சென்னை:
தூத்துக்குடி நிர்வாகிகள் வீட்டு நிகழ்ச்சியில் ரஜினியின் வீடியோ பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில்ல ரஜினி பேசுகையில், ‘‘ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

அரசியல் என்பது பொதுநலம். சுயநலம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டு வருவோம். குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வாருங்கள் என நான் சொல்லவில்லை. அவர்களையும் கவனியுங்கள் என்று தான் கூறுகிறேன்’’என்றார்.
Patrikai.com official YouTube Channel