டெல்லி: இஸ்ரேல் ஈரானுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரோல் மற்றும்  ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரோல் காஸா போரைத் தொடர்ந்து, காஸாவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஈரான்மீதும்   இஸ்ரேல் தாக்குல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இருந்தால், இஸ்ரேல், ஈரானின் அணுஆயுத தளவாட பொருட்கள் உள்ள பகுதியில் தாக்குதலை நடத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.  அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இன்று 5-வது நாளாக  இரு நாடுகளும், போரை தவிர்க்க முடியாது என கூறி தாக்குல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், போர் சூழலில் சிக்கி உள்ள இஸ்ரேல் மற்றும்  ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ இந்திய வெளியுறவுத்துறை உதவி   24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களையும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்தியர்கள் +98 9128109115, +98 9128109109 என்ற எண்களில் உதவிக்கு அழைக்கலாம்.

+98 901044557, +98 9015993320, +91 8086871709 ஆகிய வாட்ஸ்அப் எண்களில் தெரிவிக்கலாம்.

உதவிக்கு பந்தர் அப்பாஸ் +98 9177699036, சஹேதன் +98 9396356649 தொடர்பு கொள்ளலாம்.

cons.tehran@mea.gov.in என்ற மின் அஞ்சலிலும் தெரிவிக்கலாம்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.