ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.

அதேபோல், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை வெளியேற்றும் திட்டத்திலும் இந்தியா செயல்பட்டு வருகிறது.

மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கொண்ட முதல் தொகுதி, ஈரானில் இருந்து ஆர்மீனியா வழியாக வெளியேற்றப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஈரானில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆர்மீனிய வெளியுறவு அமைச்சர் அரரத் மிர்சோயனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்தியர்களை வெளியேற்றும் பணி தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

ஈரான் தலைநகர் தெஹரானை விட்டு உடனடியாக அனைவரும் வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு…