சென்னை:

ரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக மாறியது என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், .அடுத்த 24மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

 

இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக நேற்று முன்தினம் வானிலை மையம் கூறியிருந்த நிலையில், காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறைந்து வருவதாக நேற்று அறிவித்தது.

இந்நிலையில், அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தற்போது காற்றழுத்த பகுதியாக மாறி உள்ளது என்றும்…  தற்போது லட்சத்தீவு,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தொடர்ந்து நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக  .அடுத்த 24மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்  கூறி உள்ளார்.