சென்னை,

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது என நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து 6 மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் இன்றுவரை பணிகள் நடந்தபாடில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியே முடி வடைந்துவிட்டது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், திமுக வழக்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களை நீதி மன்றத்தில்  கூறி தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

அதைத்தொடர்ந்து பிப்ரவரி 21ந்தேதி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில்,  தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ந் தேதிக்குள் தொடங்கி மே 14க்குள்  இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் அதற்கும், தமிழக தேர்தல் ஆணையம், கத்தில் ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தெரிவித்தது.

இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என்று கூறியிருக்கிறார்.