கோவை: தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான கிளப் உரிமைகளையும் ரத்து செய்ய வேண்டும் பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுதத்தி உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் விஜய், டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவை வரவேற்றவர், அது மட்டுமே போதாது”, மதுபான கிளப்புகளையும் ரத்து செய்ய வேண்டும் வலியுறுததினார்.
மாநிலத்தில், மதுவிலக்கு என்பது முழுமையாக இருக்க வேண்டுமே தவிர, ஒருபுறம் கடைகளை மூடிவிட்டு மறுபுறம் உயர்தர உணவகங்கள் மற்றும் கிளப்களில் மது விநியோகத்தை அனுமதிப்பது சமூக சமத்துவத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டியவர், , FL2 மற்றும் FL3 போன்ற மதுபான உரிமங்கள் மூலம் தனியார் விடுதிகளில் மது விற்பனை தடையின்றி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
“சாதாரண மக்கள் குடிக்கும் கடையை மூடிவிட்டு, பணம் படைத்தவர்கள் குடிக்கும் இடங்களைத் திறந்து வைப்பது உண்மையான மதுவிலக்கு ஆகாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள சூழலில், மதுவிலக்கு கொள்கையில் தவெக அரசு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் வருவாயை நம்பி மாநிலத்தின் பொருளாதாரம் இருக்கக் கூடாது என்றும், மாற்று வருவாய் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று கூறியவர்ல, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் நலன் கருதி மதுவிலக்கு விவகாரத்தில் பாரபட்சமின்றிச் செயல்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வானதி சீனிவாசனின் இந்தத் திடீர் கோரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]