெல்ப்ஸ் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  கஜானாவும் பணத்தால் நிரம்பும்.

தனுசு

ஆன்மீக வாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.  சுப வார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீங்க.  விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. ஆனா அது டென்ஷன்களற்ற செலவாவே இருக்கும். இந்த வாரம் குடும்பத்துல யாருக்கேனும் திருமண பந்தம் அல்லது புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும். ஆனாலும் அது எதிர்பார்த்த ஒன்றாவே இருக்கும். இந்த வாரம் பெரியவர்கள் ஆசிகள், ஆதரவு ஆகியவை எப்போதும் இருக்கும். கற்பனை வளம் பெருகும். சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வாங்க. பக்தி மார்க்கத்தில் மனம் செல்வதால் உற்சாகம் பெருகும்.

மகரம்

ஆபரண சேர்க்கை உண்டு. குடும்பத்துல பிரிந்த உறவுகள் ஒன்று சேருவதால் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலத் தவறுகளுக்கு ஒருத்தருக்கொருத்தர் மன்னிப்புக் கேட்டுச் சூழலைக் கலகலப்பா ஆக்குவீங்க. கல்வியில் சில  நன்மைங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். சிலர், பழைய நண்பர்களையோ, முன்பு பக்கத்தில் குடியிருந்தவங்களையோ, பலநாள் சந்திக்காத ரிலேடிவ்ஸையோ சந்திக்க நேரலாம். கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி தாங்கமுடியாது. உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு குறையும். தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தி திறன் அதிகரித்து இலாபம் பெருகும். குழந்தைகளின் அன்பைப் பெறுவீங்க. எந்த விஷயத்தில் தடை தாமதம் உள்ளதோ அது சிறப்பாய் முடியப்போகுது குடும்பத்துல ஒற்றுமைக்குப் பாடுபடுவீங்க. வெற்றியடைவீங்க. நிறைய அலைச்சல் உண்டு.

கும்பம்

குடும்பத்தோடு புண்ணிய ஸ்தல  யாத்திரைகள் சென்று மகிழ்வீங்க. அம்மாவுக்கு நன்மை நிகழும். வாகனம் வாங்குவீங்க. இந்த வாரம் மனசுக்குப் பிரியமானவங்களோட நட்பு ஏற்படும். அல்லது அப்படிப்பட்ட ஒருத்தரைப் பல நாட்கள் சந்திக்காம இருந்து இந்த வாரம் மீட் செய்வீங்க. இனிய பயணங்களால் இன்புறுவீங்க. வீட்டில் அனைவருடனும் பொழுதை கழிப்பீங்க. குடும்பத்துல மன மகிழ்ச்சி நிலவும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். வாழ்க்கையில் சுகானுபவங்கள், கௌரவத்தையும் அடைவீங்க. தொலைதூரப் பயணங்களின் நன்மை ஏற்படும். ஆனாலும் தேவையே இல்லாத பயம் ஒண்ணு மனசை அரிச்சுக்கிட்டிருக்கும். அது அனேகமா கற்பனை பயமாக்கூட இருக்கும். அடச்சே இதுக்கா இவ்ளோ பயந்தேன் என்ற நிம்மதி இந்த வாரமே ஏற்படும். ஆபீசில் குட் நியூஸ் உண்டு. குடும்பத்துல யாராவது ஃபாரின் போவாங்க. சருமத்தின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வீட்டிலேயே இருக்க நேரும். சிலருக்கு, வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற தாமதங்கள் ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்காமல் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீங்க.  திடீரென ஏற்படும். பயணங்களால் தொல்லைகள் எழும். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும்.  துவக்கத்தில் கையில் எடுக்கும் காரியங்களில் எல்லாம் தடை, தாமதங்கள் ஏற்படும். பின்னர், வேலைகளை முடிக்க தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தனவரவுகள் குறையும். நல்ல வகையான உணவு வகைகளை உட்கொள்வாங்க. துணிமணி வாங்குவீங்க. வாசனைப் பொருட்கள் வாங்கப்போறீங்க. வெளிநாட்டு ஃப்ரெண்ட்ஸ் அன்பளிப்புக்களைக் கொண்டு வந்து குடுப்பாங்க. நீங்களே ஃபாரின் போகவும் சான்ஸ் உள்ளது. அமைதியை விரும்புவீங்க