அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

Must read

சென்னை:
க்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை மஞ்சள் பையில் வைத்து, முழு கரும்பு ஒன்றும் சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பாக அனைத்து ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் கடந்த திங்கள் முதல் முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article