மேஷம்

ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் லாபகரமா நடக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறைஞ்சு பொருள் வரவு அதிகரிக்கும். பெரிய மனுஷங்களோட ஆதரவால புதிய முயற்சிங்களைத் தொடங்குவீங்க. லாட்டரி பந்தயம் போன்றவை ஒங்களோட வருமானத்தை பெருக்கும். மனைவி ஆசைப்பட்டு கேட்ட பொருளை வாங்கிக் குடுப்பீங்க. புதுசா பிசினஸ் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். மன நிறைவு உண்டாகும் வாரம். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி ஆகும். சேமிப்பு இன்கிரீஸ் ஆகும். குடும்பத்துல இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்துல சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீங்க. பிரபலமான மனிதர்களின் சந்திப்பு ஒங்களோட புகழை அதிகரிக்கும்.

ரிஷபம்

வியாபாரிகளுக்கு வருமானம் ரெண்டு பங்கா இருக்கும். எடுத்துக்கிட்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்துல எதிர்பார்த்த ஹெல்ப்பெல்லாம் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகளை திடீர் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீங்க. இல்லத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கி மன நிறைவடைவீங்க. ஆரோக்கியத்தில் முன்பு ஏற்பட்டிருந்த பாதிப்பு விலகும். சிறிய அளவிலான மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆன்லைன் பிசினஸ் மூலம் கெடைக்கும் வருமானம் ஒங்களையே பிரமிக்க வைக்கும். உற்சாகத்துடன் வேலை பார்ப்பீங்க. சிலர் வேலை மாறுதலால் வேற இடத்திற்கு செல்ல வேண்டி வரும். கடினமா உழைச்சாலும் மேலதிகாரிகாரிங்களோட கவனத்தை கவர்ந்து ஜெயிச்சுடுவீங்க என்பதால சிரமம் மறைஞ்சே போகும். கணவருக்கு/ மனைவிக்கு எதை எடுத்தாலும் தாமதமாகவே பலன் இருக்கும். வெளிநாடு போறதுக்காக நீங்க எடுத்துக்கிட்ட முயற்சி வெற்றியைத் தரும்.

மிதுனம்

எந்தெந்த விஷயத்தையெல்லாம் எப்பிடி எப்பிடிச் செய்து முடிச்சு வெற்றி பெற வேண்டும் என்று மனசுக்குள்ள போடும் திட்டங்களை ரகசியமாக வெச்சுக்கிட்டுக் காரியத்தை சாதிப்பீங்க. இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திரமாய்ச் செயல்படணும்னு எண்ணம் உண்டாகும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். பிசினஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கறவங்க தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். இரும்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்க. புதுசா அறிமுகமான நபர்களின் பழக்கங்களை நெருக்கமாக வைச்சுக்காதீங்க. எஸ்பெஷலி அவங்க எதிர்பாலினத்தவரா இருந்தா ரெண்டு மடங்கு கவனம்  தேவைங்க. நாடகம், சினிமா போன்ற துறைகளில் வேலை பார்ப்பவர்கள் பிரகாசமான பயனை அடைவாங்க. தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்க. அதற்கான பரிசு லாபமாக கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 10 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும், செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

போட்டிகள் விலகும். அனுபவசாலிங்களோட கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்யோகத்துல இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை தாமதம் இன்றி கட்டுவது நல்லது. வேலை காரணமாக அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வீட்டுல உள்ளவங்க ஒங்களோட மனம் கோணாம நடந்துக்குவாங்க. புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம் கமிஷன் வியாபாரத்துல எதிர்பார்த்த பலன் கெடைக்கும். வியாபாரத்தில் இருந்துக்கிட்டிருந்த சிக்கல்கள் மறையும். எப்படியாவது உங்களை கவிழ்க்க வேண்டும் என்று எதிரிகள் செய்த முயற்சிகள் வெற்றி பெறாது. கவலை  வேணாம். ஹெல்த் விஷயத்துல மட்டும் எச்சரிக்கையா இருங்க.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 12 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும், செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் காத்து வெல்வீங்க. வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீங்க. பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களைக் கூட கவனமாக செய்வீங்க என்பதால்  வெற்றி உறுதி. பெரியோர்களின் ஆதரவால் சில நல்ல காரியங்கள் நடக்கும். அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவாங்க. வழக்கறிஞர்கள் வாதத் திறமையால வெற்றி பெறுவாங்க. சிறு வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறுவாங்க. ஆடை ஆபரண வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். தொழிலில் துணிந்து முதலீடு செய்வீங்க. வெளியூர்ப் பயணங்கள் மூலமாக நன்மையும் லாபமும் சந்தோஷமும் வெற்றியும் கெடைக்கும். குடும்பத்துல  திருமணம்நிச்சயமாகக் கூடப் பயணங்கள் பயன்பட சான்ஸ் இருக்குங்க.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 14 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும், செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துகளுக்கு மாற்று கருத்துகளை கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். திறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதையும் பெறுவீங்க. நீங்க நேரத்தின் மதிப்பை உணர்ந்து செயல்பட்டு வெற்றி பெறுவீங்க. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆன்லைன் வர்த்தகங்கள் அவ்வளவு நன்மையை தராது. அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கையாக வேலை பார்க்க வேண்டும். வரவுக்கு மேல் செலவு இருந்தாலும்கூட அவ்வளவாய் பாதிப்பு இருக்காது. குடும்பத்துல பொறுமை அவசியம். எந்தக் காரணத்தை கொண்டும் யாரையும் குத்தி காண்பிக்காதீங்க.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 16 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும், செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். பிசினஸ், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் ஒங்களோட உற்சாகத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். பண விவகாரங்களில் நன்மை உண்டு. தந்தையின் ஆரோக்யத்தில்  கவனமாக இருந்து நன்மை காண்பீங்க. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்திற்கு குறை இருக்காது. பிசினஸ் தொடர்பாக எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீங்க. ஒங்களோட புதுப்புது ஐடியாஸ் வியாபாரத்துலயும் நீங்க ஒர்க் பண்ற ஆஃபீஸ்லயும் ரொம்பவே உதவியாக இருக்கும். சின்ன பிரச்சனையை கூட பெரிதாக எண்ணி கவலைப்படுவீங்க. அதனால் தூக்கம் கெடும். தைரியமாக எந்த செயலில் ஈடுபடுங்கள். பயணங்களின் போது பொருட்களை பத்திரமாக வெச்சுக்குங்க.

