பெங்களூர்:

நாளை கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா நாளை மாலை 4 மணிக்கு சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.‘

இதன் காரணமாக எடியூரப்பா தனது பெரும்பான்மையை நாளை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் என்றார்.  உச்சநீதி மன்ற உத்தரவு குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்துவேன். அதைத்தொடர்ந்து நாளை நம்பிக்கை வாக்கெடுப்ப நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என்றும் கூறினார்.