சென்னை: கல்விக்கடன் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதுமுதல் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி,  கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதி உதவி மற்றும் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், பெண்கள் இலவச பேருந்து பயணம் உள்பட பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதுபோல திமுக ஆட்சியில் கல்விக் கடன்களை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் மு க ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அதில், 30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் மதுரையில் கல்விக்கடன் மேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘‘மதுரை கல்வியில் சங்க காலத்தில் இருந்தே சிறந்து விளங்குகிறது என்று பெருமிதப்படுத்தியவர், மாணவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு கல்வி தான்.  1987ல் ஒரு காரணத்தால் பணம் புரட்ட முடியாமல் வங்கியில்  ரூ.1 லட்சம் கடன் பெற்று அமெரிக்கா சென்றவன் நான். இதுவரை பல நாடுகளில் 15 வங்கிகளில் பணியாற்றி இருக்கிறேன்.  அங்கு பல கோடி சம்பாதித்து, பல கோடி வரி கட்டி இருக்கிறேன் என்று சுயபுராணம் பாடினர்.

அப்போது செய்தியாளர்கள், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கல்வி கடன்களை எப்போது ரத்து செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்வது குறித்து முதல்வர் பரிந்துரையின் பேரில் ஆய்வு நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கை: மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, இலவச ரயில் பயணம்….