சென்னை: சனாத்தை ஒழிப்பேன் என்று மீண்டும் பேசிய உதயநிதிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், நாங்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல! உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதங்களிலேயேயும் சாதிய வேறுபாடுகள் உள்ள நிலையில், இந்து மதத்தை மட்டும் குறிவைத்து திமுகவினர் பேசி வருகின்றனர். இந்து மதத்துக்கு எதிராக பேசியும், கோவில்களை இடித்தும், தேவையற்ற வகையில் இந்து மக்களை இழிவாகவும் பேசி வருகின்றனர். இது இந்து மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்த நிலையில் மீண்டும் அவர் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் பேசிய இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளத.

இத்ந நிலையில்,  விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அவர், எதிர்ப்பிலேயே வளர்ந்ததுதான் திராவிட இயக்கம்; இதுபோன்ற விமர்சனங்களுக்கு நான் அஞ்சமாட்டேன் என்று கூறி உள்ளார்.

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது யாரும் கோயிலுக்குப் போகக் கூடாது என்பதல்ல; கோயிலிலும் சமூகத்திலும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே அதன் பொருள். மேல் சாதி – கீழ் சாதி என மக்களைப் பிரிக்கும் பாகுபாடுகளை ஒழிப்பதையே தான் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையிலேயே தான் பேசியதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார். நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆனால் சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவரின் வரிகளே தனது அரசியல் மற்றும் கொள்கை வழி என உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் : உச்சநீதிமன்றம்  அறிவுரை

[youtube-feed feed=1]