விருச்சிகம்

உத்யோகத்துல இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருந்தாலும் எதிர்பாராத பாராட்டும், வருமானமும், அவார்ட் போன்றவையும் கிடைக்கும்.  நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்துல மன நிறைவு ஏற்படும் வகையில் விஷயங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காகப் பாடுபடுவது வீண் போகாது. விருந்தினர் வருகை இருக்கும். திடீர் லக் உங்களைத் திக்குமுக்காடச்செய்யும். எந்த லாபமும் கொங்சம் ஸ்லோவாத்தான் இருக்கும். வர வேண்டிய கடன் அல்லது  வாடகை பாக்கி கைக்கு வரும். திருமண விழாவையோ அல்லது குழந்தை பாக்கியமோ எதிர்பார்த்தவர்களுக்கு குட்நியூஸ் உண்டு. பங்குவர்த்தகத்தில் உங்க கணிப்புகள் சரியாக அமையும். திடீர்னு உங்க பாஸ் ஒங்களைக் கூப்பிட்டுப் பதவியும் சம்பளமும் உயர்வதைத் தெரிவிப்பாரு.

தனுசு

யாரும், எந்த விஷயத்தையும் பகிரும்போது உடனடியாக ரியாக்ட் செய்யாதீங்க. பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெற்றாலும் இறுதியில் வெற்றி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மேலதிகாரிகளின் அன்பை பெறுவது சுலபம்னு சூட்சுமம் பிடிபடும். ஆன்லைன் வர்த்தகங்களில் கவனமாக ஈடுபடுங்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். டாடி குட் நியூஸ் கொண்டு வருவார். தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடன் தேவையில்லாத கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டால் சற்றுத் தணிந்து போவது நல்லது. பொறுமையாக எந்த ஒரு விஷயத்தையும் கையாண்டு வெற்றி பெறுவீங்க.

மகரம்

விருந்தினர் வருகையால் நன்மையும் குதூகலமும் இருக்கும். உறவினர், நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த திடீர்க் கருத்து வேற்றுமை நீங்கும். நிதி விஷயங்களைத் தீர்மானிக்கையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பீங்க. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்பட்டு வெற்றியடைவீங்க. முயற்சிகள் நன்மை தரும். குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்துல கணிசமான லாபம் கிடைக்கும்.  பிசினஸ் விஷயத்துல.. உத்யோகத்துல நீங்க எதிர்பார்த்த முன்னேற்றம் கொஞ்சம் ஸ்லோவாத்தாங்க இருக்கும். மருந்து வர்த்தகர்கள், மருத்துவர்கள் அதிக பலனை அடைவாங்க.  முன்கோபத்தை விலக்குவது நல்லது. அப்பிடி செய்தால் நல்ல நட்புகளை இழக்காம தக்க வைச்சுப்பீங்க. தகுந்த சமயத்தில் உறவினர்கள் உதவிகரமாக நிற்பாங்க.

கும்பம்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணுவீங்க.  அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டியிருந்த நிலை மாறி அனைத்தும் சுலபமாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. முயற்சிகளால் முன்னேற்றத்தைக் காணக்கூடிய வாரம். கணவரின் / மனைவியின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும், அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழப்பங்கள் மன அழுத்தம் எல்லாமே மேஜிக் போட்ட மாதிரி நீங்கும் பூர்வீக / பிதுரார்ஜித சொத்து சம்பந்தமான விஷயங்கள் நல்ல படியா முடியும். அப்பா வழித் தாத்தா பாட்டியிடமிருந்து உதவிகளும் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும்.  குழந்தைங்களுக்கு ஹாப்பி நியூஸ் உண்டு. மனைவி அல்லது கணவருக்கு முன்னேற்றம் உண்டு.

மீனம்

சகோதரிகள் பக்கபலமாக இருப்பாங்க. சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான நிலை ஏற்படும். வீடு, நிலம் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. அதற்கான லோன் கிடைக்கும். வாகனம் மற்றும் வாய்ப்புகளும் உண்டு. உத்யோகத்துல இயல்பான நிலை தோன்றும். ஒரு சிலருக்கு வேலை தொடர்பாக அழுத்தங்கள் குறைந்து ரிலாக்ஸ் ஆவீங்க.  தொழிலில் / வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். எதைச் செய்தாலும் அலட்சியம் இல்லாமல் கவனத்துடன் மிக நேர்த்தியாக செய்வீங்க. பண விரயம் ஏற்படலாம். வீட்டில் உள்ள பெண்கள் ஏதாவது செலவு வைத்துக் கொண்டே இருப்பாங்க. ஆனால் எல்லாம் சந்தோஷம் தரும்… உற்சாகம் தரும் செலவுங்கதான். சந்திக்க வேண்டிய நபரை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியூர் பயணத்தை மேற்கொள்ளுங்கள். உத்யோகத்துல நல்ல மாற்றங்கள் வரும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாங்க.